1974 இற்கு பின்னைய போராட்டங்கள்

தமிழ் மக்களை அடக்கியாளும் அராஜக நடவடிக்கைகளை 1970 ஆம் ஆண்டுக்குப்பின் வந்த சிங்கள அரசாங்கங்கள் மிக தீவிரமாக சகல வழிகளிலும் மேற்கொண்டன. இலங்கையின் பிரதான கட்சிகளாகவும் மூத்த கட்சிகளாகவும், விளங்கிய ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இவற்றுடன் ஒட்டு அரசாங்கங்களை நடத்திய டாக்டர் என்.எம். பெரேரா தலைமையிலான சமசமாஜக் கட்சியாக இருக்கலாம், அல்லது கொம்யூனிசக் கட்சியாக இருக்கலாம் தமிழ் மக்களின் கோரிக்கைகளையோ அபிலாஷைகளையோ, ஏற்றுக் கொண்டடோ அன்றி அது பற்றி முக்கியம் கொடுத்தோ நடந்து கொண்டதில்லை.

இந்த அரசாங்கங்களின் மறுதலிப்பான கொள்கைகள் காரணமாகவும், சிங்கள இனவாத அரசாங்கங்களின் மிக மோசமான நடவடிக்கைகள் காரணமாகவும், தமிழ் இளைஞர்களை ஆயுதவழி நம்பிக்கைக்கு இட்டுச் செல்லும் காரணிகளாக பின்வரும் சம்பவங்கள் அமைந்தன.

பல்கலைக்கழக தரப்படுத்தல்,

தமிழாராட்சி மகாநாட்டுப் படுகொலைகள்,

1977 அரசியல் மாற்றம்,

ஜயவர்தனாவின் ‘போர் என்றால் போர்’

1977 ஆவணிக் கலவரம்

பயங்கரவாத தடைச்சட்டம்,

மாவட்ட சபைகள் ஆட்சி முறைத் தோல்வி

வட்டுக்கோட்டை தீர்மானம். போன்ற அரசாங்கத்தின் எதிர்நிலை நடவடிக்கைகள் தமிழ் இளைஞர்களை ஆயுதப்போருக்கான நம்பிக்கைகளை விதைத்தது.

பல்கலைக்கழக தரப்படுத்தல்

மேற்கூறப்பட்ட விடயங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய காரணியாக பேசப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான கூட்டு அரசாங்கத்தில் தமிழ் மாணவர்களை மிக மோசமான பாதித்த திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக தரப்படுத்தல் முறையாகும்.

1942 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் 1957 வரை ஆங்கிலம் உயர்கல்வி போதனா மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. மாணவர்கள் திறமையின் அடிப்படையில் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

1957 ஆம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்காவினால் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணமாக சிங்களமும், தமிழும் போதனா மொழி ஆக்கப்பட்டது. உயர்தரப் பரீட்சை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்பட்டது. இதனால் கூடிய புள்ளி பெறுவோர் திறமையின் அடிப்படையில் பல்கலைக்கழக தெரிவாகி வந்தார்கள்.

இந்த முறை காரணமாக தமிழ் மாணவர்கள் அதிக தொகையில் தெரிவாகி பல்கலைக்கழகத்துக்கு சென்றனர். உதாரணமாக 1964 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, விஞ்ஞானம், பொறியியல்துறைக்கு 37.2 சதவீதமும், வைத்தியத்துறைக்கு 40.5 சதவீதமும், விவசாயம், மிருக வைத்தியம் 41.9 சதவீதமும், தமிழ் மாணவர்கள் தெரிவாகிவந்தார்கள். இந்த முறையின் கீழ யாழ் குடாநாட்டு மாணவர்களே அதிக வாய்ப்பைப் பெற்றனர்.

