2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக செலுத்தப்பட்டு நாடு பொருளாதார ரீதியாக மீட்சி பெறும் என்ற உறுதியை வழங்குகிறேன். நாம் ஆட்சியை பொறுப்பேற்றபோது எதிர்க்கட்சியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகள் அனைத்தையும் தோற்கடித்துள்ளேம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு- செலவுத் திட்டத்தினை இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

சுதந்திரத்திற்குப் பின்னர் 2022ஆம் ஆண்டில் நாடு மிகவும் சிக்கலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தது. 2022ஆம் ஆண்டில் நெருக்கடி ஏற்பட்டாலும், நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள் வரலாற்று மற்றும் கட்டமைப்பு ரீதியானவையாகும். இக்குறைபாடுகள் குறுகிய பார்வை கொண்ட ஆட்சி மற்றும் மோசமான பொது நிதி முகாமைத்துவத்தினால் மேலும் அதிகரித்தன.

இந்த நெருக்கடியானது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் இயல்புநிலையை சீர்குலைத்ததுடன் வியாபாரங்கள் முதல் வீடுகள் வரை அனைத்து துறைகளிலும் காணப்பட்டது. எரிபொருள், மின்சாரம், அத்தியாவசிய உணவுப் பொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள், சேவைகளில் ஏற்பட்ட பற்றாக்குறையானது, நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள், ஊனமுற்றோர் மற்றும் முதியவர்கள் என அனைவரையும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கியது.

அடிப்படை தேவைகளைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததுடன், சிலர் வரிசையில் காத்திருக்கும்போது மரணித்தனர்.

2022ஆம் ஆண்டின் நெருக்கடி வெறும் பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல. அது அரசியல் நிர்வாகம் மற்றும் ஆளுகையில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என்பதுடன் இதற்கு முன்னர் எப்பொழுதும் இல்லாதளவிலான துன்பங்களுக்கு வழிவகுத்தது.

பொருளாதாரத்தின் ஆரம்ப வீழ்ச்சி நிவாரணமளிக்கப்பட்டு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுத்துள்ளதுடன், சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் வலுவற்ற பிரிவுகளைப் பாதித்துள்ளது.

பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியைத் தாண்டி, இந்நெருக்கடியானது நாட்டில் அரசியல் மாற்றமொன்றினையும் ஏற்படுத்தியது. தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதாரக் கஷ்டங்கள் ஊழல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான சமூக அமைதியின்மைக்கு வழிவகுத்தன. அவர்கள் அதிகாரத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன் வெகுசன போராட்டங்கள் மூலம் விரட்டியடிக்கப்பட்டனர்.

அதன் பிறகு ஒரு தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது, இது மக்களின் ஆணையை சிதைக்கும் செயலாகும். இருப்பினும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான மக்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை. ஏனெனில் இந்த தற்காலிக அரசாங்கத்தின் உருவாக்கம் பெரும்பாலும் பொதுமக்களின் இழப்பில் ஊழல்வாதிகளை மீட்கும் முயற்சியாகும். 2023 மார்ச் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஜனநாயக சட்டபூர்வமான தன்மையில் குறைபாடுகள் வெளிப்பட்டன.

அசைக்க முடியாத உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்துடன் 2024 கடைசியில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முறைமையை மாற்றுவதன் மூலம் நாட்டை பொதுவான செழிப்பை நோக்கி வழிநடத்தும் வலுவான மக்கள் ஆணையுடன் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது.

எனவே, நிலைபேறான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கி பொருளாதாரத்தை வழிநடத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான அடித்தளமிடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்றாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் நாங்கள் எதிர்கொண்ட சவால்களில் ஒன்று, இந்த மகத்தான வெற்றியைத் தடுக்க முயன்றவர்களால் எமது பொருளாதாரக் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு எதிரான கட்டுக்கதைகளையும் தீய பிரச்சாரங்களை எதிர் கொண்டமையாகும். இலங்கை ரூபாய்க்கு எதிரான டொலரின் பெறுமதி 400 ரூபாயாக உயரும், எரிபொருள் வரிசைகளின் சகாப்தம் மீண்டும் ஏற்படும், சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்களும் வெளிநாடுகளும் புதிய அரசாங்கத்தைத் தனிமைப்படுத்துவர், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழப்பார்கள், தனியார் சொத்துக்கள் முழுமையாக தேசியமயமாக்கப்படும் போன்ற தவறான கருத்துக்கள் காணப்பட்டன.

அற்ப அரசியல் நோக்கங்களுக்காக இயக்கப்படுகின்ற கட்சிகளால் உருவாக்கப்பட்ட எமது அரசாங்கத்திற்கெதிரான பிம்பம் மேலதிக தடைகளை ஏற்படுத்தியது. எமக்கெதிராக இதுபோன்ற எதிர் பிரசாரங்கள் இருந்தபோதிலும், புதிய சூழ்நிலையினை வெற்றிகரமாக வழிநடத்தவும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் வெளிநாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேணவும், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும் எம்மால் முடியுமாக இருந்தது.

அதன்படி, விலை மற்றும் நிதித் துறை படிப்படியாக ஸ்திரமடைந்ததுடன், ஒரு வருட அளவீட்டின்படியான திறைசேரி உண்டியல் வீதம் 8.8வீதமாகக் குறைவடைந்து, பணவீக்கம் 2025 சனவரியில் 4.0வீதம் எதிர்மறையாகக் காணப்பட்டது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் குறிப்பிடத்தக்க அளவிலான கடன் மீள்கொடுப்பனவுக்குப் பின்னர் அந்நிய செலாவணி இருப்பானது 6.1 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக, நாணய மதிப்பு தேய்மானம் குறித்த விடயங்கள் இருந்தபோதிலும், இலங்கை ரூபாவின் மதிப்பு ஒரு டொலருக்கு ஏறக்குறைய 300 ரூபாக வலுவடைந்துள்ளதுடன் 2025இல் பொருளாதார வளர்ச்சி 5வீதம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 நடுப்பகுதியில் இருந்து இலங்கை நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் பொருளாதார சீர்திருத்தங்களைச் செயற்படுத்தியது. சில சந்தர்ப்பங்களில் இந்த தீர்வு நடவடிக்கைகள் மக்கள் மீதான அழுத்தங்களை அதிகரித்தன – குறிப்பாக செலவு-பிரதிபலிப்பு எரிசக்தி விலை நிர்ணயம், வரி அதிகரிப்பு மற்றும் வட்டி விகித உயர்வு போன்ற நடவடிக்கைகளாகும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் சர்வதேச நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் பங்கை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், எமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார இறையாண்மையின் வடிவத்தில் பொருளாதாரத்தின் முழு கட்டுப்பாட்டையும் அடைய வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம்.

பொருளாதாரத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக, 2024 டிசம்பரில் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை முடிவடைந்தமையாகும். நாம் ஆட்சிக்கு வந்தபோது, இலங்கை பொது படுகடனை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததனால், அம்முயற்சியில் சடுதியான மாற்றம் ஏற்பட்டால் பொருளாதாரம் சீர்குலையும் என்பதனைக் கருத்திற் கொண்டு, நாம் அதனைத் தடுக்க விரும்பவில்லை. இந்த முடிவை எடுக்கும்போது, கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு ஏற்கனவே செலவிடப்பட்ட குறிப்பிடத்தக்க நேரத்தையும், அச்செயன்முறையைத் தொடர்வதால் மக்களுக்கு ஏற்படும் மேலதிகச் செலவுகளையும் நாம் கருத்திற் கொண்டோம்.

இந்தச் செயல்முறையானது இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்கியுள்ளதுடன், கடன் மீள்கொடுப்பனவு செலவுகளையும் கணிசமாகக் குறைக்கிறது. ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற வெளிநாட்டு கடன் அல்லாத உட்பாய்ச்சல்களை அதிகரிக்கவும் வெளிநாட்டு நிதியிருப்பிக்களை வலுப்படுத்தவும் நாடு இந்த நிதி வாய்ப்பினை பயன்படுத்துவது அவசியமாகும். மேலும் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது எதிர்காலத்தில் கடன் மூலதனத் திருப்பிச் செலுத்துதல்களை சீராக மீண்டும் தொடங்குவதற்கு உதவும். இதன் விளைவாக, பிட்ச் மதிப்பீடுகள் மற்றும் மூடிஸ் போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்களால் இலங்கையின் கடன் மதிப்பீடுகள் ஒரே நேரத்தில் பல படிகளால் மேம்படுத்தப்பட்டன. மொத்தத்தில் இந்த முன்னேற்றங்கள் படிப்படியாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சு, வேலை உருவாக்கம் மற்றும் ஊதிய முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய காரணிகளாக உள்ள சர்வதேச நிதிப் பரிமாற்ற செலவுகளைக் குறைக்கின்றன.

மறுபுறம், பொருளாதார நெருக்கடியானது பலரை, குறிப்பாக சமூகத்தின் மிக வலுவற்ற பிரிவினரை தொடர்ந்து பாதிக்கிறது. இந்த நெருக்கடி வாழ்க்கைச் செலவில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்ததுடன் பணவீக்கம் 2022 இல் 70% வரை உயர்ந்திருந்தது. பணவீக்கம் குறைந்தாலும், விலை மட்டம் உயர்ந்தே உள்ளது. மேலும் சம்பள வளர்ச்சி அதற்கேற்ற வேகத்தில் இல்லை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைவடைகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உண்மையான சம்பளம் கணிசமாகக் குறைவடைந்துள்ள நிலையில், நியாயமான சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், அரசாங்கம் அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இலக்கிடப்பட்ட பணக் கொடுப்பனவுகளை அதிகரித்ததுடன் பயனாளிகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையுடையவர்களுக்கு பிற இலக்கிடப்பட்ட சமூக நன்மைகளையும் வழங்கியுள்ளது.

இருப்பினும், நாட்டில் பரவலாக காணப்படும் வறுமையை ஒழிக்க இவ்வகையான பணக் கொடுக்கனவுகள் நிலையானதொரு தீர்வாகாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு சிரமங்கள் மற்றும் சவால்கள் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத குடிமக்களைக் கவனித்துக் கொள்வது மனிதாபிமானமிக்க அரசாங்கத்தின் கடமையாகும். அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தில் உட்சேர்ப்பு மற்றும் தவிர்ப்பு சார்ந்த தவறுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால்தான், செயன்முறையில் தொடர்ச்சியான மேம்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு மிகவும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து இலங்கையர்களும் தங்கள் முழு திறனுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது வறுமை ஒழிப்புக்கான நிலையான தீர்வுக்கு அவசியமாகும்.

அனைத்து பிரசைகளும் மேம்பட்ட பொருளாதார வாய்ப்புகளைப் பெறும் வகையிலும் அதன் விளைவாக ஏற்படும் பலன்கள் சமூகத்தின் அனைத்து வகை மக்களாலும் அனுபவிக்கப்படும் வகையில் பொருளாதார வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய முறையில் நடைபெற வேண்டும். வளர்ச்சி என்பது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான வழிமுறையாக இல்லாவிட்டால் அதனால் சமூகத்திற்கு எந்த பெறுமானமும் கிடையாது. பல தசாப்தங்களாக, பொருளாதார செயற்பாடு மற்றும் பொருளாதார ஆதாயங்கள் சிலரிடையே குவிந்துள்ளன. சமீபத்திய (2019) வீட்டு வருமானம் மற்றும் செலவின கணக்கெடுப்பின்படி, வீட்டுச் செலவினங்களில் 47% ஆனது முதல் 20 வீத குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டதாகும். குடும்ப மட்டத்தில் வருமானத்தின் குவிப்புக்கு சான்றாக மேல் மாகாணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2023) 44 வீதம் பங்களிக்கிறது. இந்த சமத்துவமின்மை புவியியல் ரீதியாகவும் வெளிப்படுவதுடன், பொருளாதார வாய்ப்புகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் வகையில், பொருளாதாரத்தின் பெரியதொரு ஜனநாயகமயமாக்கலே முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையாக உள்ளது. மக்கள் போராட்டம் மற்றும் கடந்த ஆண்டு தேர்தல்களில் சாதாரண மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை நிலைநாட்டினர். பொருளாதார உரிமைகளும் அவ்வாறே நிலைநாட்டப்படுவது இந்த வரவுசெலவுத் திட்டத்தின் கோட்பாடாகும்.

இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் குறிப்பிடத்தக்க வரையறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. 2022 முதல் இலங்கை அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை நாம் நினைவூட்ட வேண்டியதில்லை. பெரும்பாலான நாடுகள் அரச கடன் மீளச்செலுத்த தவறியதனைத் தொடர்ந்து “இழந்த தசாப்தம்” என்று அழைக்கப்படும் ஒரு காலகட்டத்தை கடந்து செல்கின்றன. இருப்பினும், ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைய முடிந்தது. பின் விளைவுகள் இல்லாமல் அந்த ஒழுக்கத்தை எளிதாகவோ அல்லது விரைவாகவோ தளர்த்த முடியாது. எனவே, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமானது அரசிறை ஒழுக்கம் பொருளாதார தொலைநோக்கு மற்றும் வழிகாட்டலுடன் தயாரிக்கப்பட்டது. இவ் வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக நாங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13வீதம் முதன்மை அரசாங்க செலவின வரையறையாகும் என்ற முக்கிய அரசிறை விதியை பொது நிதி முகாமைத்துவச் சட்டம் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டம் இந்தத் தேவையை முன்நிறுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தகைய செலவினங்களிலிருந்து சிறந்த சமூக விளைவினைப் பெறுவதை உறுதிசெய்வதற்காக, எமது வரையறுக்கப்பட்ட வரி நிதியளிக்கப்பட்ட வளங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் நாம் கவனமாகவும் ஒழுக்கமாகவும் இருத்தல் வேண்டும்.

விரும்பிய அளவுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில், எமது முக்கிய முன்னுரிமைகள் பலவற்றிற்கு நிதி ஒதுக்க முடிந்தது. இவ்வாறு கவனம் செலுத்துகின்ற பகுதிகள் பாரம்பரிய வரவுசெலவுத்திட்டங்களிலிருந்து வேறுபட்டவை என்றாலும், தற்பொழுது இடம்பெறும் முன்னெடுப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் நிதி ஒதுக்கியுள்ளோம். அதே நேரத்தில் இவற்றை எமது ஆணையுடன் இணைக்க தேவையான மாற்றங்களைச் செய்கிறோம். அஸ்வெசும திட்டம் மற்றும் பிற சமூக நல முன்னுரிமைகளுக்கான எமது அதிகரித்த செலவினங்களில் இது தெளிவாகிறது. இறுக்கமான நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு சாத்தியமான அதிகபட்ச அளவிற்கு, 2025 ஜூலை முதல் சிரேஷ்ட பிரசைகளுக்கான வட்டி மானியத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளோம். கடந்த காலங்களில் வழக்கமாக இந்த வரவுசெலவுத்திட்டத்தில் துஷ்பிரயோகத்தைத் தடுக்க வலுவானதொரு பொறிமுறையை செயற்படுத்தவும் நாம் உறுதிபூண்டுள்ளோம். இந்த வரவு செலவுத்திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% ஒதுக்கியுள்ளோம். இது பொருளாதார வளர்ச்சியை முன்னகர்த்துவதற்கான அரசாங்கத்தின் முக்கிய பங்களிப்பாகும். சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்றுறையை ஊக்குவித்தல், பொதுப் போக்குவரத்து, கிராமப்புற அபிவிருத்தி, விவசாய புத்தெழுச்சி, உள்ளூர் தொழில்முனைவு, ஆராய்ச்சியினை வணிகமயமாக்கல் மற்றும் தடையற்ற உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி ஆகியவற்றிற்கும் வளங்கள் ஒதுக்கப்பட்டுள்ள. இவை அனைத்திலும் மற்றும் பிற பொதுச் செலவினங்களிலும், முன்னுரிமை அளித்தல், இலக்கு வைத்தல், திறம்பட செயற்படுத்துதல் மற்றும் பணத்திற்கான மதிப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் நாம் அதிகளவு எச்சரிக்கையுடன் செயல்படுவோம் எனவே, பொதுமக்களிடமிருந்து செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் பொருளாதார மற்றும் சமூக பிரதிபலன்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மீட்சிக்கான இந்தப் பயணத்தினை நாம் தொடரும்போது, மேலும் அதிக அரசிறை வாய்ப்புகள் உருவாக்கப்படும். செயற்திறன் அதிகரிப்பு வீண்விரயங்களையும் ஊழலையும் ஒழித்தல், சிறந்த முன்னுரிமை மற்றும் சிறந்த வரி நிர்வாகம் மூலம் உருவாகும் சேமிப்புக்களினால், மக்களின் முன்னுரிமைகளை நிறைவேற்ற, எமக்கு அதிக வளங்கள் கிடைக்கும். எனவே, ஒரு நாடாக நாம் பொறுமை காத்து, கூட்டாக ஒழுக்கத்துடனும் உறுதியுடனும் செயற்பட்டு நாம் முன்னோக்கிச் செல்லும் போது பிரதிபலன்கள் கிட்டும்.

2025 வரவு – செலவுத் திட்ட கோட்பாடுகள்

வரவு செலவுத் திட்டம் என்பது வரவிருக்கும் ஆண்டிற்கான வருமானம் மற்றும் செலவின முன்மொழிவுகளின் தொகுப்பு மட்டுமல்லாது, பொருளாதார முகாமைத்துவம் மற்றும் ஒட்டுமொத்த கொள்கைக்கான அரசாங்கத்தின் அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும். இந்த வரவுசெலவுத்திட்டமானது, பொருளாதாரக் கொள்கை நோக்கங்களின் வழங்கல் பக்கத்தின் மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடங்கியுள்ளது.

i. பொருட்கள், சேவைகள் மற்றும் விவசாய உற்பத்தியின் விரிவாக்கம்.

ii. இந்த உற்பத்தி அனைத்து மக்களின் தீவிர ஈடுபாடு மற்றும் பங்கேற்புடன் நடைபெற வேண்டும்.

iii. இந்த உற்பத்தியின் பயன்களும் ஆதாயங்களும் சமூகம் முழுவதும் சமமாகப் பகிரப்பட வேண்டும்.

இதேபோல், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கேள்விப் பக்கத்தில், அரசாங்கத்தின் கொள்கை நோக்கங்கள்;

i. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்தல்.

ii. அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகள் உண்மையான மற்றும் நியாயமான விலையில் வழங்கப்பட வேண்டும்.

iii. பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க தரத்தில் இருக்க வேண்டும்.

இந்த வழங்கல் மற்றும் கேள்வி நோக்கங்களை அடைவதற்கான வழிமுறையானது பின்வருவனவற்றின் இணைப்பாக இருக்கும் ;

i. போட்டித் தன்மையினை சந்தையில், கேள்வி, நிரம்பல் மற்றும் விலைகள் ஆகியன போட்டித்தன்மையான சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

ii. அரசாங்கம் ஒழுங்குபடுத்தல் நிறுவனங்கள் மூலம் சந்தைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணித்தல் வேண்டும்.

iii. கேள்வி மற்றும் நிரம்பலில் அரசாங்கத்தின் தீவிர பங்கேற்பு.

iv. குறிப்பிட்ட துறைகளில் உற்பத்தியினை ஒருங்கிணைத்தல்.

இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டம் இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மக்களும் ஈடுபாட்டுடன் கூடிய பங்கேற்பாளர்களாக, பங்குதாரர்களாக மற்றும் பயனாளிகளாக இருப்பார்கள். ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்க நாம் விரும்புகிறோம். அத்தகைய பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதை எளிதாக்குவதும், மக்கள் தங்கள் பொருளாதார திறனை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளை நீக்குவதும் அரசாங்கத்தின் பணியாகும். தொலைதூரப் பகுதியில் வசிப்பதால் ஒருவர் தனது பொருளாதார திறனை நிறைவேற்ற முடியாமல் போனால் அது அநீதியாகும். ஒரு நபர் தனது இயலாமை, கல்வி வாய்ப்பு இல்லாமை, அடிப்படை உட்கட்டமைப்பு இல்லாமை காரணமாக தனது பொருளாதார ஆற்றலை நிறைவேற்ற முடியாமல் போனால் அது அநீதியாகும். இது ஒரு எளிதான செயல்முறை அல்ல, இதை ஒரே இரவில் செயல்படுத்த முடியாது. குடிமக்கள் தங்கள் பொருளாதார ஆற்றலை அடைய வலுவூட்டுவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது. கல்வி மற்றும் பயிற்சியில் முதலீடு செய்வதன் மூலம் மக்களின் தேவையான திறன்கள் மற்றும் இயலுமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். மக்கள் தங்கள் திறன்களை அடைய வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக சுகாதாரப் பராமரிப்புத் துறையில் முதலீடு செய்தல். இலங்கையிலும் வெளிநாட்டிலும் சந்தைகளை அணுகவும் பொருளாதார வாய்ப்புகளில் ஈடுபடவும் மக்களுக்கு உதவும் வகையில் உட்கட்டமைப்பை வழங்குதல். போட்டி நியாயமானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் – அங்கு சமமற்ற ஆடு களத்தை உருவாக்கும் சந்தை சக்தியின் அதிகப்படியான செறிவு இருக்காது. இந்த வரவுசெலவுத் திட்டத்திலுள்ள முன்மொழிவுகள், இந்த நாட்டு மக்களின் பொருளாதார வலுவூட்டல் செயல்முறையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது இலங்கைப் பொருளாதாரத்தின் சனநாயகத்திற்கு அடித்தளமாக இருக்கும்.

நாட்டின் எதிர்கால வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவத்துக்கு உதவும் ஏற்றுமதிகள் மற்றும் கடன் அல்லாத பிற உள்வரவுகளாலும் பொருளாதார வளர்ச்சி செயற்படுத்தப்படல் வேண்டும். தொடர்ச்சியான உற்பத்தித்திறன் வளர்ச்சியாலும் வளர்ச்சி செயற்படுத்தப்படல்இயக்கப்படல் வேண்டும். மேலும் பொருளாதாரத்தின் டிஜிட்டல் மயமாக்கல் இதன் ஒரு முக்கிய அங்கமாகும். அரசாங்கத்தின் வளர்ச்சி உத்தி இந்த அடித்தளங்களால் இயக்கப்படுகிறது – வளர்ச்சி உற்பத்தித்திறன் மேம்பாடுகளால் இயக்கப்பட வேண்டும், மேலும் அது உள்ளடக்கியதாகவும், ஏற்றுமதி சார்ந்ததாகவும், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

அதேபோல் சமூக மேம்பாடு மற்றும் அரசியல் சீர்திருத்தமும், நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊழல் பாதிப்புகளை நீக்குதல் பொருளாதார முன்னேற்றத்திற்கான மற்றொரு முக்கியமான அடித்தளமாகும். நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளாகும். அரசாங்கத்தின் பிரதானமான தூய்மையான இலங்கை முயற்சி (Clean Sri Lanka), சமூகத்தின் இந்த அபிலாஷைக்கு உயிர் கொடுக்க தேவையான சமூக மாற்றம் மற்றும் நிர்வாக மாற்றத்தின் வடிவமாகும்.

நடுத்தர கால பேரண்ட பொருளாதார போக்கு

இவ் வரவுசெலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளூடாக பேரண்டப்பொருளாதாரப் பயணப் பாதையில் புதிய முன்னுதாரனத்துக்கான அடித்தளத்தினை அமைக்கின்றோம். நடுத்தர காலத்தில் 5 சதவீதம் மெய் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கொண்ட பொருளாதார வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கின்றோம். பொருளாதாரத்தில் வழங்கல் இயலளவினை மேம்படுத்துவதற்காக எமது வழிமுறைகளூடாக விலையதிர்வுகள் குறைக்கப்படுதல் மூலம் குறைந்த மற்றும் ஸ்திரமான பணவீக்கத்திற்கு மேலும் ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம். எமது ஒழுக்காறுமிக்க பேரண்டப்பொருளாதாரக் கொள்கைப் பாதை உறுதியான வெளிநாட்டு கணக்கு மீதிக்கு ஆதரவாகவிருந்து பாரிய நடைமுறைக்கணக்கு பற்றாக்குறையினைக் கொண்ட தசாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும். அதற்கமைய சந்தை அடிப்படையாகக் கொண்ட நாணயம் கணிசமான தலம்பலைக் கொண்ட உத்திகளையும் இனிமேலும் எதிர்கொள்ளாது.

வலுவான ஏற்றுமதித் துறையொன்றினால் வளர்ச்சிக்கு வசதியளிக்கப்பட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 2025 இல் ஐக்கிய அமெரிக்க டொலர் 19 பில்லியனுக்கு அண்மித்த ஒருபோதும் இல்லாத உயர்வினை அடையுமென நாம் எதிர்பார்க்கின்றோம். படுகடனைத் தோற்றுவிக்காத உட்பாய்ச்சலுக்கான இவ் வளர்ச்சி ஆற்றல் வாய்ந்த பொருளாதார வளர்ச்சியுடனும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 2.3 சதவீதம் கொண்ட ஆரம்ப வரவு செலவுத்திட்ட மிகையுடனும் இணைந்து 2028 தொடக்கம் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளில் படிப்படியான அதிகரிப்பை நிறைவேற்றுவதற்கு இலங்கை நன்கு தயாராகவுள்ளது என்பதை உறுதி செய்யும்.

உலக வங்கி மதிப்பீடுகளின் பிரகாரம் நாட்டின் வறுமை வீதம் 2023 இல் 25.9 சதவீதத்தையெட்டியுள்ளது. நாட்டுக்கான கடன்களைச் செலுத்துவதில் தவணை தவறியிருந்த அநேகமான நாடுகள் நீண்டகாலப்பகுதிக்கு உயர்வான வறுமையினை அனுபவித்திருந்தன. எவ்வறாயினும், எமது நாட்டில் இப்போக்கானது 2025 அளவில் தலைகீழாக மாற்றமடையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். தொடர்ந்து வறுமையானது குறைவடைந்து சென்று இவ் வரவுசெலவுத் திட்டத்தின் முன் மொழிவுகளானது சமூகத்தில் வரியவர்கள் மற்றும் மிகவும் வலுவற்ற உறுப்பினர்களை வலுப்படுத்துவதற்கான முழுமையான முதற்படியாகும்.

கண்டிப்பான அரசிறை ஒழுக்காறு மற்றும் முன்மதி, ஆற்றல்வாய்ந்த நாணய முகாமைத்துவம், பொறுப்புமிக்க படுகடன் முகாமைத்துவம், மனித மூலதன முதலீடு, வலிமையான சமூக பாதுகாப்பு வலை, பொருளாதார பண்முகப்படுத்தல், ஏற்றுமதி ஊக்குவிப்பு, சூழலை மேம்படுத்தல், விவசாய நவீனமயமாக்கல் பசுமைப் பொருளாதார கொள்கைகள், புத்தாக்கம், டிஜிட்டல் மயமாக்கல், தொழில்தொடக்க சூழல் அமைப்புகள், அரசாங்க – தனியார் பங்குடமைகள், ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை வலிமைப்படுத்தல், ஆளுகை மேம்பாடு மற்றும் வெளிப்படைத் தன்மையினை ஊக்குவித்தல், நிலைபேறான வளர்ச்சி உபாயங்கள் என்பவற்றை முன்னுரிமைப்படுத்துவதன் மூலம் நீண்டகால பொருளாதார உறுதிப்பாட்டையும் சுபீட்சத்தையும் எய்துவதற்கு இலங்கையின் பொருளாதாரத்தில் நிலை மாறுதல்மிக்க மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு நெருக்கடிக்குப் பிந்திய வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம்.

தொடர்ந்து 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

1. பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி விரிவாக்கல்

இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் திறனை அதிகரிப்பதன் மூலம், இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை குறிப்பிட்டதொரு அளவுக்கு அதிகரிக்கும் நோக்கில், அரசாங்கம் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை (2025-2029) உருவாக்கும். புதிய ஏற்றுமதி சந்தைகளைப் பயன்படுத்த, ஏற்கனவே உள்ள சந்தைகளை விரிவுபடுத்துவதற்கு அல்லது பெரிய அளவிலான ஏற்றுமதியாளர்களின் பெறுமதிச் சங்கிலி மற்றும் உலகளாவிய பெறுமதிச் சங்கிலிகளுடன் இணைப்பதற்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு வசதி செய்யப்படும்.

உயர்தர, மலிவு விலை மூலப்பொருட்களை அணுகுவதில் உள்ள வரையறைகளை நீக்கும் நோக்கில், தேசிய தீர்வைக் கொள்கை திருத்தப்பட்டு, எளிய, வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய தீர்வைக் கட்டமைப்பை உருவாக்க, துணை தீர்வைகள் மற்றும் விலக்குகளை படிப்படியாக பகுத்தறிவு செய்வதற்கான கட்டமைப்பைக் கொண்ட ஒரு புதிய தீர்வைக் கொள்கை உருவாக்கப்படும்.

உபாய ரீதியான பங்காளர்களுடன், குறிப்பாக பிராந்திய பொருளாதார பங்குடமை மற்றும் வேறு உடன்படிக்கைகளினூடாக, ஆசியான் நாடுகளுடனான பாரிய பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கையின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் வலையமைப்பை விரிவுபடுத்தல் வேண்டும்.

இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக இலங்கையின் இராஜதந்திரப் பணிகளின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை முயற்சிகளுடன் பொருளாதார இராஜதந்திரத்தில் மேம்பட்ட கவனம் செலுத்தப்படும்.

வெளிநாட்டு வியாபார வலையமைப்புகள், வர்த்தக ரீதியான வாய்ப்புகள் மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களுடன் வர்த்தக ரீதியான கூட்டுமுயற்சிகள் என்பவற்றுக்கு அதிகரித்த அணுகலுக்காக வெளிநாட்டு வாழ் இலங்கையரிடம் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும்.

வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளரத்தை செயல்படுத்துவதன் ஊடாக சுங்கம் மற்றும் குடிவரவு ஆகிய முக்கிய எல்லை முகவர்களை தானியங்குபடுத்தி ஒருங்கிணைத்தல் மற்றும் ஏற்றுமதியாளர் பதிவை டிஜிட்டல் மயப்படுத்தல்.

வர்த்தக வசதி மற்றும் வருமான சேகரிப்பை மேம்படுத்துவதற்கு புதிய சுங்க கட்டளைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அதிக வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுடன் கூடிய நாடுகளுக்கு முன்னுரிமையளித்து, ஏற்கனவே காணப்படுகின்ற 44 இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்களுக்கு அப்பால் இலங்கையின் இரட்டை வரி விதிப்பனவு மற்றும் வரி ஏய்ப்பு ஒப்பந்தங்கள் விரிவுபடுத்தப்படும்.

2. முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதியளிப்பு

ஏற்றுமதி சார்ந்த முதலீடுகள் மற்றும் துறை சார்ந்த வலயங்களை விரிவுபடுத்துதல். நிலையான நடைமுறைகள், வள முகாமைத்துவம் மற்றும் பசுமை தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் சுற்றுச்சூழல்-தொழில்துறை பூங்காக்களை நிறுவுவதற்கு அரச தனியார் பங்களிப்புகள் மற்றும் தனியாரினால் நடத்தப்படும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் மூலம் முன்னுரிமை அளிக்கப்படும்.

பொருளாதார உருமாற்ற சட்டத்தை மாறிவரும் முன்னேற்றங்களுக்கு பொருந்தும் வகையில் உரிய திருத்தங்களுடன் மீளாய்வு செய்யும்.

அரசாங்கம் பயன்படுத்தப்படாத அரசுக்கு சொந்தமான காணிகளை உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு வழங்கப்படும்.

வளர்ந்து வரும் அபிவிருத்திற்கேற்ப பொருத்தமான திருத்தங்களுடன் பொருளாதார கொடுக்கல் வாங்கல் சட்டம் மீண்டும் திருத்தம் செய்யப்படும்.

முதலீடுகளை பாதுகாப்பதற்காக பிரத்தியேகமான முதலீட்டுப் பாதுகாப்பு சட்ட மூலமொன்று இயற்றப்படும்.

