எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு தீ பரவியுள்ளது.
இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார தெரிவித்தார்.
குறித்த வனப்பகுதியில் தனிநபரொருவர் அல்லது குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.