காரணம், அன்னியர் ஆட்சியில் யாழ் குடாநாட்டில் சிறந்த பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இதனால் ஆய்வு கூட வசதி, ஆசிரிய ஆளணி, பௌதீக வளம், பயற்சிக் கல்லூரிகள் போன்ற பல்வேறு காரணிகள் தமிழ் மாணவர்களின் உயர்கல்விக்கு சாதகமாக இருந்தது என சிங்கள புத்திஜீவிகளால் கூறப்பட்டுவந்தது.

இது மாத்திரமன்றி, தமிழ் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவோர் அதிக புள்ளிகளை யாழ் குடாநாட்டு மாணவர்களுக்கு வழங்குகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது. தமிழ்; மாணவர்களுக்கு கற்குமிடவசதிகள் அதிகமாக காணப்படுவதால் சிங்கள மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிப்படுத்த தரப்படுத்தல் கொண்டு வரப்பட வேண்டுமென்ற வாதம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. இதன்காரணமாக போதனா மொழிவழி தரப்படுத்தல் 1973 ஆண்டு கல்வி அமைச்சால் கொண்டு வரப்பட்டது.

போதனா மொழி தரப்படுத்தல் தமிழ் மாணவர்களை எவ்வாறு பாதித்தது என்பதை சிங்கள வரலாற்று ஆசரியர் கே.எம்.டி. சில்வா ஆராய்ந்தார். இந்த தரப்படுத்தல் முறையால் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி திட்டமிட்டு குறைக்கப்பட்டதாக சில்வா தெரிவித்தார்.

இது யாழ் குடா மாணவர்களை சினம் அடைய வைத்தது. தரப்படுத்தலை எதிர்க்குமாறு தமிழரசுக்கட்சியினர் வற்புறுத்தினர். இதன் இன்னொரு எதிர்ப்பாக 1973 இல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மாணவர் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. சத்தியசீலன் சிவகுமாரன், அரியரத்தினம், முத்துக்குமாரசுவாமி போன்றோர் தீவிரமாக பல்கலைக்கழக தரப்படுத்தலுக்கு எதிராக போராட முற்பட்டனர். இது தமிழீழப் போராட்டத்துக்கான இன்னொரு வழியை திறந்து விட்டது.

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் மகாநாடுகள் என்பன தோல்வி கண்ட நிலையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான வழி முறையாக இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்வுப் பொதியாக மாவட்டசபை முறையாகும். ஒற்றை ஆட்சிக்குள் இனி தீர்வை பெறுவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்த தமிழ் மக்களை, மீண்டும் ஒரு தடவை தீர்வு என்ற பெயரில் ஏமாற்றலாமென சிங்கள தலைமைகளின் புதிய கண்டு பிடிப்புத்தான் மாவட்ட சபைகள், இந்த பொறி முறையே மாவட்ட அபிவிருத்தி சபை மீண்டும் இது பற்றி பேச வேண்டிய தேவை தமிழ் தலைமைகளுக்கு ஏற்பட்டது.

1977 ஆம் ஆண்டு ஐந்தில் மூன்று பலத்தோடு ஆட்சி அமைத்துக் கொண்ட ஜயவர்தன, தமிழர்களின் நீண்ட கால அரசியல் போராட்டத்தை தணிக்கும் வகையில் மாவட்ட அபவிருத்தி சபை என்ற ஒற்றையாட்சிக்கு உட்பட்ட பொறிமுறையொன்றை கொண்டு வருவதற்கான உத்தியாக மாவட்ட சபைகளை உருவாக்கினார்.

தமிழ் தலைமைகளின் போராட்டங்களை தணிய வைக்க எடுக்கும் முயற்சியாக 1978 ஆம் ஆண்டு மாவட்ட அமைச்சர் என்ற புதிய முறையை உருவாக்கினார் ஜயவர்தன. இப்பதவியை அவர் கூட்டணிக்கு வழங்க தயாராக இருந்தபோதும் கூட்டணி அதனை ஏற்க மறுத்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபை என்ற எண்ணக்கருவை முதல் பிரதமர் டட்லியால் உருவாக்கப்பட்ட திட்டத்தையே தமிழ் மக்களுக்கான தீர்வுப் பொதியாக கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார் ஜயவர்தன.

