வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
“அமெரிக்க தூதுக்குழுவினர் புதன்கிழமை (பிப்ரவரி 12) தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணாந்துவை தொழில் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
நாட்டின் மனிதவள மேம்பாட்டு செயல்முறைக்கு திறம்பட பங்களிக்க தேவையான பயிற்சி நடவடிக்கைகளுக்கும் தனது பங்களிப்பை வழங்க முடியும் என்பதுடன் இந்த நாட்டின் அபிவிருத்தி செயல்பாட்டுக்கு அமெரிக்க மனித வளத்தை விணைத்திறன் மிக்கதாக தேவையான பயிற்சி நடவடிக்கைகளுக்கு பங்களிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் திறன் அமெரிக்க வர்த்தகர்களுக்கு இருப்பதாகவும் அது இலங்கையின் அபிவிருத்தியின் முன்னுரிமை ஒழுங்கின் படி செய்யப்பட வேண்டும்.
வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவோம்.
வரிகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக எடுக்கப்படும் கொள்கைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தயாரிப்பது முக்கியமாகும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்புறவை விருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் இதற்காக முடியுமான ஒத்துழைப்பை வழங்குவதாக இதன்போது அமைச்சர் தெரிவித்தார்”, என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.