“லிட்டில் ஹார்ட்ஸ்” என்ற போலி கணக்கைத் திறந்து பரிசுத் தொகை தருவதாகக் கூறி இணையதளம் மூலம் 29 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறை பகுதியிலும் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்ப பிரதேசத்திலும் சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நொச்சியாகம, பலாவி பிரதேசங்களைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.