அநுராதபுரத்தில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிச்செல்ல முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பொலிஸ் அதிகாரி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடமலுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்ரீ மகா போதிக்கு செல்லும் பாதையில் பணியில் ஈடுபட்டிருந்த போது யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, சந்தேக நபரை உடனடியாக கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் சங்கமித்த மாவத்தையில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அநுராதபுரம் சங்கமித்த மாவத்தையில் வசிப்பவர் எனவும், குற்றவியல் அச்சுறுத்தல், பொலிஸ் உத்தியோகத்தருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply