வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
பெப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தது.
இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதியதுடன் வீதிகளையும் அசுத்தப்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிந்தது.