பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புதன்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தன்று, பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 12 சிறுவர்கள் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், நீரில் மூழ்கிய 11 சிறுவர்களையும் காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஒரு சிறுவன் மாத்திரம் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில் பாணந்துறை தெற்கு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பாணந்துறை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவனே காணமல் போயுள்ளார்.

காப்பாற்றப்பட்ட சிறுவர்கள் பாணந்துறை மற்றும் பாணமுர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 12 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply