சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை சட்டவிரோதமானது என குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதற்கு எதிராக தடைகளை விதித்துள்ளார்.

அமெரிக்காவையும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலையும் இலக்குவைக்கும் சட்டவிரோத ஆதாரமற்ற நடவடிக்கைகளில் சர்வதேச குற்றவியல்நீதிமன்றம் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் அதற்கு எதிராக தடைகளை விதித்துள்ளார்.

அமெரிக்க பிரஜைகள் மற்றும் அதன் சகாக்களை விசாரணை செய்வதற்கு உதவிய தனிநபர்கள் மற்றும் அதன் சகாக்கள் மீது நிதி விசா கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தருணத்திலேயே டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த நவம்பரில் காசாவில் மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்திருந்தது.

இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. ஹமாஸ் தளபதிக்கு எதிராகவும் சர்வதேச நீதிமன்றம் தடைகளை பிறப்பித்திருந்தது.

Share.
Leave A Reply