பெரும் திமிங்கிலமொன்றின்வாயிலிருந்து தப்பிவந்த அனுபவத்தை சிலியை சேர்ந்த 24 வயது நபர் விபரித்துள்ளார்.
இந்த சம்பவம் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
24 வயது ஏட்ரியன் சிமன்கஸ் தனது தந்தையுடன் பட்டகோனியன் நகரமான புண்டா அரினாசில் படகை செலுத்திக்கொண்டிருந்தவேளை கடலில் இருந்து திடீரென வெளியே வந்து அவரையும் அவரது பனிப்படகையும் விழுங்கியுள்ளது.
சிமன்கஸின் தந்தை இந்த சம்பவத்தை அதிர்ச்சியுடன் வீடியோவில் படமாக்கியுள்ளார்.
அவர் அலறுவதை வீடியோ காண்பித்துள்ளது.
அதற்கு ஒரு சில நிமிடங்களின் பின்னர் சிமன்கஸ் அதிர்ச்சியடைந்தவராக நீரிற்கு மேல் தோன்றி திமிங்கிலம் என்னை விழுங்கிவிட்டது என நினைத்தேன் என தெரிவிப்பதை வீடியோவில் காணமுடிகின்றது.
இந்த திகில்நிறைந்த தருணங்கள்குறித்து பின்னர் கருத்து தெரிவித்துள்ள ஏட்ரியன் சிமன்கஸ் நான் திமிங்கிலம் என்னை ஏற்கனவே விழுங்கிவிட்டது என நினைத்தேன்,அது ஆளை கொல்லும் திமிங்கிலம் என நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.
ஓர்கஸ் எனப்படும் மிகவும் ஆபத்தான திமிங்கிலம் குறித்து நானும் அப்பாவும் உரையாடிக்கொண்டிருந்தோம்,ஆகவே அது எனது மனதிலிருந்தது என தெரிவித்துள்ள அவர் திமிங்கிலத்தின் வாயிலிருந்து வெளியே வந்ததும், நான் என்ன வகையான பொருள் என பார்ப்பதற்காக அல்லது எதையாவது தெரிவிப்பதற்காக அது என்னை நெருங்கியிருக்கலாம் என நினைத்தேன் என குறிப்பி;ட்டுள்ளார்.
நான் திரும்பிபார்த்தபோது மகனை காணவில்லை,படகிலும் காணவில்லை ஆச்சரியமடைந்தேன் கலக்கமடைந்தேன் என தந்தை தெரிவித்துள்ளார்.
மூன்று செகன்ட்கள் அவர் காணாமல் போனார் பின்னர் அவர் நீரிலிருந்து மேலே வருவதையும் படகு வருவதையும் பார்த்தேன்,அதன் பின்னரே மனதில் நிம்மதியேற்பட்டது என தந்தை தெரிவித்துள்ளார்.
கடும் குளிரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திமிங்கிலங்களால் விழுங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2021ம் ஆண்டு அமெரிக்காவின் மாசசுசெட்சில் மைக்கல் பக்கர்ட் என்பவர் 40 செகன்ட்கள் திமிங்கிலத்தின் வாய்க்குள் சென்றுவந்தார்.