மாவட்ட சபைகளுக்கான சாத்தியங்களை ஆராய ஜயவர்தன 1979 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழவை நியமித்தார். இது தென்னக்கோன் ஆணைக்குழுவென அழைக்கப்பட்டது. இதில் பேராசிரியர் தென்னக்கோன், பேராசிரியர் ஏ.ஜே வில்சன், ஏ.சி.எம். அமீர், நீலன் திருச்செல்வம், பி. பண்டிதரட்ன, எம்.ஆர். தாஸிம் எல். கூரே, கணபதிப்பிள்ளை நவரட்ணராஜா, பேராசிரியர் கே.எம். டி சில்வா, மற்றும் எம்.ஏ. அஸீஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தென்னக்கோன் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க மாவட்ட சபை சட்டமாக பிரதமர் பிரேமதாசவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதை சுதந்திரக்கட்சி கடுமையாக எதிர்த்தது. இந்த மசோதா தொடர்பான விவாதத்திலிருந்து அது வெளியேறியது. அக்கட்சி மாவட்ட சபை தேர்தலை பகிஷ்கரிப்பதாக அறிவித்தது. வழமையைப்போல சிங்கள பௌத்த இனவாத சக்திகள் பல எதிர்ப்பிரச்சாரங்களை, ஆர்ப்பாட்டங்களை செய்தபோதும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் நாடு முழுவதும் 34 சபைகள் உருவாக்கப்பட்டன. இதை ஆதரித்த காரணத்தினால் கூட்டணிக்கு பலத்த எதிர்ப்பு வட கிழக்கில் கடும் எதிர்ப்புக் காட்டப்பட்டது. தளபதி அமிர்தலிங்கத்துக்கு வாலிபர்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டது. காரணம் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுக்காக போராடிவரும் நிலையில் குறைப்பரவசமான மாவட்டசபை தீர்வை அமிர்தலிங்கம் ஏற்றுக் கொள்ள முனைகிறார் என்பதாகும்.

1970 முதல் நடைமுறையிலிருந்த கிராமிய சபைகள் நகர சபைகள், மாநகர சபைகள், அனைத்தும் 1980 ஆம் ஆண்டின் மாவட்ட அபிவிருத்தி சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைகள் உப காரியாலயங்களாக ஆக்கப்பட்டு, மாவட்ட அபிவிருத்தி சபைக்குக்கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த மாவட்ட சபைகள் பாராளுமன்றத்துக்கு நிகரான அதிகாரங்கள் கொண்டதாக செயற்பட முடியுமென பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், 1987 ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டதன் காரணமாக 1988 மாவட்ட சபை முறைகள் நீக்கப்பட்டு பிரதேச சபைகள் அறி முகப்படுத்தப்பட்டது. 13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அந்த பிரதேச சபைகள் அத்தனையும் மாகாணசபை முறையின் கீழ் கொண்டு வரப்பட்டதன் காரணமாக உள்ளுராட்சி சபைகளின் அதிகார வலு மாகாணசபைகள் வசம் ஒப்டைக்கப்பட்டது.

உருவாக்கப்பட்ட மாவட்ட அபவிருத்தி சபைகள் மாவட்ட அமைச்சருக்குக் கீழ் இயங்குமென்றும் குறித்த மாவட்ட அமைச்சருக்கு உதவியாக செயலாளர்கள் நியமிக்கப்படுவர் என்றும் மாவட்ட அமைச்சரையும் செயலாளரையும் ஜனாதிபதி நியமிப்பார் என்றும் இம்மாவட்ட அமைச்சர் பாராளுமன்ற குழுவிலிருந்து நியமிக்கப்பட வேண்டும் என்ற நியதி இடப்பட்டது.

தமிழ் மக்களைப் பூர்வீகமாகக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமஷ்டித் தீர்வை அரசியல் தீர்வாக தமிழ் மக்கள் சுதந்திர காலத்திலிருந்து முன்வைத்திருந்த சூழலில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக மாவட்ட சபைகள் பேசப்பட்டமை ஜயவர்தனாவின் புத்திசாலித்தனத்தையும் அரசியல் சாணக்கியத்தையும் எடுத்துக்காட்டியது.

இன்னொரு விதத்தில் இம்மாவட்ட சபைகள் அதிகாரப் பரவலாக்கத்துக்கான பொறிமுறையாக கூறப்பட்டபோதும் இதன் முழுமையான அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில், வைத்திருக்கும் கபட நாடகம் கொண்டதாகவே அதிகாரங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த சபையில் அங்கம் வகிக்கும் மாவட்ட அமைச்சரையும் செயலாளரையும் ஜனாதிபதி நியமிப்பார் என்ற விதிகள் ஊடாக ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவர்களே நியமிக்கப்படுவர் என்ற நிலை காணப்பட்டதுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தின் பலம் மீது கட்டியெழுப்பப்பட்டதாகவே மாவட்ட அபிவிருத்தி சபைகளும் கொண்டுவரப்பட்டன.

மாவட்ட சபை முறை தோல்வி கண்ட நிலையில் 1983 ஆம் ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட இனக்கலவரங்களைத் தொடாந்து இனப்பிரச்சனை உக்கிரம் அடைந்த நிலையில் இதற்கு தீர்வாக இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்திய – இலங்கை ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அரசியல்யாப்பில் கொண்டுவரப்பட்ட, 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணசபை முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை காலமும் அறிமுகம் செய்யப்பட்ட அதிகாரப் பகர்வு யோசனைகளை விட தமிழ் மக்கள் கோரிவந்த சமஷ்டிக்கு நிகரான இம்மகாண சபை முறைகள் ஒரு வளாச்சிபடியைக் கொண்டதாக அமைந்தது. முன்னைய முறைகளான மாவட்ட சபை டட்லி மற்றும் பண்டா ஒப்பந்தங்கள் உண்மையான முறையில் அதிகாரப்பகிர்வு இடம்பெறவில்லை எனக் கூறப்பட்டது. இதற்கு முந்திய அதிகாரப்பகிர்வு யோசனைகளில் பாராளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டிருந்தது.

சட்ட ஈக்கம் நிறைவேற்று நிர்வாகம் நீதி பரிபாலனம் ஆகிய மூன்றும் முறையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஆயினும் 1987 இல் ஊற்படுத்தப்பட்ட, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்போது 9 ஆம் உருப்புரிமையின் படி இரசியல் யாப்பில் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைப்பட்டியலில் 37 விடயங்கள் உள்ளடக்கியதாகவும் மத்திய அரசாங்க பட்டியலில் 16 விடயங்களும் ஒருமைப்பட்டியலில் 36 விடயங்களும் உள்ளடக்கப்பட்டதன் காரணமாக சுமஷ்டியை நோக்கிய விடயங்களை இது முன்கொண்டு செல்ல முனைகிறது என தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் மென்போக்குவாதிகளான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மறு;றும் ஆயுதத்தரப்பினர் தமிழர்களின் நீண்ட கால அபிலாஷைகளுக்கு இது போதுமானதல்ல என தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து உரையாடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கம் மிகவும் வரையறைக்குட்பட்டது.

அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை. வட கிழக்கு மாகாண சபையை கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் ஜனாதிபதி ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் தமிழ் மக்களுக்கு விரோதமானவர் இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவார் என நாம் நம்பவில்லை என பிரபாகரன் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை நவம் Virakesari

(தொடரும்)

Share.
Leave A Reply