உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை (09) அன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் மகா கும்பமேளாவுக்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்த நிலையில் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 200-300 கிலோ மீற்றர் தூரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசல் வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட நெரிசல் காரணமாக, பல மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பயணிகள் பல மணிநேரம் சாலைகளில் சிக்கித் தவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான போட்டோக்களை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், இதை “உலகின் மிகப் பெரிய டிராபிக் நெரிசல்” என்று குறிப்பிடுகிறார்கள்.

மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்துக்களின் புனித நிகழ்வாகும். இந்தாண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply