தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் விநியோக துண்டிப்புக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மின் விநியோக துண்டிக்கப்படும் நேர அட்டவணை கீழே..

நேர அட்டவணை

Share.
Leave A Reply