ஆதனங்களை பதிவுசெய்தல், வரிக் கொடுப்பனவுகளை எளிமைப்படுத்தல், வர்த்தக வசதிப்படுத்தல், ஒப்பந்தங்களை அமுல்படுத்தல், கடன் பெற்றுக்கொள்ளல் போன்ற முக்கிய துறைகளில் நாட்டின் இலகுவாக வியாபாரம் செய்தலை மேம்படுத்தல்கள். அரசாங்க சேவைகளை டிஜிட்டல்மயமாக்குவதற்கான வழிமுறைகள் இக்குறிக்கோளை இயலச்செய்வதில் முக்கிய பங்காற்றும்.

அவசியமான அனைத்து அனுமதிகளையும் ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் அனைத்து சேவைகளை பெற்றுக் கொடுக்கும். (One-Stop-Shop) அணுகு முறையை வினைத்திறனான முறையில் அமுல்படுத்துவதற்கு அவசியமான சட்டங்களை அரசாங்கம் அறிமுகம் செய்யும்.

வருவாய்களையும் பங்கிலாபங்களையும் நாட்டிற்கு அனுப்புவதற்கு போதுமான பாதுகாப்பு முறைகள் தாபிக்கப்படுவதன் மூலம் வெளிநாடுகளில் முதலீடுசெய்வதற்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கான தடைகளை படிப்படியாக சீரமைத்தல்.

அரச தனியார் பங்குடமைக்கான சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்படும்.

சிறிய அளவிலான நில உரிமையாளர்களுக்கு சிறந்த தரமான நில உரித்தினை உருவாக்குவதற்கும், நிலத்தின் வணிகப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் பிம்சவிய நிகழ்ச்சித்திட்டம் விரைவுபடுத்தப்படும்.

ஏற்கனவே வரைவு நிலையிலுள்ள புதிய கடனிறுக்க வகையற்றல் சட்டம் விரைவுபடுத்தப்படும்.

இலங்கையின் கனிம வளங்கள் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தின் முதலீடு, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதிகளில் இலங்கையின் பயன்படுத்தப்படாத திறனை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அரசாங்கம் அழைப்புவிடுக்கும்.

ஏற்றுமதியாளர்கள் தர பரிசோதனை மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை அரசாங்கம் வழங்கும்.

வாடிக்கையாளர்களுக்கு திறமையான சேவை வழங்குவதற்காக, பரிசோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வுகூடங்கள், பரிந்துரை நிலையங்கள், புற்றுநோய் கண்டறிதல் மற்றும் துல்லிய சுகாதார ஆராய்ச்சிக்கான பரிந்துரை நிலையம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பிற இணக்க மதிப்பீட்டு அமைப்புகளும் பயனுள்ள ஒருங்கிணைப்பு பொறிமுறையுடன் உருவாக்கப்படும். நாட்டில் தேசிய தர நிர்ணய உட்கட்டமைப்பு (NQI) முறைமையின் விரும்பிய விளைவை நிறைவேற்றுவதற்காக, ஆரம்ப விரிவான மதிப்பீட்டுடன், 2025 ஆம் ஆண்டிற்கு ரூபா 750 மில்லியனை ஒதுக்க நாம் முன்மொழிகிறோம்.

3. இலங்கையின் கேந்திர முக்கியத்திலிருந்து அனுகூலமடைதல்

இலங்கையானது வர்த்தகம், தளவாடங்கள், நிதி சேவைகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மையமாக மாறுகின்ற ஆற்றலினைக் கொண்டுள்ளது. இந்த ஆற்றலை நிறைவேற்றுவதற்கான அடிப்படை ஏற்பாடுகளை இந்த வரவு – செலவுத் திட்டம் வழங்கும்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முதன்மையானதாக சரக்கு போக்குவரத்துத் துறை குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மூலோபாய புவியியல் இடவமைவினைப் பயன்படுத்துகிறது. தற்போது, சரக்கு போக்குவரத்துத் துறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 2.5வீத பங்களிப்பதுடன், தேசிய ஏற்றுமதிகளில் 7வீத பங்களிக்கிறது. அத்துடன், 40,000 – 50,000 பேருக்கு நேரடி முழுநேர வேலைவாய்ப்பை வழங்குகிறது.

கிழக்கு மற்றும் மேற்கு கொள்கலன் முனையத் திட்டங்கள் நிறைவடைந்தவுடன், கொழும்பு துறைமுகத்தின் ஆற்றல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். இதற்கு மேலதிகமாக, முன்மொழியப்பட்ட கொழும்பு வடக்கு துறைமுகம் இலங்கையின் துறைமுகங்களின் செயற்திறனை விரைவுபடுத்தும் என்றும், நாட்டை உலகளாவிய சரக்கு போக்குவரத்து மையமாக மேலும் நிலைநிறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே கொழும்பு வடக்கு துறைமுக அபிவிருத்திக்கான ஆர்வத்தினை வெளிப்படுத்துவதற்கான விருப்பங்கள் ஒரு மாதத்திற்குள் கோரப்படும்.

கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கையானது துரிதமாக அதிகரித்து வருதனால் அது மோசமான நெரிசலை அனுபவிக்கின்றது. இந் நிலைமையானது உட்கட்டமைப்பு, முறைமைகள் மற்றும் நடைமுறைகளில் முக்கியமான மாற்றங்களை வேண்டி நிற்கின்றது.

எனவே, கெரவலப்பிட்டி சுங்க கண்காணிப்பு நிலையம் மற்றும் புளூமெண்டல் சரக்கு போக்குவரத்துப் பூங்கா காணி கையகப்படுத்தச் செயன்முறை மற்றும் ஆரம்ப ஆயத்த பணிகளுக்கு ஆதரிப்பதற்காக 2025 வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 500 மில்லியனை ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

கொழும்பு துறைமுகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கொள்கலன் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பெறுமதி சேர்ப்பு மூலம் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கும் நீண்டகால நடவடிக்கையாக, வெயங்கொடையில் ரயில் அடிப்படையிலான ஒருங்கிணைந்த பல்மாதிரி சரக்கு மற்றும் சரக்குப் போக்குவரத்து மையமாக உள்ளக கொள்கலன் உலர் துறைமுகமொன்றினை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. முந்தைய ஆய்வுகளை மீளாய்வு செய்வதற்கும், நிறுவன பொறிமுறையை அடையாளம் காண்பதற்கும், காணி கையகப்படுத்தல் செயன்முறை மற்றும் வெயாங்கொடையில் உள்ளக கொள்கலன் உலர் துறைமுகத்துக்கான ஆரம்பப் பணிகளுக்கு ஒத்துழைப்பதற்கும் ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய நான் முன்மொழிகிறேன்.

தேசிய ஒற்றை சாளர அமைப்பு, ட்ரக் நியமன முறைமை, இலத்திரனியல் சரக்கு கண்காணிப்பு முறைமை மற்றும் துறைமுக சமுதாய முறைமை ஆகியவற்றைச் செயல்படுத்தவும் ஆரம்ப அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கவும் ரூபா 500 மில்லியனை ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதும், அதிநவீன தொழில்நுட்பத்தை இணைப்பதும் மிக முக்கியமாகும். காலாவதியான ஸ்கேனிங் அமைப்புகள் முழு விநியோகச் சங்கிலியிலும் தாமதத்திற்கு காரணமாகின்றன. எனவே, கொழும்பு துறைமுகம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான மேம்பட்ட ஸ்கேனிங் முறைமையின் ஆரம்ப அபிவிருத்தி மற்றும் அவற்றை நிறுவதனை ஒத்துழைப்பதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

4. டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றம்

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவது எமது பொரளாதார அபிவிருத்தி உபாயத் திட்டத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். டிஜிட்டல் மாற்றம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பொருளாதார வாய்ப்பை அதிகரித்தல், பொது சேவை வழங்கலை மேம்படுத்துதல் மற்றும் ஆளுகை மற்றும் அரச நிதியில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்.

அனைத்து பிரஜைகளுக்கும் இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாளைத்தை அறிமுகப்படுத்துதல் என்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கு அவசியமான ஒரு அடிப்படை டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு ஆகும். இந்த செயன்முறையை நோக்கிய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள அதே வேளையில், இந்தச் செயல்முறை துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் சேவைகள் மற்றும் முறைமைகளின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான பொது மற்றும் நிறுவன அறக்கட்டளை, டிஜிட்டல் மாற்றத்தின் வெற்றி மற்றும் நிலைத்தன்மைக்கு மிகவும் முக்கியமானதாகும். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம், புதிய சட்டங்களை உருவாக்குவதன் மூலமும், ஏற்கனவே உள்ள சட்டங்களை வலுப்படுத்துவதன் மூலமும் ஆளப்பட்டு பாதுகாக்கப்படும். தொடர்புடைய நிறுவன வரைசட்டகத்தை வலுப்படுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் துரிதப்படுத்துவதற்கும், ஒரு உச்ச டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை மற்றும் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பிற குறிப்பிட்ட நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும் புதிய சட்டவாக்கங்களை இயற்றுவோம். இணையப் பாதுகாப்பு, தரவு தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டவாக்கத்தையும் நிறுவனங்களையும் நாங்கள் வலுப்படுத்துவோம்.

டிஜிட்டல் கொடுப்பனவு உட்கட்டமைப்பு என்பது இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வரைசட்டகத்தின் மற்றொரு அடிப்படை அம்சமாகும். அரசாங்கம், வணிகம் மற்றும் மக்கள் ஆகியவற்றுக்கு இடையே பாயும் டிஜிட்டல் கொடுப்பனவுகளை விரைவாக ஏற்றுக்கொள்வது டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கிய முடுக்கியாக இருக்கும். சமீபத்தில் தொடங்கப்பட்ட GovPay அமைப்பு அத்தகைய டிஜிட்டல் கொடுப்பனவு வழிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். காசு அடிப்படையிலான பொருளாதார மாதிரியிலிருந்து படிப்படியாக மாறுவது அவசியமானதாகும். இது தெளிவாக அறிவுறுத்தப்பட்டு கட்டம் கட்டமாக செயற்படுத்தப்படும்.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தனியார் மூலதனத்தையும் பங்குடைமைகளையும் ஈர்ப்பதற்கு அரசாங்கம் ஒரு உகந்த முதலீட்டு சூழலை எளிதாக்கும். செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், பின்டெக் மற்றும் ஏனைய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் புத்தாக்கங்களை நோக்கி முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இது பொருந்தும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஐ.அ.டொலர் 15 பில்லியன் அல்லது தேசிய பொருளாதாரத்தில் 12வீதத்துக்கும் அதிகமான நிலைக்கு வளர்ப்பதே எங்கள் நோக்கமாகும். இந்த இலட்சியத்தை அடைவதில், தகவல் தொழில்நுட்பத் துறையின் வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை அமெரிக்க டொலர் 5 பில்லியன் அதிகரிப்பதற்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

அதன்படி, விவரிக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகள் மூலம் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியின் விரைவுபடுத்தலை வலுப்படுத்துவதற்கு ரூபா 3,000 மில்லியனை ஒதுக்க நாங்கள் முன்மொழிகிறோம்.

5. சுற்றுலாத்துறை

வெறுமனே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாது நாங்கள் பெறுமதியை உருவாக்கும் சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும்.

இந்த நோக்கத்திற்காக, ஒவ்வொரு இடத்திலிருந்தும் மதிப்பு உருவாக்கத்தை மேம்படுத்தும் வகையில், உள்ளூர் இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அந்த இடத்தின் தனித்துவமான கலாச்சார மதிப்பு முன்மொழிவை தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் வியாபார நாமத்துடன் சுற்றுலாத் துறையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அடையாளம் காணப்பட்ட பிறகு, தேவையான முக்கியமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் 2 ஆண்டு காலமான 2025-2026 இல் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்த உட்கட்டமைப்பு அபிவிருத்தி இந்த வளர்ந்த இடங்களுக்கான ஒருங்கிணைந்த நகர வர்தக நாமம் மற்றும் ஊக்குவிப்பு பிரச்சாரத்தால் ஆதரிக்கப்படும். இதற்காக, 2025 ஆம் ஆண்டிற்கு ரூபா 500 மில்லியன் ஒதுக்க நாங்கள் முன்மொழிகிறோம்.

சுற்றுலாத் துறையில் இளைஞர்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் பிற திறன்களில் பயிற்சி அளிக்க அரசாங்கம் உதவி வழங்கும். சுற்றுலாப் பயணிகளின் இடமாற்றத் திறனை விரிவுபடுத்துவதற்காக புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல். இதற்கு இணையாக, அதிக சனநெரிசலை நிவர்த்தி செய்வதற்கும் துறையின் திறனை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய முனையம் 2 ஜப்பானிய முதலீடுகளின் ஒத்துழைப்புடன் விரிவுபடுத்தப்படும்

சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா பொலிஸ், அரச நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளை இணைத்து, சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்களை வழங்குதல், பாதுகாப்பு எச்சரிக்கைகள், சுற்றுலா அனுபவங்கள் குறித்த கருத்துகளைப் பெறுதல் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முறைப்பாடுகளைக் கண்காணித்தல் போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளின் கலவையின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விருந்தோம்பலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேவையான தலையீடுகளை மேற்கொள்ளும்.

6. பொருளாதார அபிவிருத்தியின் முதுகெலும்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் தொழில்முனைவுகளை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். நிதிக்கான அணுகல் என்பது நீண்டகாலமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளும் கிராமிய தொழில்முயற்சியாளர்களும் எதிர்கொள்கின்ற பாரிய சவால்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்நாட்டின் நிதியியல் கலாசாரமானது பிணையுறுதி அடிப்படையிலமைந்த கடன்வழங்கலாக இருந்து வருகின்றது. இது பாரிய நிதியியல் ஓரங்கட்டப்படுதலுக்கு வழிவகுத்துள்ளது. வங்கிகள் வைப்பாளர்களின் நலன்களை பாதுகாப்பதுடன் அவற்றின் கடன்வழங்கல் நடைமுறைகளில் முன்மாதிரியினை உறுதிசெய்கின்ற அதேவேளை சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் புதிய தொழில்முயற்சியாளர்களுக்கும் தீர்வொன்று இருக்கின்ற தேவையும் காணப்படுகின்றது.

இந்நோக்கில் அரசாங்கமானது அபிவிருத்தி வங்கியொன்றினை உருவாக்குவதை நோக்கிய தெரிவுகளை ஆராய்கின்றது. முதற்படியாக ஏற்கனவே காணப்படுகின்ற அரச வங்கி பொறிமுறையூடாக பொருத்தமான நிர்வாக கட்டமைப்பொன்றின் ஊடாக அபிவிருத்தி வங்கியின் தொழிற்பாடு தாபிக்கப்படவுள்ளது. அரசாங்கம் இச்செயன்முறைக்கு தேசிய கொடுகடன் உத்தரவாத நிறுவனம் ஆதரவளிக்கும்.

7. புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவி என்பவற்றைப் பேணி வளர்த்தல்

ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தேசிய புலமைச் சொத்து அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்தும் ஆலோசனை பெற்றும், தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்படும்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகளுக்கான முன்னுரிமை பின்வரும் பகுதிகளில் இருக்கும்;

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இணை நிதியுதவி வழங்குதல், பொது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடையவற்றுக்கு இடையேயான இணைப்புகளை ஒருங்கிணைத்தல், மாட்ரிட் நெறிமுறையை அணுகுவதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் உலகளவில் வர்த்தக முத்திரை பாதுகாப்பைப் பெற உதவுதல்.

2020 இல் 272 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 223 காப்புரிமைகளானது வதிவல்லாத பதிவுகளாகும். 2019 ஆம் ஆண்டில் காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படதன் அடிப்படையில் இலங்கையானது தரவரிசைப்படுத்தலில் 61 ஆவது இடத்தில் காணப்பட்டது. பல எண்ணிக்கையிலான ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் முடிவுகளானது வர்த்தக மயமாக்கப்பட்டு நாட்டின் பொருளாதார நலன்களில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நான் அவதானிக்கின்றேன். ஆகவே ஆராய்ச்சிகள் முடிவுகளை வர்த்தக மயப்படுத்துவதற்காக புதுமை நிதி ஒன்றினை உருவாக்குவதற்கு ரூபா. 1,000 மில்லியன் ஒதுக்குவதற்கு முன் மொழிகின்றேன்.

8. செலவின முகாமைத்துவம்

அரசாங்க செலவினத்தை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சிகளை முன்னெடுக்கும். மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் நலன்களினதும் முழுமையான கட்டமைப்பும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய இடைத் தலையீடுகளான பெறுமானத்தேய்வுக்குட்படுமான சொத்துக்கள் மீது இணைக்கப்பட்டுள்ள பெறுமதிமிக்க வளங்களை விடுவித்து அவ்வளங்களை உற்பத்தித்திறன்மிக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம்.

அரச தலைமைத்துவமானது செலவு முகாமைத்துவத்திற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுகின்றது என்பதை காட்டுவதற்கு உதாரணமாக அமைச்சரவையானது 24 அமைச்சுக்களுடன் 21 அமைச்சர்களினால் நிறுவகிக்கப்படுகின்றது.

சனாதிபதி, பிரதமமந்திரி மற்றும் அமைச்சர்களுக்கான வதிவிடங்கள் என்ற பெயரில் ஒதுக்கப்பட்டிருந்த மாளிகைகள் திறன்மிக்க பொதுப் பாவனைகளுக்காக பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சொத்துக்களை பொது மக்கள் நலன்கள் மற்றும் பொருளாதார ரீதியான சாத்தியமான கருத்திட்டங்களில் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதிகூடிய செயற்பாடு மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கொண்ட அனைத்து சொகுசு வாகனங்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படும்.

* வாகனம் தொடர்பான அரச செலவினங்களைக் குறைத்தல்

அரச ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் பெறுமதிமிக்க மற்றும் அதிகளவான எரிபொருள் நுகர்வினை கொண்டுள்ளவை ஆகும். இதற்கு மேலதிகமாக இவ்வாகனங்களுக்கு சாரதிகள் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் அதிகளவான பராமரிப்புச் செலவினையும் கொண்டுள்ளதாகும். எனவே, அரச அதிகாரிகள் தனது தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் அரச வாகனங்கள் மீதான செலவினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

*அரச நிறுவனங்களை மீளாய்வு செய்தல்

கடந்த ஆண்டுகளில் அரசாங்கப் பொறிமுறையானது இலகுவாகக் கையாள முடியாத கட்டமைப்பாக பரிணமித்துள்ளது. பல நிறுவனங்கள் பொருத்தமான ஆய்வு மற்றும் தர்க்கரீதியான அடிப்படையின்றி நிறுவப்பட்டுள்ளன. இது இரட்டிப்புப் பணி மற்றும் வீண் விரயங்களுக்கு வழிவகுத்ததுடன் செயற்திறன்மிக்க அரசாங்க சேவைகளை வழங்குவதற்கும் தடையாக அமைந்தது. இதற்குப் பரிகாரமாக பல அரசாங்க நிறுவனங்களின் பணிகள் மற்றும் பயன்பாட்டை மீளாய்வதற்கு ஏற்கனவே குழுவொன்று தாபிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எவ்வகையான நிறுவனங்கள் தொடர்ந்தும் இயங்க வேண்டும், எவை ஏனைய நிறுவனங்களுடன் ஒன்று சேர்க்கப்பட வேண்டும், எவை மூடப்படல் வேண்டும் என்பதை தீர்மாணிக்க முடியும். பொதுச் சேவைகளை வழங்குவதிலும் வரிசெலுத்துநர்களின் நிதிகளை சேமிப்பதிலும் மேம்பட்ட வினைத்திறனை இச்செயற்பாடு ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

*அரசதொழில் முயற்சிகளின் நிருவக ஆளுகை

அரசதொழில் முயற்சிகளினால் ஏற்படும் எதிர்கால அரசிறை சிக்கல்களைக் குறைப்பதற்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளின் ஆளுகையை மேம்படுத்துவது இன்றியமையாததாகும். இந்நோக்கத்திற்காக தெரிவு செய்யப்பட்ட அரச தொழில்முயற்சிகளின் சொத்தாண்மையை கொண்டிருக்கக் கூடிய அரச முழுக் கட்டுப்பாட்டின் கீழான ஒரு உரித்துக் கம்பனியொன்று உருவாக்கப்பட்டு, ஆளுகை நிதிஒழுக்கம் மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் மேம்படுத்தப்படும். சிறந்த நிறுவன ஆளுகை நடைமுறையின்கீழ் நிறுவன நோக்கக் கூற்றைக் கடைப்பிடித்து அரச தொழில்முயற்சிகள் தொழிற்படுகின்ற என்பதை இக் கட்டமைப்பு உறுதி செய்கின்றது. இந்நிறுவன நோக்குக் கூற்று ஊடாக அரச தொழில் முயற்சிகளின் எதிர்பார்க்கப்பட்ட வகிபாகம் மற்றும் பெறுபேறுகளை வரைவிலக்கணம் செய்யலாம். இது அரச தொழில்முயற்சியானது மக்களின் நலன்களுக்காகவே இயங்குகின்றது என்பதை உறுதி செய்யும்.

9. மகளிரின் பொருளாதார பங்களிப்புக்கு ஒத்துழைத்தல்

மகளிர் விவகாரங்களுடன் தொடர்புபட்ட நிகழ்ச்சித்திட்டங்களானது நிரல் அமைச்சு அதேபோல் மாகாணசபைகளின் கீழ் அமுல்படுதப்படும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவினை பெற்றுக் கொடுப்பதற்காக மாதாந்த உதவித்தொகை பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. இதற்காக ரூபா 7,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரிபோஷா சத்துணவு திட்டத்திற்காக ரூபா. 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையை தடுத்தல், பெண்களை வலுவூட்டல் மற்றும், பெண்களை பாதுகாத்தல் போன்ற நிகழச்சித்திட்டங்களுக்கு ரூபா. 120 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் வியாபித்துள்ள வலையமைப்பினூடாக பெண்களை இலக்காக கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ரூபா. 720 மில்லியன் செலவு செய்யப்படும்.

10. ஒரு ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி

i. சுகாதார முறைமையின் டிஜிட்டல் மயமாக்கல்

பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் சுகாதார முறைமையில் டிஜிட்டல் மயமாக்கல் மிகக் குறைவாகவே உள்ளது. அதன்படி, சுகாதாரப் பராமரிப்பு விநியோகத்தை டிஜிட்டல் மயமாக்குவதை மேம்படுத்துவதற்கு 2025 முதல் புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இதில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்துகை அதிகாரசபை, அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் “ஸ்வஸ்தா” முறைமை மேம்பாடு மற்றும் விரிவாக்கல் ஆகியன அடங்கும்.

ii. கிராமிய மட்ட ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துதல்

தொற்றா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 1,000 இற்கும் மேற்பட்ட ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளின் சேவை வழங்கலை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகளில், குறிப்பாக வயதான மக்களை இலக்காகக் கொண்டு, நோய்த்தடுப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகள் கிடைக்கும்.

iii. பெருந்தோட்டச் சுகாதார சேவைகள்

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பொது தனியார் கூட்டாண்மை (PPP) மூலம் தோட்ட மட்டத்திலான சுகாதார சேவையை வலுப்படுத்தும் செயன்முறையை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தோட்ட வைத்தியசாலைகளுக்குத் தேவையான மனித வளங்கள், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.

iv. தொற்றுநோய் தயார்நிலை

அடுத்த மூன்று வருடங்களில் அபிவிருத்தி பங்காளிகளின் உதவியுடன் தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் எதிர்வினைக்கான தேசிய திறன் மேம்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக, அனைத்து சாத்தியமான சுகாதார அபாயங்களுக்கும் எதிரான கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை திறன் பலப்படுத்தப்படும்.

v. ஆட்டிசம் உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுள்ள சிறுவர்களுக்கான சுகாதார சிகிச்சையை வழங்குதல்

இலங்கையில் கடந்த பத்தாண்டுகளில், ஆட்டிசம் உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த சவால்களை எதிர்கொள்ள, இலங்கையின் 25 மாவட்டங்களிலும் ஆட்டிசம் உட்பட நரம்பியல் வளர்ச்சி குறைபாடுள்ள சிறுவர்களுக்கான சுகாதாரம், கல்வி மற்றும் சேவை வசதிகளை மேம்படுத்துவதற்கான 5 ஆண்டு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தைச் செயற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டமாக, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நரம்பியல் வளர்ச்சி குறைபாடுள்ள சிறுவர்களுக்கான சிகிச்சை நிலையத்தை சர்வதேச தரங்களுடன் நிறுவுவதற்கு 2025 இல் ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய நான் முன்மொழிகிறேன். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தேவையான மனித வளங்களுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே போன்ற சிகிச்சை நிலைங்களை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

vi. ஆட்டிசம் உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சி குறைபாடுள்ள சிறுவர்களுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய ஆரம்ப சிறுபராய அபிவிருத்தி

தற்போது, முன்பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு சேவைகள் என்பன தனியார் துறையினால் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஆட்டிசம் காணப்படும் சிறுவர்களுக்கான முன்பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. ஆட்டிசம் உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சி குறைபாடுள்ள சிறுவர்களுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் ஆரம்ப சிறுபராய அபிவிருத்திக் குறித்து பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களிடையே விழிப்புணர்வு மற்றும் போதிய திறன் காணப்படாமையே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த நோக்கத்திற்காக, மாதிரி பகல்நேர பராமரிப்பு நிலையமொன்றை உருவாக்குவதற்காக ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய நாம் முன்மொழிகிறோம்.

11. அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள்

நாட்டில் நிலவிய அசாதாரண பொருளாதார சூழ்நுலை காரணமாக, 2019 முதல் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2025 வரவுசெலவுத் திட்டத்தில் ரூபா 2,500 மில்லியன் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழகங்களின் தரத்தினை மேம்படுத் ஏற்கனவே ரூபா 137,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

*முன்பள்ளி சிறுவர்களுக்கான ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம்

முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தில் மாணவர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்கப்படும் உணவுக்கான கட்டணத்தை ரூபா 60 இலிருந்து ரூபா 100 ஆக அதிகரிக்க நான் முன்மொழிகிறேன். மேலும் இதற்காக 2025 வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது

வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அடித்தளத்தை அமைத்து மாதிரி ஆரம்ப குழந்தைப் பருவக் கல்வி நிலையமொன்றினை நிர்மாணிப்பதற்கு 2025 வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் ரூபா 120 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மனித வள மேம்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுதல், பாலர் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரித்து, அவர்களின் மாதாந்த கொடுப்பனவை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ரூபா 1000 இனால் அதிகரிக்க முன்மொழிகிறோம். இதன்படி 100 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறோம்

*பாடசாலைக் கல்வியினை நவீனமயமாக்கல்

சிறுவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து அல்லது அவர்களின் பெற்றோர் தொழில் புரியும் இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் ஆரம்பப் பாடசாலை ஒன்றினை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் கொள்கையாகும். தற்போது நாடுபூறாகவும் 10,126 அரச பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் 3,946 ஆரம்பப் பாடசாலைகள் இருந்தன. மேலும் இந்தப் பாடசாலைகளில் சுமார் 634,094 சிறுவர்கள் கல்வி கற்கின்றனர். இவற்றில் 3,000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் 100 இற்கு குரைவான மாணவர்களையும் மற்றும் 1,471 பாடசாலைகளானது 50 இற்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ளதுடன் இப்பாடசாலைகளில் பெரும்பாலானவை பின் தங்கிய கிராமப்புறங்களில் காணப்படுகின்றன. இது பாடசாலைகளுக்கிடையில் பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது

அதன்படி, பாடசாலைகளை இடமாற்ற ஒரு தேசிய திட்டத்தனை தயாரிப்பதற்காக பாடசாலை முறைமையை மீளாய்வு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி ரூபா 500 மில்லியனை இதற்காக ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறோம்

*மாணவர் புலமைப்பரிசில்

அ. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற புலமைப்பரிசில் புலமைப்பரிசிலினை ரூபா 750 லிருந்து ரூபா 1,500 ஆக அதிகரிக்க நான் முன்மொழிகிறேன். இதற்காக ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது.

ஆ. விளையாட்டு பாடசாலை மாணவர்கள் போஷாக்கான உணவுகளை பெற்றுக் கொள்வதற்கு போஷாக்கு உணவு கொடுப்பனவானது ஆதரவளித்துள்ளது. மாதாந்த போஷாக்கு உணவு கொடுப்பனவினை, ரூபா 5,000 இலிருந்து ரூபா 10,000 வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். இதற்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கமானது ஏற்கனவே வரவு – செலவுத் திட்ட மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இ. தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களிற்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற கொடுப்பனவினை ரூபா 4,000 இலிருந்து ரூபா 5,000 வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். இதற்காக வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஏற்கனவே வழங்கப்படுள்ள ஒதுக்கத்திற்கு மேலதிகமாக ரூபா 200 மில்லியன் வழங்குவதற்கு முன்மொழிகிறேன்.

ஈ. மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ரூபா 5,000 இலிருந்து ரூபா 7,500 ஆக அதிகரிக்கவும் மற்றும் மாதாந்த உதவித் தொகையை ரூபா 4,000 இலிருந்து ரூபா 6,500 ஆக அதிகரிப்பதற்கும் நான் முன்மொழிகிறேன். இதற்காக, 2025 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஏற்கனவே ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வனைத்து கொடுப்பனவுகளும் 2025 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும்.

*உயர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கான உதவித்தொகை.

க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் திறனைக் கொண்டுள்ளதுடன், பல திறமையான இலங்கை மாணவர்கள் உயர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப் படிப்பினைப் பூர்த்திசெய்து, நாட்டுக்குத் திரும்பி, தங்கள் அறிவு மற்றும் ஆற்றலினை நாட்டிற்குப் பயன்படுத்துவதற்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்றை உருவாக்குவதற்கு நான் முன்மொழிகிறேன். 2025 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்க முன்மொழிகிறேன்.

*விளையாட்டுப் பாடசாலைகளின் அபிவிருத்தி

இது சம்பந்தமாக, மேற்கு, வடக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய ஐந்து மாகாணங்களில் சிறப்பு விளையாட்டுப் பாடசாலைகளை உருவாக்க நான் முன்மொழிகிறேன். இப்பாடசாலைகளானது தேர்வு செய்யப்படும்போது அப்பாடசாலைகளின் மாணவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் கடந்த காலம் அல்லது நிகழ்காலத்தில் சாதித்த சாதனைகளின் அடிப்படையில் பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்படும். அதன்படி, ஐந்து மாகாணங்களில் விளையாட்டுப் பாடசலைகளை அபிவிருத்திசெய்வதற்காக ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய நான் முன்மொழிகிறேன்.

*யாழ்ப்பாண நூலகம் மற்றும் ஏனைய பிராந்திய நூலகங்களின் மேம்பாடு

யாழ்ப்பாண நூலகம் யாழ்ப்பாணம் மற்றும் அயலிலுள்ள தீவுகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமான வாசகர்கள் யாழ்ப்பாண நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த வாசகர்களின் நலனுக்காக உட்கட்டமைப்பு போதுமான அளவு மேம்படுத்தப்படவில்லை. எனவே, இந்த நூலகத்திற்கு கணினிகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை வழங்க இந்த வரவுசெலவுத்திட்டத்தில் ரூபா 100 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நாம் முன்மொழிகிறாம். மேலும் ஏனைய பிராந்திய நூலகங்களின் அபிவிருத்திக்காக இவ் வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் இன்னும் ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நாம் நாம் முன்மொழிகிறாம்.

12. வலுசக்தித் துறை

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வலுசக்தித் துறையானது மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் கவனம் செலுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் என்பவற்றுக்கு கூடுதல் நிறை அளிக்கப்பட்டு வலுசக்தி மூலங்களை பல்வகைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். உள்ளூர் மற்றும் வெ ளிநாட்டு முதலீட்டாளர்களில் யார் சிறந்த கட்டண நன்மையை நாட்டுக்கு அளிக்கக்கூடியவர்களை வரவேற்பதோடு அரசாங்கமானது வலுசக்தித் துறையில் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்ளும். உள்ளக மீள்கட்டமைத்தலுக்கு வசதியளிக்கும் வகையில் ஒழுங்குபடுத்தல் வேலைச் சட்டகத்திற்கு அவசியமான மறுசீராக்கங்களை முன்னுரிமைப்படுத்து புதிய சட்டமானது விரைவில் பூரணப்படுத்தப்படும்.

காற்றாழை மின் உற்பத்தி துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக தொடர்ச்சியாக உற்பத்திச் செலவானது குறைவடைந்து வருவதனால் அண்மைக்கால கொள்வனவு விலையானது ஐ.அ.டொலர் 4.65 சதங்கலாக்க் குறைவடைந்துள்ளது. ஆகவே, ஐ.அ.டொலர் 8.26 சத மேலதிகக் கட்டணத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வதை நியாயப்படுத்த முடியாதுள்ளது. தொடர்ச்சியாக கைத்தொழில் மற்றும் ஏற்றுமதித்துறைக்கு போட்டித்தன்மையான வலுசக்தியைப் பெற்றுக்கொடுப்பதற்காக குறைந்த கட்டணத்தில் வலுசக்தியை பெற்றுக்கொடுத்தலின் அடிப்படையில் வலு சக்தி துறைக்கான முதலீடுகள் வரவேற்கப்படும். இதன்போது கம்பனி அல்லது நாட்டின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது.

இதனூடாக 2030 இல் 70 சதவீதமாக மீள் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலை அடைந்து கொள்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். கேள்வி முகாமைத்துவம் காலநிலை மாற்றத்திற்கான பரிஸ் உடன்படிக்கைக்கு ஒத்ததாக கேள்விப்பக்க முகாமைத்துவத்தினூடாக வலுசக்தி வினைத்திறனூடாக இவ்விலக்கு அடையப்படும்.

மேலும், திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையானது ஒவ்வொன்றும் 10,000 மெட்றிக் தொன் கொள்வனவு கொண்ட 99 தாங்கிகளைக் கொண்டதாகும். CPC மற்றும் IOC இனைத் தவிர்த்து 61 தாங்கிகள் உள்ளன.

இத்தாங்கிகளின் உபாயமான அமைவிடம் காரணமாக அதிக சாத்திவளத்தைக் கொண்டுள்ளன. எனவே சர்வதேச கம்பனிகளின் கூட்டிணைவில் அவை அபிவிருத்தி செய்யப்படும்.

13. விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு

விவசாயத்துறையானது நாட்டின் வேலைப்படையில் ஏறக்குறைய 30% இற்கு வேலைவாய்ப்ப்பை வழங்குவதோடு அது கிராமியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் உள்ளது. ஆகவே பெரும்பான்மையான இலங்கையர்களின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு விசாயத்துறையின் சாத்தியங்களை மேம்படுத்துவது முக்கியமானதொரு தேவையாகும்.

விவசாயம் தொடர்பான அரசாங்கக் கொள்கையானது, அதன் உற்பத்தித்திறன், போட்டித்தன்மை மற்றும் தாக்குபிடிக்கும் தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நெல் விவசாயிகளுக்கான உர மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே 2025 ஆம் ஆண்டிற்கு ரூபா 34,000 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது. தரமான விதைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசன வடிகாலமைப்பு முறைமையை முகாமை செய்தல், விவசாயத்தில் வினைத்திறனான நீர்ப்பாவனை என்பன முன்னுரிமை விடயங்களாக அடையாளம் காணப்பட்டு வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளால் வசதியளிக்கப்படும்.

ஆரோக்கியமான நெல் இருப்பைப் பராமரித்தல் : சந்தையில் அரிசியின் கேள்வியை மற்றும் நிரம்பல் இடைவெளியை பூர்த்திச் செய்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீரற்ற விலை ஏற்றத்தாழ்வை தவிர்ப்பதற்கு ஒரு மீள் நடவடிக்கையாக, இந்த 2024/25 பெரும் போகத்திலிருந்து ஒரு போதுமான ஆரோக்கியமான நெல் இருப்பை பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந் நோக்கத்திற்காக ரூபா 5,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்.

· தகவல் முறைமை : விவசாயம் துறையானது உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கான போதிய தரவுகள் மற்றும் தகவல்கள் காணப்படாமை பாரிய குறைபாடாகும். எனவே, உற்பத்தி தளத்தில் இருந்து நுகர்வோர் வரை முழு பெறுமதிச் சங்கிலியையும் உள்ளடக்கிய ஒரு சரியான தரவு மற்றும் தகவல் அமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். “உணவுப் பாதுகாப்பு வாழ்வாதார அவசர உதவித் கருத்திட்டம்” மூலம் உதவி வழங்கப்படும், மேலும் ஒருங்கிணைந்த கிராம – நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மீள்தன்மை என்ற உலக வங்கியின் புதிய கருத்திட்டத்தின் நிதி மூலம் விரிவாக்கப்படும்.

· பிற களப் பயிர்களின் உற்பத்தி அதிகரிப்பு : நெல் உற்பத்திக்கு மேலதிகமாக பாசிப்பயறு, உளுந்து, மிளகாய், சிவப்பு வெங்காயம், கௌபி, சோயா, சோளம், உருளைக்கிழங்கு மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட தானியங்கள் மற்றும் கிழங்கு பயிர்களின் உற்பத்தி 2025-27 ஆம் ஆண்டு நடுத்தர காலத்தில் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்படும். இதற்காக, 2025 இல் ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன். மேலதிகமாக, விவசாயம் அமைச்சுக்கு நிதி வழங்கப்படும்

சந்தையில் அரிசியின் இருப்பு மற்றும் நெற் சேகரிப்பு மற்றும் களஞ்சியப்படுத்லை ஒழுங்கு படுத்தும்முகமாக ஒழுங்குபடுத்தல் வேலைச்சட்டகமொன்றை அபிவிருத்தி செய்வது பொருத்தமானதாகும். அதன்படி, நெற் சந்தைப் படுத்தல் சட்டமானது திருத்தப்பட்டு நெல் மற்றும் அரிசி சேகரிப்பு மற்றும் களஞ்சியப்படுத்தலை ஒழுங்கமைப்பதற்கான அதிகாரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும்

*நிலத்தை உற்பத்திக்குப் பயன்படுத்தல்

தற்போது காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள், இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு உற்பத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாத நிலங்கள் அடையாளம் காணப்பட்டு நிலத்தின் பொருத்தப்பாட்டினை கருத்தில் கொண்டு விவசாய உற்பத்தி மற்றும் விவசாய அடிப்படையான அல்லது விவசாயம் அல்லா சிறிய நடுத்தர தொழில்முயற்சிகளுக்காக தனியார்துறையின் முதலீட்டிற்காக விடுவிக்கப்படும். இது தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூபா 250 மில்லியனை ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

*இளம் தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவுகள்

தற்போது, உற்பத்தியாளர் கூட்டுறவு ஏற்பாடு தொடர்பில் உலகில் பல உதாரணங்கள் உள்ளன. பொன்டெரா பால் கூட்டுறவு நிறுவனம், அமுல் இந்திய கால்நடை விவசாயிகள் கூடுறவுச்சங்கம் மற்றும் ஸ்பானிய மொன்ரகன்தொழிலாளர் கூட்றவுச சற்கம் போன்றன ஒரு சில உலகத் தரத்திலான உதாரணங்களாகும்.

கூட்டுறவு பொறிமுறையானது அபிவிருத்தி செய்யப்பட்டு மாற்று உற்பத்தி அணுகுமுறையொன்றை பின்பற்றுவதற்கு முன்மொழியப்படுகின்றது. அரசாங்கமானது அவசியமான காணிகள், விவசாய விரிவாக்கல் சேவைகள் மற்றும் ஏனைய ஆதரவுகளை பெற்றுகொடுத்து கூட்டுறவுத்துறைக்கு ஆதரவளிக்கும். சட்ட வலுவூட்டலை மேலும் உறுதிப்படுத்துவதற்கிம் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிதி ரீதியான ஊக்குவிப்புகளை பெற்றுக் கொடுப்பதற்குமாக 2025 இல் இம்முன்முயற்சிகளுக்கு ரூபா 100 மில்லியன் ஒதுக்குவதற்கு முன் மொழிகின்றேன்.

*விவசாயத்தில் இளம் தொழில்முனைவோர் அபிவிருத்தி

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட சிறிய மற்றும் நத்தர தொழில்முயற்சிகளில் இளம் தொழில் முனைவாளர்களை குறிப்பாக தொடக்கநிலை நிறுவனங்களில் ஈடுபட விரும்பும், விரிவாக்கத்தை எதிர்பார்க்கும் இளைஞர் தொழில்முனைவோர் இந்த முன்மொழியப்பட்ட முயற்சிகளின் இலக்காக இருப்பார்கள். இதற்காக ரூபா 500 மில்லியனை ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

*பாற் பொருள் உற்பத்தி அபிவிருத்தி

தற்போது, உள்நாட்டு பால் உற்பத்தியானது உள்நாட்டு கேள்வியில் சுமார் 45% இனை மட்டுமே பூர்த்தி செய்ய போதுமாகவுள்ளது. பால் பெறுமதி சங்கிலியை மேம்படுத்தி, தற்போது அமுல்படுத்தப்படுகின்ற உள்ளடக்கிய இணைப்பு அபிவிருத்தி கருத்திட்டத்தின் மூலம் பால் பண்ணை உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு 2025-2026 ஆண்டு காலப்பகுதியில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ரூபா 2,500 மில்லியன் முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

*நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி

இலங்கையானது விவசாயம் அடிப்படைப் பொருளாதார நாடாக இருப்பதால், சனத்தொகையில் 75% மானோர் கிராமப்புறத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். 2025 இல் நீர்ப்பாசனத் துறை அபிவிருத்திக்கான மொத்த முதலீடு ரூபா 74,500 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மல்வத்து ஓயா, ஜின் நில்வல, மது ஓயா வலது கரை அபிவிருத்தி, முந்தெனி ஆறு கருத்திட்டம் உள்ளிட்ட புதிய நீர்வளங்கள் அபிவிருத்திக் திட்டங்களானது முன்னுரிமையை கருத்திற்கொண்டு காணப்படும் அரசிறை இடைவெளிக்குள் நடுத்தர காலத்தில் படிப்படியாக செயற்படுத்தப்படும்.

கல் ஓயா திட்டம், ராஜாங்கனை, மின்னேரியா மற்றும் ஹுருலு வெவ திட்டங்களின் கீழ்நிலை நீர் விநியோக கால்வாய்களை மறுசீரமைக்கவும், 2025 இல் ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது .

14. பெருந்தோட்டங்கள் மற்றும் ஏற்றுமதிப் பயிர்கள்

*தெங்கு உற்பத்திகளை அதிகரித்தல்

தெங்குப் பொருட்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இத் தொழிற்றுறையால் கணிக்கப்பட்டவாறு, 2030 இல் நாட்டின் மொத்த தேவை 4,500 மில்லியன் தேங்காய்களாக இருக்கும். அதில் வீட்டு நுகர்வுக்கு 1,800 மில்லியன் தேங்காய்களும் மீதமுள்ள 2,700 மில்லியன் தேங்காய்கள் தொழிற்றுறை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.

உற்பத்தியை அதிகரிப்பதற்கான நீண்டகால நடவடிக்கையாக அதிக விளைச்சல் தென்னை நாற்றுகள் மற்றும் நில அபிவிருத்திக்காக ரூபா 500 மில்லியனை ஒதுக்க நாம் முன்மொழிகிறோம்.

*பிற ஏற்றுமதி பயிர்கள் – வாசனைத் திரவியங்கள்

கறுவா போன்ற மரபுரீதியான ஏற்றுமதிகளின் பெறுமதிச்சேர்க்கைகளை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இலங்கை தூதரகங்களினூடாக இப் பொருட்களின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்கப்படுத்தல்கள் மேம்படுத்தப்படும். அரசாங்கமானது விவசாய உற்பத்திகளின் வழங்கல் தரத்தை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுப்பதோடு விவசாயிகளை பெறுமதி சேர்ப்பு ஏற்றுமதியாளர்களுடன் தொடர்பு படுத்துவதற்கான வசதிகளை செய்து கொடுக்கின்றது.

உலகளாவிய பெறுமதிச் சங்கிலியை இணைக்கும் வகையில், இலங்கை கறுவா மற்றும் பிற ஏற்றுமதிப் பயிர்கள் மீதான ஒருங்கிணைந்த தயாரிப்பு அபிவிருத்தி மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றினை செயற்படுத்த ரூபா 250 மில்லியனை ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

15. கடற்றொழில் துறை – நீருயிரின வளர்ப்பு

இலங்கையில் நன்னீர் இறால் உற்பத்தியினை மேலும் விரிவுபடுத்துவதில் நன்னீர் இறால் குஞ்சுகளின் மட்டுப்படுத்தப்பட்ட கிடைப்பனவானது ஒரு பிரதான இடையூறாக காணப்படுகின்றது. தடாகங்களில் நன்னீர் இறால்களின் இருப்பை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி பொருளாதாரம் ஒன்றினை நோக்கி எதிர்கால உற்பத்தியை அதிகரிப்பதற்காக இறால் பண்ணை விவசாயிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரை வலுவூட்டுவதற்கு நாம் முன்மொழிகின்றோம். அரச தனியார் பங்குடமை (PPP) ஏற்பாடுகள், சாத்தியமான விவசாயம் கூட்டுறவுகள் மற்றும் சந்தைப்படுத்தல் வலையமைப்புகளின் கீழ் நன்னீர் இறால் குஞ்சு பொரிப்பகங்களை நிறுவுவதற்கும், விவசாயம் சங்கங்கள் அத்தகைய சந்தைப்படுத்தல் வலையமைப்புகளுடன் இணைவதற்கு வசதி செய்வதற்கும் நான் முன்மொழிகிறேன். இதற்காக, ரூபா 200 மில்லியன் ஒதுக்க முன்மொழிகிறேன்.

16. சமூகப் பாதுகாப்பு

சமூக அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பில் இலங்கையின் சாதனைகள் பெரும்பாலான வளர்ச்சியடைந்துவரும் நாடுகளை விட அதிகமாகக் காணப்படுகின்றன. உள்நாட்டு மக்கள் தொகை மற்றும் சமூக இயக்கவியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காரணமாக குறிப்பாக சிறிதாகி வரும் குடும்ப அலகுகள், முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு, ஊழியப் படையில் பெண்களின் குறைந்த பங்கேற்பு மற்றும் சுருங்கி வரும் தொழில் சந்தை ஆகியவை நாட்டில் ஒரு சவாலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. மேலும், சிறுவர்கள், நலிவுற்ற பெண்கள், முதியவர்கள், வறியோர் மற்றும் ஊனமுற்றோர் உள்ளிட்ட சில பிரிவுகளிடையே சமத்துவமின்மை மற்றும் வலுவற்ற நிலை காணப்படுகிறது. எனவே, உற்பத்திறனான மற்றும் சம பங்காளிகளாக சமூகத்தில் ஒன்றிணைந்து அவர்களைப் பாதுகாத்து அதிகாரம் அளிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

* “அஸ்வெசும ” நலன்களை அதிகரித்தல்

வலுவிழந்த சமூகங்களின் சுமையைக் குறைக்க, சமூகப் பதிவேட்டில் உள்ளவர்களுக்கு காசு மானியங்களை அதிகரிப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு நிகர செலவினத்தை 2025 இல் ரூபா 232.5 பில்லியனாக உயர்த்தியுள்ளது. வறியவர்கள் மற்றும் மிக வறியவர்கள் ஆகிய இரு சமூகக் குழுக்களுக்கும் வழங்கப்படும் மாதாந்த காசுக் கொடுப்பனவானது முறையே ரூபா 8,500 முதல் ரூபா 10,000 வரையும் ரூபா 15,000 முதல் ரூபா 17,500 வரையும் 2025 சனவரி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இடைமாறு சமூக குழுவாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காசுக் கொடுப்பனவுகளுக்கான காலமானது 2025 மார்ச் 1 இல் முடிவடைகின்றது. அக்காலத்தை 2025 ஏப்ரல் 30 வரை நீடிப்பதற்கு நாங்கள் முன்மொழிகிறோம். தகுதி பெற்ற அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெற்றவர்களுக்கு உள்வாங்கப்படுவதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை அளிப்பதற்கான கணக்கெடுப்பை 2025 மே மாதத்தில் நிறைவுசெய்வற்கு எதிர் பார்க்ப்படுகின்றது.

* சிறுநீரக நோயாளிகள்,ஊனமுற்றோர்,முதியோர் கொடுப்பவை அதிகரித்தல்

சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை ரூபா 7,500 லிருந்து ரூபா 10,000 ஆகவும், முதியோருக்கான மாதாந்திர கொடுப்பனவுகளை ரூபா 3,000 லிருந்து ரூபா 5,000 ஆகவும் 2025 ஏப்ரல் முதல் அதிகரிக்க நான் முன்மொழிகிறேன் .

*நிலையான மாற்றத்திற்காக “அஸ்வெசும” பயனாளிகளை வலுவூட்டுதல்

அரசாங்கக் கொள்கையின்படி, அரசாங்க நிதி மற்றும் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி 1.2 மில்லியன் “அஸ்வெசும” பயனாளிகள் வலுவூட்டப்படுவார்கள். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி நிதியளிக்கும் கருத்திட்டங்களின் உதவியுடன், முன்னோடித் திட்டத்தின் கீழ் வலுவூட்டுவதற்காக சுமார் 25,000 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தகுதியுடைய குடும்பங்கள் உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி படிப்படியாக வலுவூட்டப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் வலுவூட்டல் நிழ்ச்சித் திட்டத்திற்கான ஒதுக்கத்தை ரூபா 500 மில்லியனால் அதிகரிக்க முன் மொழிகின்றேன்.

அரசாங்கமானது ஏற்கனவே பல நலன்புரி நடவடிக்கைகளை அறிமுகம் செய்து அமுல்படுத்தி வருகின்றது. சமூகத்தில் கீழ் மட்டத்திலுள்ள குழுக்களின் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவசியமான கல்வியுடன் தொடர்புபட்ட எழுது கருவிகள் மற்றும் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக ரூபா. 6,000 கொடுப்பனவினை பெற்றுக் கொடுக்கின்றது. பொருளாதார நெருக்கடி விளைவுகளால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 2024 ஒக்டோபர் தொடக்கம் 2025 மார்ச் வரை ரூபா. 3 பில்லியன் பெறுமதியான மண்ணெண்ணெய் மானியம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

*நன்னடத்தையில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலனை மேம்படுத்துதல் – சான்றளிக்கப்பட்ட பாடசாலைகள்,தடுப்பு இல்லங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களை புதுப்பித்தல்

தற்போது, 379 சான்றளிக்கப்பட்ட பாடசாலைகள் / தடுப்பு இல்லங்கள் / சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 47 நிறுவனங்கள் அரசாங்கத்தால் இயக்கப்படுகின்றன. இந்த இல்லங்களில் வசதிகள் மிகக் குறைவாக உள்ளன, மேலும் சில இடங்களில் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சில கட்டிடங்களுக்கு பழுதுபார்ப்பு தேவைப்படுகிறது, மேலும் சில மாவட்டங்களிலுள்ள கட்டிடங்களில் போதிய இடம் இல்லை.

எனவே, பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்தியை மேம்படுத்தி சிறுவர் பராமரிப்பு மையங்களின் திறனை மேம்படுத்துவதற்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

* நிறுவனமயப்பட்ட சிறுவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று திரும்புவதற்கான சிறுவர் நட்பு போக்குவரத்து அமைப்பை நிறுவுதல் – சிறுவர் குற்றவாளிகளின் போக்குவரத்து.

போக்குவரத்து வசதிகள் இன்மை உட்பட பல காரணங்களால் நிறுவனமயப்பட்ட சிறுவர்கள் வலுவற்ற நிலையில் உள்ளனர். அதனால் தேவையான வாகனங்களைகொள்வனவு செய்வதற்காக 2025 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு ரூபா 250 மில்லியன் ஒதுக்க நான் முன்மொழிகிறேன் .

*அனாதைச் சிறார்கள் மற்றும் இளைஞர்களின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தல்

கண்ணியமான மற்றும் பாதுகாப்பாக வாழ்க்கைக்கான சந்தர்ப்பத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்வதானது அரசாங்கம் அர்ப்பணிப்பு மற்றும் எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு உட்பட்டதாகும். ஆகவே, நாங்கள் அநாதைச் சிறார்களுக்கு ஒரு முழுமையான சமூகப் பாதுகாப்பு மற்றும் வீட்டுப் பொதியினை முன்மொழிகிறோம். வலுவூட்டப்பட்ட தனி நபர்களாக நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான பங்களிப்பை அளிக்கக் கூடிய வகையில் அவர்களது நலன்கள் உறுதிப்படுத்தப்பட்டு மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைக்கக் கூடிய வகையில் இம் முன்முயற்சியானது திறன் அபிவிருத்தி மற்றும் நிதிப் பாதுகாப்புடன் கூடிய நீண்டகால ஆதரவை அளிக்கும்.

2025 வரவுசெலவுத் திட்டமானது அரச நிறுவனங்கள் மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களில் வசிக்கும் சிறுவர்களின் நலன்களுக்கான திட்டங்களை முன்மொழிந்துள்ளது. இம்முன் மொழிவுகளை அமுல்படுத்தும்போது உரிய நிறுவனங்கள் பின்வரும் விடயங்களை முன்னுரிமை படுத்தல் வேண்டும்.

i. நிறுவகப்படுத்தப்பட்ட சிறுவர்கள், மற்றும் அநாதைகளுக்கு ரூபா. 5,000 மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படும். இதில் ரூபா. 2,000 சிறுவரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுவதோடு மீதி ரூபா. 3,000 ஆனது சிறார்களின் செலவுகளுக்காக அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் சிறார்களின் சட்டப்படியான பாதுகாவலருக்கு பெற்றுக் கொடுக்கப்படும். இதற்காக 2025 வரவுசெலவுத் திட்டத்தில் ரூபா. 1,000 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது.

ii. இதற்கு மேலதிகமாக இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு மற்றும் பாதுகாப்புடன் தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு உதவி செய்ய கூடிய குடும்ப பின்புலம் அல்லது ஆதரவு முறைமையற்றவர்களாகக் காணப்படுகின்றனர். ஆதலால் இவ் நலிவடைந்த சமூகத்தினர் வீடுவாங்குவதற்கு முடியாமையினால் திருமணங்களை காலம் தாழ்த்துகின்றனர். இது அவர்களை சமூக அழுத்தம் மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு இட்டுச் செல்கின்றது. யதார்த்தத்தைக் கருத்திற்கொண்டு அவர்கள் ஒரு நிலையான வீட்டைக் கற்றுக்கொள்வதற்கு ஒரு மில்லியன் ரூபா வீட்டு மானியம் பெற்றுக் கொடுப்பதற்கு முன்மொழிகிறேன். இதை அமுல்படுத்துவதற்கு 2025 வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங்கமானது ரூபா 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

iii. சிறுவர் கவனிப்பு விடுதிகள் மற்றும் அரசாங்க புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள சிறார்களை அண்மிய தேசிய பாடசலைகள் அல்லது மாகாண பாடசாலைகளில் சேர்த்து முறையான கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பங்களில் உதவி செய்தல்.

iv. புனர்வாழ்வு மையங்களில் புனர்வாழ்வளிக்கப்படும் இளைஞர்களுக்கு தேசிய தொழில் தகைமை மட்டம் 3 அல்லது 4 சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் தரமான தொழில் / திரன் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய புனர்வாழ்வளிப்பு முறையியல்களை பின்பற்றுதல் இதன் மூலம் அவர்கள் விடுதலை பெறும் போது தொழில் வல்லமையுடன் அல்லது வாழ்வாதாரத்துடன் சமூகத்தில் நல்லவர்களாக மற்றும் திறனான பிரசைகளாக சேர்க்கப்படுவர். இவர்கள் சமூகத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தினால் பின்தள்ளப்படாமல் பொருத்தமான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பொலிஸ் / கிராமசேவகர் நற்சான்றுதழ்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான முறையியலை அபிவிருத்தி செய்தல்.

v. நிறுவகப்படுத்தப்பட்ட சிறார்கள் அவர்களது 18 வயதின் பின்பு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்படும் போது மற்றும் அவர்களின் திருமணத்தின்போது (விசேடமாக பெண்கள்) அரசாங்க வீட்டு உதவிகள், பயிற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுப்பதில் முன்னுரிமைகள் அளிக்கப்படும்.

vi. நிறுவகப்படுத்தப்பட்ட சிறார்கள் 18 வயதை தாண்டிய பின்பும் சமுதாயத்தில் மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு பொருத்தமான நிலையில் இல்லாதவர்கள் பல்வேறுபட்ட நபர்களினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதை தவிர்க்கும் நோக்கில் அவர்கள் தொடர்ந்தும் அதே நிறுவகத்தில் வாழ்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டமானது திருத்தப்படும்.

*மாற்றுத்திறனாளிகள் பற்றிய தரவுத்தளம்

மக்கள்தொகையில் கணிசமான எண்ணிக்கையிலானோர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பரவல், எதிர்நோக்கும் சிரமங்கள், கல்வி நிலை, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஆற்றல்கள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய நம்பகமான தரவுத்தளம் எம்மிடம் இல்லை என்பதை நான் அறிவேன். எனவே, 2025 ஆம் ஆண்டில் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான செயலகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பற்றிய விரிவான தரவுத்தளத்தை நிறுவ ரூபா 100 மில்லியனை ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

*அனர்த்த நிவாரணம்

அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்கும் நிரந்தர ஊனமுற்றவர்களுக்கும் இழப்பீடாக தற்போது ரூபா 250,000 வழங்கப்படுகின்றது. அதன்படி, இயற்கை பேரழிவுகள் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள் உட்பட அனைத்து காரணிகளாலும் ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனம் என்பவற்றுக்காக இந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.1,000,000 இனை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குடியிருப்பு நிலையங்களுக்கு, இதுவரை இழப்பீடு வழங்கப்படாத சொத்து சேதங்களுக்காக ரூபா 2.5 மில்லியன் இழப்பீடு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

*உள ஆரோக்கியம்

இளம் பருவத்தினரிடையே துரதிர்ஷ்டவசமான தற்கொலை சம்பவங்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இப் பிரச்சினையின் தீவிரத்தை சமூகப் பிரச்சினையொன்றாக அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, மனநலப் பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு ஆலோசனை சேவைகளை வயது வந்தவர்களுக்கு சுகாதார அமைச்சினூடாகவும் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் விரிவுபடுத்தவும் வசதிகளை மேம்படுத்தவும் ரூபா 250 மில்லியனை ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

*உதவிச் சாதனங்களை உள்ளூரில் உற்பத்தி செய்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிச் சாதனங்கள் மிக முக்கியமானவை என்பதுடன், அவை மாற்றுத்திறனாளிகளது உடலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன. இச்சாதனங்களின் உள்ளூர் உற்பத்தி வசதிகளை வசதிகளை அனைத்து மாகாணங்களிலும் விரிவுபடுத்துவதற்கான முழுமையான நிகழ்ச்சித்திட்டமொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. எனவே, 2025 ஆம் ஆண்டில் இந்நோக்கத்திற்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்க நான் முன்மொழிகிறேன். ஆரம்பத்தில், ராகமையிலுள்ள எண்பியல் மற்றும் புனர்வாழ்வு வைத்தியசாலையில் உதவிச் சாதன உற்பத்தி வசதியினை தேசிய மையமாக விரிவுபடுத்தப்படுவதுடன், மேலும் தேவைக்கேற்ப பிராந்திய தயாரிப்பு நிலையங்களும் நிறுவப்படும்.

*புத்தாண்டு காலத்தில் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுத்தல்.

அரசாங்கமானது சலுகை விலையிலான “பருவகால உணவுப்பொருள்” பொதியை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அதிகரித்த வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான ஆதவு நடவடிக்கையாக தாங்கிக்கொள்ளக்கூடிய விலையில் அத்தியவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வசதியளிக்கின்றது. எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக இதன் அடிப்படையில் அரிசி, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், பருப்பு,வெங்காயம், கிழங்கு மற்றும் கருவாடு உள்ளடங்கிய உலர் உணவுப்பொதியொன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்மொழியப்படுகின்றது. இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ரூபா. 1,000 மில்லியன் நிதி ஒதுக்குவதற்கு முன்மொழிகிறேன்.

17. புலம்பெயர் தொழிலாளர்கள்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் அபிவிருத்தியில் முக்கியமானதொரு பங்கை வகிக்கின்றனர். இது வெளிநாட்டு மாற்றல்கள் மற்றும் அவர்கள் திரும்பி வரும்போது அவர்கள் நாட்டிற்கு கொண்டு வருகின்ற திறன்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். இலங்கையர்களான இம்முக்கியமான சமூகத்தினை வெகுமதி அளித்து ஊக்குவிப்பதற்கான வழிகளை நாங்கள் ஆராய்கின்றோம். இதன் முதற்படியாக இலங்கையை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் போது மேலும் தாராளமன தீர்வையற்ற கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்கான அளவுகோள்கள் மற்றும் அடிப்படைகளானது தெரிவுகள் தொடர்பான விரிவான ஆய்வின் பின்பு நிர்ணயிக்கப்பட்டு பிரசுரிக்கப்படும்.

18. சிரேஷ்ட பிரசைகளுக்கான விசேட வட்டி

சிரேட்ட பிரசைகளுக்கான விசேட வட்டித் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு முன்மொழிகின்றோம். இத் திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட தனிப்பட்டவர்கள் ஒருமில்லியன் ரூபா வரையும் ஒருவருட நிலையான வைப்பிற்கு சந்தையில் காணப்படும் வட்டி வீதத்திற்குமேலதிகமாக 3 சதவீத் மேலதிக வட்டி வீதத்திற்கு தகுதி பெறுகின்றனர். சிரேட்ட பிரசைகளுக்கு 3 சதவீத மேலதிக மானிய வட்டியைப் பெற்றுக் கொடுத்து இத் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ரூபா 15,000 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றேன். இத்திட்டம் 2025 யூலை மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

19. போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குதல்

ஆகவே அரசாங்கமானது போதப்பொருளற்ற சமூகம் ஒன்றை தண்டனைகளுக்கு அப்பாற்பட்ட பன்முகத் தன்மையுடன் கூடிய அணுகுமுறைகளினூடாக உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. ஆகவே விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சிகள், உளநல ஆலோசனைகளுடன் புணர்வாழ்வளித்தல் சமூக வலுவூட்டல் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கி ஒரு முழுமையான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். அதன்படி இம்முழுமையான நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தி போதைப் பொருளிலிருந்து விடுதலை பெற்ற சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு ரூபா. 500 மில்லியனை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

20. தண்டனைக் கைதிகளுக்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

தற்போது நாடுபூராகவும் காணப்படும் 37 சிறைச்சாலைகளில் ஏறக்குறைய 30,000 சிறைக்கைதிகள் உள்ளன அவர்களில் 1/3 பகுதியினர் தண்டனைக் கைதிகளாகவும் மற்றவர்கள் விளக்கமறியல் கைதிகளாகவும் காணப்படுகின்றனர். சிறைச்சாலைகலானது கைதிகளினால் நிரம்பி வழிவதனால் சிறைக்கைதிகளினது வாழ்க்கைத்தரமானது மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இது சிறைக்கைதிகளும் மனிதர்கள் என்ற கருத்தினை மீறுகின்றது.

ஏறக்குறைய 65 சதவீதமான சிறைக்கைதிகள் 40 வயதுக்குட்பட்ட தங்களது வேலை செய்யும் வயதில் உச்சத்தில் உள்ளனர்.

ஆகவே, தொழில்வாய்ப்பு மற்றும் சந்தைக் கேள்வியுள்ள திறன் அபிவிருத்தி பயிற்சி நெறிகளை தொழிற் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து நடாத்துவதற்கும் மற்றும் உரிய தொழிற் தகைமைச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுப்பதற்கும் நான் முன்மொழிகிறேன். இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஏற்கனவே இருக்கும் ஒதுக்கத்தை 100 மில்லியன் ரூபாவால் அதிகரிக்க முன்மொழிகிறேன்.

21. பொது போக்குவரத்துத் துறையினை நவீனமயமாக்கல்

ஆற்றல்மிக்க போக்குவரத்து முறைமையானது மக்களின் பொருளாதார ஈடுபாடுகள் மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கான அடைவினை மேம்படுத்துவதற்கு முக்கிய ஒரு கூறாகும்.

எனவே, புதிய தொழில்நுட்பங்களுடன் தற்போதுள்ள பொதுப் போக்குவரத்து முறைமைகளை மேம்படுத்துவதும், குறிப்பாக நகர மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய போக்குவரத்து முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகும். அதன்படி, வீதி மற்றும் புகையிரதப் போக்குவரத்து முறைகளை மேம்படுத்துவதும் நவீனமயமாக்குவதும் காலத்தின் கட்டாயமாகும்.

*பேருந்துத் துறை நவீனமயமாக்கல்

பொதுத்துறை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக முன்னோடி அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன மற்றும் வசதியான பேருந்துகளின் தொகுதி அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, கொழும்பு பெருநகரப் பகுதிக்குள் மூன்று முக்கிய சாலை வழித்தடங்களில் 100 ஏர்-சஸ்பென்ஷன், தாழ்தள, வசதியான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். 100 தாழ்தள பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கீடுசெய்ய நாம் முன்மொழிகிறோம் இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபையானது தனது சொந்த நிதியில் 200 தாழ்தள பிரயாணிகள் பேருந்துகளை தனது பேருந்து தொகுதிக்குள் சேர்த்துக் கொள்ளும்.

இந்தப் பேருந்துகள் கூட்டாக மெட்ரோ பேருந்துக் கம்பணிகள் எனப்படும் புதிதாக நிறுவப்பட்ட கம்பனிகளின் கீழ் இயக்கப்படும்.

புகையிரதத் துறை நவீனமயமாக்கல்

புகையிரத அடிப்படையிலான பொதுப் போக்குவரத்தானது நீண்ட தூரம் அதேபோன்று நகர மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். எவ்வாறாயினும் தற்போதுள்ள புகையிரதங்களின் தரமானது பயனிகளின் பாதுகாப்பு, சொகுசு மற்றும் வேகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டிற்குள்ளே புதிய புகையிரத பெட்டிகளை நிர்மாணித்தல் மற்றும் பராமரிப்புச் செய்வதில் கவனம் செலுத்தி புகையிரத முறைமையை ஒரு கைத்தொழிலாக உருவாக்குவது முக்கியமானதாகும்.

அதன்படி, முதல் கட்டமாக, சேவைகளின் செயல்திறனை மேம்படுத்தவும், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் 200 பயணிப் பெட்டிகளை மறுசீரமைக்கும் நோக்கில் பழைய ரயில் பயணிப் பெட்டிகளை மறுசீரமைக்க ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகிறேன்.

மேலும், நாட்டில் புதிய பயணி ரயில் பெட்டிகளின் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு புதிய ரயில் பெட்டிகளின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு புகையிரத திணைக்களத்திற்கு 2025 ஆம் ஆண்டிற்கு ரூபா 250 மில்லியனை ஒதுக்க நான் முன்மொழிகிறேன்.

வினைத்திறனான புகையிரத சேவையை வழங்குதல் மற்றும் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் தற்போது அவிசவெல வரை செயற்பட்டு வரும் களனி வெளி புகையிரதப் பாதையை கட்டம் கட்டமாக அவிசாவெலக்கு அப்பால் நீடிப்பதற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பிப்பதற்கு 2025 வரவுசெலவுத் திட்டத்தில் ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்படும்.

அரசாங்கம் கண்டி பல் மூல போக்குவரத்து முனைய அபிவிருத்தி கருத்திட்டத்தில் தொடர்ந்தும் முதலீடு செய்யும். இது பிராந்திய அபிவிருத்தியில் மேலிருந்து கீழ் நோக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

*விவசாய உற்பத்திகளுக்கான ரயில் போக்குவரத்து

அதிக செலவு, போக்குவரத்தின் போதான அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள், வீதி நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்கள் காரணமாக வீதி வலையமைப்பு வழியாக விவசாயப் பொருட்களை கொண்டு செல்வது பாரிய சவாலாகவே காணப்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய, உற்பத்தி மையங்களிலிருந்து விவசாயப் பொருட்களை ரயில் மூலம் கொண்டு செல்வதற்கான பிரத்யேக போக்குவரத்தை அறிமுகப்படுத்த நாங்கள் முன்மொழிகிறோம்..

இந்தத் கருத்திட்டம் அதன் தொழில்நுட்ப மற்றும் நிதி நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கான சாத்தியவள ஆய்வினை தொடங்கும். இதற்கு மேலதிகமாக, சாத்தியவள ஆய்வின் பரிந்துரையின் பேரில், தம்புத்தேகம ரயில் நிலையத்தை களஞ்சிய வசதிகளுடன் பொருட்ளை கையாளல் தளங்களையும் இணைத்து அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த முன்னெடுப்புக்கு ஒத்துழைக்கும் வகையில், ஆரம்ப கட்டமாக சாத்தியவள ஆய்வினை முன்னெடுப்பதற்காக ரூபா 100 மில்லியன் ஒதுக்கீட்டை நாம் முன்மொழிகிறோம்.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் கடனுக்கான தீர்வு

ஶ்ரீலங்கன் விமான சேவையானது, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் முன்னணி விமான சேவையை வழங்குனராக செயற்படுகின்றது. கடந்த அரசாங்கமானது அரச உடைமை தொழில் முயற்சிகளை விற்பனை செய்து தனியார் முதலீடுகளை கவருவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சியானது வெற்றியளிக்கவில்லை.

இச் சூழ்நிலையில் ஶ்ரீலங்கன் விமான சேவையானது கடன்பெற்றுள்ள வங்கிகளுடன் அரசாங்கமானது உடன்படிக்கையொன்றினைக் கைச்சாத்திட்டு 2025 இல் கடன் மூலதன மீள்கொடுப்பனவுக்காக ரூபா 10,000 மில்லியனையும் வட்டிக்கொடுப்பனவுக்காக ரூபா 10,000 மில்லியனையும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இக்கடன்களானது அரசாங்கத்தினால் தீர்க்கப்பட்டவுடன் தொழிற்பாட்டு இலாபத்தன்மை உறுதி செய்வதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை முழுமையாக பொறுப்பாகவிருக்கும். இந்நோக்கில் கம்பனியினால் புதிய நடுத்தரகால உபாயத்திட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய இந்நோக்கத்திற்காக ரூபா 20,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றேன்.

*வீதி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்

குடிமக்களை சந்தைகள் மற்றும் பொது இடங்களுக்கு தொடர்பு படுத்துவதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளில் வீதி வலையமைப்பானது ஒரு முக்கியமான கூறாகும்.

எனவே, வளர்ச்சி குன்றிய கிராமங்கள், சுற்றுலா தலங்கள், தொழிற் பேட்டைகள் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் /பகுதிகளை இணைக்கும் வீதிகளுக்கு முன்னுரிமை அளித்து, கிராமிய வீதிகளை மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்கும் ஏற்கனவே நாடுபூராகவும் கிராமிய வீதிகளை அபிவிருத்திசெய்வதற்காக ஒதுக்கப்படுள்ள ரூபா. 26,680 மில்லியனுக்கு மேலதிகமாக ரூபா 3,000 மில்லியனை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்.

அனைத்து வீதிப்பாவனையாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்தினை உறுதி செய்வதற்காக கிராமிய பாலங்களை புணரமைப்பதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 1,000 மில்லியனுக்கு மேலதிகமாக ரூபா. 1,000 மில்லியன் ஒதுக்குவதற்கு நாங்கள் முன் மொழிகிறோம்.

வடமாகாணத்தில் உள்ள கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள்

பிரதான அபிவிருத்தி நீரோட்டத்திலுருந்து வடமாகாணமானது பாரிய அளவில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். எவ்வறாயினும் அது எமது பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய அளப்பரிய ஆற்றலை கொண்டுள்ளது. அதனடிப்படையில் அடிப்படை உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கவனம் செலுத்தி வடமாகாணத்தில் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை மேம்படுத்துவதங்காக ரூபா. 5,000 ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றேன்.

முல்லைத்தீவில் வட்டுவாகல் பால நிர்மாணம்

வட்டுவாகல் பாலம் நந்திக்கடல் களப்பின் முகத்துவாரத்தில் முல்லைத்தீவு, புதுக்குடுயிருப்பு, யாழ்ப்பாணத்தை இணைக்கும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு ஒடுங்கிய பாலமாகும். இது பயணிகளுக்கு ஆபத்தான மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தித் தேவைகளுக்கு ஏற்றவாறு ஒரு பாலத்தினை நிர்மாணிக்க நாம் முன்மொழிகிறோம். அதற்கிணங்க அக்கட்டுமான வேலைகளை ஆரம்பிக்க இவ் வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழிகிறோம்.

22. பிராந்திய அபிவிருத்தி

உற்பத்திப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ரூபா 10 மில்லியன் 2025 இல் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டமாக பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்படும். இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூபா 11,250 மில்லியன் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டிலிருந்து ரூபா 2,250 மில்லியனைப் பயன்படுத்துவதற்கு நான் முன்மொழிகிறேன். எஞ்சியுள்ள ரூபா 9,000 மில்லியன் அத்தியாவசிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும்.

23. மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்காக வருடாந்தம் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கமானது பெருமளவு முதலீடுகளை மேற் கொண்டாலும் பல மாவட்டங்களில் தொடர்ந்தும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலுள்ளன. இக்குறிப்பிட்ட பிரச்சினையானது உட்கட்டமைப்பு அபிவிருத்தி, உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த வினைத்திறனான சேவை வழங்கல், வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல், நிறுவக ரீதியாக மேம்பாடு ஆகியவற்றில் தொடர்புபட்டதாக இருக்கலாம். உள்ளடக்கிய நிலைபேறான அபிவருத்தியை அடைந்து கொள்ளும் வேலையில் மேற்கூறப்பட்ட இடைவெளிகள் மற்றும் புதிதாக தோற்றம் பெற்றுள்ள மாவட்டங்களின் தேவைகளும் தீர்க்கப்படல் வேண்டும். இது அம்மாவட்டத்தின் உள்ளூர் சமூகங்கள் சிறப்பான வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் மற்றும் தனியார்துறையினர் மாவட்டத்தின் பொருளதளார அபிவிருத்திக்கு அவசியமான முதலீட்டை கொண்டு வருவதற்கும் வழி வகுக்கின்றது. மாவட்ட மட்டத்தில் மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூபா 2,000 மில்லியன் ஒதுக்குவதற்கு நாங்கள் முன்மொழிகின்றோம்.

24. கிழக்கு மாகாண அபிவிருத்தி

கிழக்கு மாகாணம் பொருளாதார அபிவிருத்திக்கான பெரும் சாத்தியக்கூறுகளைக் கொண்ட மாகாணங்களில் ஒன்றாகும். எனவே, கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய துறைகளில் முக்கியமாக கவனம் செலுத்தி, உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய பல்துறை மானிய உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் விரிவான அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம்.

25. மலையக தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள்

இலங்கை தேசத்தின் ஒரு அங்கமான மலையக மக்கள் நீண்ட காலமாக அதிக சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், இந்த சமூகத்தின் வாழ்வாதாரங்கள் இன்னும் ஒரு சிறந்த வாழ்க்கைக்கான தரத்திகை விடக் குறைவாகவே உள்ளது.

அதன்படி, பின்வரும் முன்னெடுப்புக்களை ஆதரிக்க ரூபா 7,583 மில்லியன் ஒதுக்கீட்டினை நாம் முன்மொழிகிறாம்

i. பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ரூபா 4,267 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ii. மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ரூபா 2,450 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

iii. மலையக தமிழ் சமூகத்தின் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு ரூபா 866 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

26. கைத்தொழில் அபிவிருத்தி

இலங்கையின் கைத்தொழில்துறையானது பொருளாதாரத்தில் பிரதானமாக வேலை வாய்ப்புகளை வழங்குதல், வருமானத்தை அதிகரிப்பது, புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் ஏற்றுமதிகளை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, பின்வரும் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

*இரசாயனப் பொருள் உற்பத்திக்கான பிரத்தியேகமான கைத்தொழில் பேட்டை

இலங்கையின் பரந்தன் கனிம வளங்களுக்கு பெறுமதி சேர்ப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு அத்தியாவசியமான கைத்தொழில் உள்ளீடுகளை வழங்கும் நோக்கத்துடன், அமிலங்கள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட இரசாயன பொருட்கள் உற்பத்திக்காக வட மாகாணத்தில் உள்ள பரந்தனில் ஒரு கைத்தொழில் பேட்டையை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. காங்கேசன்துறை மாங்குளம், புத்தளம் மற்றும் காலி போன்ற இடங்களில் 5 கைத்தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். அதற்கென ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நாம் முன்மொழிகிறோம்.

*வாகன மற்றும் இறப்பர் உற்பத்திக்கு தனியான கைத்தொழில் பேட்டை

உள்நாட்டில் பெறுமதி சேர்க்கப்பட்ட வாகன தயாரித்தல் / ஒன்று சேர்த்தல் கைத்தொழிலிலும் இறப்பர் உற்பத்தி தயாரித்தலிலும் குறிப்பிடத்தக்க முதலீட்டு மட்டம் ஏற்றுமதிச் சந்தையில் போட்டிமிக்கதாக தோற்றம் பெறுவதற்கு பாகங்கள் தயாரித்தல் கைத்தொழில் மூலம் வேண்டப்படுகின்ற கேள்வியை நிறைவு செய்வது முக்கிய காரணியாக விளங்குகின்றது.

இந்த நோக்கத்துடன், வாகன உதிரிபாகங்கள் மற்றும் இறப்பர் உற்பத்திக்காக தனியான ஒரு தொழிற்பேட்டையை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது. இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் கைத்தொழில் அமைச்சின் கீழ் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கீட்டினுள் இந்நோக்கத்திற்கான தேவையினை முகாமை செய்வதற்கு முன்மொழிகின்றேன்.

27. கிளீன் ஶ்ரீ லங்கா

கிளீன் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சித்திட்டம் என்பது இலங்கையையும் முழு இலங்கை சமூகத்தையும் நிலையாக உயர்த்துவதற்காக சமூக அபிவிருத்தி, சுற்றாடல் அபிவிருத்தி மற்றும் நெறிமுறை அபிவிருத்தி ஆகிய மூன்று பிரதான தூண்களினூடாக நடைமுறைப்படுத்தப்படும் ஒரு பாரிய நிகழ்ச்சித் திட்டமாகும். இதற்காக, அரச இயந்திரம், தொழில்முனைவோர், வணிகர்கள், தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகம், சர்வதேச உதவி நிறுவனங்கள், பல்வேறு தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவைப் பெற ஒட்டுமொத்த பொதுமக்களும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

இதன் கீழ், இலங்கை சமூகத்தின் பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் பல்வேறு மக்களிடையே தொடர்பு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் அனுபவிக்கக்கூடிய கலாச்சார விழாவை நடத்துதல், நமது நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான சதவீதத்தைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகளை உருவாக்குதல், முச்சக்கர வண்டிகள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற வசதியாளர்களின் நெறிமுறைகள் மற்றும் திறனை மேம்படுத்துதல், புராதன அடையாளத்துடன் புராதன பாரம்பரியம் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களை புனரமைத்தல், குறைந்த வசதிகள் கொண்ட தெரிவு செய்யப்பட்ட மாகாண பாடசாலைகளுக்கு கட்டிடங்களை புனரமைத்தல், பாடசாலை உபகரணங்களை புனரமைத்தல் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், முன் குழந்தை பருவ வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்போடு உயர்தர கற்றல் சூழலை உருவாக்குதல், நகர்ப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், வீதிப் பாதுகாப்பை ஊக்குவித்தல், போதைப்பொருள் தடுப்பு, தெருவிலங்குகளை நிர்வகித்தல், திண்மக் கழிவு முகாமைத்துவம், கடற்கரையை கவர்ச்சிகரமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு நிலையானதாகவும் மாற்றுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் மற்றும் ஆறுகளில் நீரின் தரத்தை மேம்படுத்துதல், பொதுச் சேவையை வினைத்திறனாக்குதல், உயர் வளப்பயன்பாட்டை உருவாக்குதல், துடிப்பான பொதுச் சேவையைக் கட்டியெழுப்புதல் மற்றும் தூய்மையான இலங்கைக் கருத்துருக்களை ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த நோக்கத்திற்காக, 2025 ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் நன்கொடையாளர்களின் நிதி பங்களிப்புடன் 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்.

28. திண்மக்கழிவு முகாமைத்துவம்

நாட்டின் பல பாகங்களிலும் திண்மக்கழிவு முகாமையானது ஒரு வளர்ந்துவரும் பிரச்சனையாகும். வரலாற்று ரீதியாக மற்றும் கலாச்சாரபெறுமதி கொண்ட அநுராதபுர நகரமானது இதற்கொரு உதாரணமாகும். அநுராதபுர போதனா வைத்தியசாலை மற்றும் அதிகரிக்கும் சனத்தொகை என்பவற்றினால் அநுராதபுர நகரத்தில் பொதுவான மற்றும் மருத்துவக் கழிவுகளை முகாமை செய்வது ஒரு சவாலாக உருவாகியுள்ளதோடு அது பொதுச் சுகாதாரத்தையும் மற்றும் சுற்றாடலையும் பாதித்து வருகின்றது. இதனைக் கையாள்வதற்கு கழிவு முகாமை வசதியினை உருவாக்குவதற்கு ரூபா 750 மில்லியனை ஒதுக்குவதற்கு முன்மொழிகிறேன். இம் முன்னெடுப்பானது அநுராதபுர நகரத்தின் தூய்மையை மேம்படுத்தி சுற்றாடலைப் பாதுகாத்து நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிக்கும்.

29. யானை மனித முரண்பாட்டை குறைத்தல் மற்றும் வனப் பாதுகாப்பு முயற்சிகள்

காட்டு யானைகளினால் ஏற்படுத்தப்படும் மனித உயிர் இழப்புக்கள், சொத்து அழிவு மற்றும் பயிர்சேதங்களை குறைப்பதற்காக பல நடவடிக்கைகள் அமுல் படுத்தப்பட்டு வருகின்றன. இது புதுப்பிப்பதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள 1,456 கி.மீற்றர் உள்ளடங்கலாக ஏறக்குறைய 5,611 கி.மீற்றர் நீளமான மின்சார வேலிகளை மேம்படுத்துதலும் உள்ளடக்கியதாகும். இதற்கு மேலதிகமாக வேலிகளுடன் சேர்த்து காவல் சாவடிகளை நிர்மாணித்தல், தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தல் மற்றும் ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றி யானை வாழ்விடங்கள் மேம்படுத்தல், சிறந்த புற்றரை முகாமை மற்றும் நீர்மூலங்களை மேம்படுத்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளக்கடும் . இச்செயற்பாடுகளுக்காக ரூபா 300 மில்லியன் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வனசீவராசிகள் வலய காரியாலயங்கள், பாதுகாப்பு காரியாலயங்கள், பீட் அலுவலகங்கள் உள்ளடங்கலாக 270 அலுவலகங்களின் வாண்மை அபிவிருத்திக்காக ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வொதுக்கீடுகளானது மின்சார வேலிகளின் பராமரிப்பு, வாகனங்கள் மற்றும் படகுகள் பராமரிப்பு, வனசீவராசிகள் தொடர்பான குற்றத்தடுப்பு மற்றும் யானை மனிதன் மோதலை குறைப்பதற்கான முழுமையான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும். இதற்கு மேலதிகமாக காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உட்பட்டவர்களுக்கு நட்டஈடு கொடுப்பதற்காக ரூபா 240 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது. இது உட்பட யானை மனித மோதலை குறைப்பதற்காக மொத்தமாக ரூபா 640 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக காடுகளின் இயற்கை மீளுருவாக்க ஊக்குவிப்பிற்கும் மற்றும் காடழிப்பினை கட்டுப்படுத்துவதற்கும் ரூபா 1,050 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீள்வனவாக்க செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தல், வனப்பாதுகாப்பு முன்னெடுப்புகள், வர்த்தக ரீதியான வனவிரிவாக்கம், சூழல் பாதுகாப்பு மற்றும் கண்டல்நில முகாமை என்பவற்றுக்கு ஆதரவளிப்பதற்காக இவ்வொதுக்கீடு பயன்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக சூழல் நட்பான சுற்றுலா, வனவளத்தை அதிகரித்தல் காட்டுத்தீயை கட்டுப்படுத்தல் மற்றும் காட்டுடன் தொடர்புபட்ட குற்றங்களை தடுத்தல், என்பவற்றுக்கும் வசதியளிக்கும்.

30. நிலைபேறான நிதியளிப்பு

அரசாங்கம் நிலையான நிதியளிப்பு வாய்ப்புகளை சூழல் சமூக மற்றும் ஆளுகை (ESG) அடிப்படையிலான நிதியுதவியின் இயங்கு சூழலை ஏற்படுத்த பயன்படுத்திக் கொள்ளும். காலநிலை மாற்ற முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புடைய முயற்சிகளுடன் இணைந்த உலகளவில் கிடைக்கக்கூடிய நிலையான நிதி திரட்டுகளை அணுக, சுற்றாடல் அமைச்சானது நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.

31. நிதிச் சந்தை அபிவிருத்தி

இலங்கையானது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் போது நிதித்துறையின் ஒரு அழுத்ததிற்கு உட்பட்ட காலத்திலிருந்து மீண்டு வருகின்றது. உண்மை பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நாட்டின் நிதிச் சந்தையின் அபிவிருத்தியில் தற்போது கவனம் செலுத்துவது பொருத்தமானதாகும். நிதிச் சந்தையானது அதிநவீனத்தின் அடிப்படையில் செயற்படல் வேண்டும். தனியார் மற்றும் பொருத்தமான அரச தொழில் முயற்சிகள் தேவையான நிதியினை பங்கச்சந்தையினூடாக மற்றும் கடன் மூலதனச் சந்தையினூடாக திரட்டுவதை அரசாங்கம் ஊக்குவிக்கும்.

வங்கி வட்டி வீதங்கள் தொடர்ச்சியாக குறைவடைவதினால் சில்லறை முதலீட்டாளர்களுக்கு சாதாரண இலாபத்தை வழங்கக்கூடிய சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிப் பொருட்களின் அணுகலானது மிக முக்கியமானதாகும். அலகு நிதி, முதலீட்டு நிதிகள் மற்றும் ஏனைய கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் சந்தையில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கு முக்கியமானதாக காணப்படும். பயனுள்ள ஒழுங்குபடுத்தல் சூழலுக்கு மத்தியில் உரிய விழிப்புக்கவனம் மற்றும் அவசியமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நிதித் துறையானது புதுமை மற்றும் மிகவும் சிக்கலான கொடுக்கல் வாங்கல்களை கண்டறிதல் முக்கியமானதாகும்.

32. ஆளுகை மறுசீரமைப்பு

ஊழல் என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு பாரிய தடையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக இருக்கக்கூடிய ஊழலை ஒழிப்பது ஒரு கூட்டு முயற்சியாகும். இந்த சூழ்நிலையில் அரசாங்க அதிகாரிகள் மாத்திரமன்றி தனியார் துறையினரும் ஒட்டுமொத்த பிரசைகளும் முடிவில்லாத ஊழலில் தமது பங்களிப்பை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். இது சம்பந்தமாக தேவையான சட்ட வரைசட்டகம் மேலும் வலுப்படுத்தப்படும். இலங்கையில் ஆளுகை வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறுதல் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு, ஊழலுக்கு எதிரான முன்னெடுப்புகளை மேற்கொள்ள சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் அதிகரித்த நிதி மற்றும் ஏனைய ஆதரவுடன் குற்ற வருவாய் சட்டமூலத்தை சட்டமாக்குதலும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவை மேலும் வலுவூட்டுவதும் துரிதப்படுத்தப்படும். கூட்டாக வரையவும் செயன்முறையைப் பின்பற்றி தற்போது வரைவுக்கட்டத்தில் காணப்படுகின்ற குற்ற வருவாய்கள் சட்டவாக்கத்தை மீளாய்வு செய்து நடைமுறைப்படுத்தல்.

33. இலங்கை தினம்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கக் கொள்கை வரைசட்டகம், சமூகங்களுக்கிடையேயான இடைவெளிகளைக் குறைப்பதற்கு உறுதிபூண்டுள்ள, ஒரு நல்லிணக்க இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. இணக்கம், நெறிமுறை மற்றும் நல்ல நடத்தை போன்ற குணங்களைக் கொண்ட ஒரு பண்பட்ட நபரை உருவாக்குவதற்கு வெவ்வேறு கலாச்சாரங்களைப் பயன்படுத்துவதை இது வலியுறுத்தியது.

அதன் பிரகாரம், இனக்குழுக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையர்களாக செழித்து வளரவும் “தேசிய கலாச்சார பண்டிகையினை” ஆரம்பிப்பதற்கு நான் முன்மொழிகிறேன். நமது நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடிய டிசம்பரில் ஆரம்பித்து வைக்கப்படும். அதன் பிரகாரம், இந்த நோக்கத்திற்காக ரூபா 300 மில்லியன்களை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்.

34. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு

நல்லிணக்க முயற்சிகள் மற்றும் காணிகளை விடுவிப்பதன் மூலம், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் மோதலுக்குப் பின்னர் அகதிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீள்குடியேற்றத்திற்காகத் திரும்பி வருகின்றனர். எவ்வாறாயினும், மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயன்பாடுகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.

அதன் பிரகாரம், வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக ஒரு பன்முக மூலோபாயத்தைத் முன்னெடுப்பதற்கு நாங்கள் முன்மொழிகிறோம். 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், இந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வீட்டுவசதித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும், தற்போதைய தேவையின் அடிப்படையில் வீடற்ற குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்கும் ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

35. அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் அத்தியாவசிய பராமரிப்பு

பராமரிப்பு இல்லாமை மற்றும் பயன்பாட்டிலுள்ள குறைபாடுகள் காரணமாக இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் பௌதீக நிலை மோசமாக உள்ளது. இந்த சகல கட்டிடங்களினதும் வெளிப்புறத்திலும் விரிசல், சிராய்ப்பு, அரிப்பு மற்றும் நீர் கசிவு போன்ற பல பௌதீக குறைபாடுகள் காணப்படுகின்றன.

அதன்பிரகாரம், எனவே, மத்திய அரசாங்கத்தினால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதிகளின் அத்தியவசிய பராமரிப்பிற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகிறோம்.

36. கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்பு

சீன மக்கள் குடியரசின் உதவியுடன் 1996 வீடுகள் கட்டப்படுகின்றன. அதில் கொட்டாவ, பலத்துருவத்தை பகுதியில் 108 வீட்டு அலகுகளை கொண்ட மாடி வீட்டு தொகுதி எமது சமுகத்தின் கலாசார செழுமைக்கு பங்களித்த கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கென ஒதுக்கப்படும்.

37. குடிநீர் துறை

*நடைமுறைபடுத்தப்பட்டு வரும் பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் சமூக நீர் வழங்கல் கருத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்தல்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஊடாக, நாட்டின் 62 சதவீதமான மக்கள் சுத்தமான குடிநீர் விநியோகத்தைப் பெற்றுள்ளனர்.பாதுகாப்பான நீர் வழங்களை உறுதி செய்வதன் தேசிய முக்கியதுவத்தை அடையாளம் கண்டு பொருளாதார நெருக்கடி மற்றும் குறித்த கடன் வழங்குவோரால் கடன் வசதிகள் இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக நிறைவு செய்தல் தாமதமடைந்த கம்பஹா, அத்தனகலை மற்றும் மினுவங்கொடை ஒருங்கிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டம், அளுத்கமை, அலவ்வை மற்றும் பொத்துகரை நீர் வழங்கல் கருத்திட்டம் மற்றும் தம்புத்தேகமை நீர் வழங்கல் கருத்திட்டம் என்பவற்றின் நிறைவு செய்தலை விரைவு படுத்துவதற்கு தேவையான ஒதுக்கீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அரசிறை வாய்ப்பு உள்ளபடி இரு வருட காலப்பகுதியல் ரூபா 41,234 மில்லியன் நிதியளிப்பு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும்.அதற்கிணங்க அரசாங்க பங்கு நிதியாக மேற்கூறிய கருத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு வசதியளிக்க 2025 தேசிய வரவுசெலவு திட்டத்தின் கீழ் ரூபா 20,000 மில்லியன் உள்ளடக்கப்பட்டுள்ளது

*சமூக நீர் வழங்கல் திட்டத்தின் விரிவாக்கம்

விசேடமாக குழாய் நீர் வசதிகள் குறைவான கிராமப் புறங்களில் சமூக அடிப்படையிலான நீர் வழங்கல் திட்டங்களின் அவசியத்தை நாம் உணர்கிறோம். இது வடக்குப் பகுதி மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் உள்ள பாதிப்புகளை ஒழிப்பதன் மூலம் கிராமப்புற வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக சமூக அடிப்படையிலான கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களை விஸ்தரிப்பதற்கான அவசியத்தை நான் உணர்ந்துள்ளேன்.

எனவே, 2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ் வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக நீர் வழங்கல் திட்டங்களை நிறைவு செய்வதற்கும் வடக்கு மாகாணத்தின் மீது விசேட கவனத்துடன் புதிய சமூக நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதனை நாம் முன்மொழிகிறாம்.

*கிரிபாவ- எப்பாவல நீர் வழங்கல் திட்டத்தை மீண்டும் தொடங்குதல்

வடமத்திய மாகாணத்தின் கீழ் வரண்ட வலயத்திலுள்ள கிரிபாவ மற்றும் எப்பாவல பகுதிகள் தரமான குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. இதனால் அந்தப் பகுதியின் மக்களுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. கிரிபாவ மற்றும் எப்பாவல பகுதிக்கு மேற்பரப்பு நீர் ஆதாரங்களிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் கலாவெவவிலிருந்து கலா ஓயா வழியாக நீர் வழங்கப்படும் ராஜாங்கனை குளம் மூலம் குடிநீரை வழங்குவதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்த நோக்கத்திற்காக, கிரிபாவ-எப்பாவல நீர் வழங்கல் திட்டத்தின் ஆரம்ப பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக, அந்தப் பகுதிக்கு குழாய் மூலம் நீர் வழங்குவதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்க நாங்கள் முன்மொழிகிறோம்.

38. அரச சேவையில் காணப்படும் அத்தியவசிய பதவிவெற்றிடங்களை நிரப்புதல்

அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களை அரச துறையில் பணிக்கமர்த்தும் கடந்த கால நடைமுறையை நாம் ஒழித்துள்ளோம். அரசாங்கத்தின் தொலைநோக்கிற்கு இணங்க அரசியல் தலையீடின்றி தகைமைகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் என்பன மேற்கொள்ளப்படும்.

கொவிட் -19 நோய்த்தொற்று, பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் உறுதியின்மை மூலம் தோற்றுவிக்கப்பட்ட சவால்கள் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் அரச துறை சிரமப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கு இவ்வருடத்திலிருந்து கண்டிப்பாக பதவியணி வெற்றிடங்களுக்கு அமைவாக அத்தியவசிய அரசாங்கத் துறை பதவிகளுக்கு 30,000 ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான உபாய ரீதியான ஆட்சேர்ப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். அதற்கமைய இந்நோக்கத்திற்காக 2025 இல் ரூபா 10,000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகிறோம்.

39. பொதுத் துறை சம்பள அதிகரிப்பு

கடைசி சம்பள மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு சுமார் ஒரு தசாப்தம் முடிவடைந்துள்ள படியால் இது தொடர்பான சகல காரணிகளையும் முழுமையான முறையில் தீர்க்கமாக ஆராய்ந்து சம்பள கட்டமைப்பை திருத்தியமைப்பதற்கு உரிய காலம் இதுவாகும். வரவுசெலவுதிட்டத்திற்கு அதிக சுமை ஏற்படுவதை தவிர்க்கும் அதேவேளை திறமை மற்றும் திறன்மிக்க பணியாளர்களை கவர்ந்திழுக்க அரசாங்கத்திற்கு இயலக்கூடிய வகையில் அரச துறை பணியாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை தரத்தை வழங்குவது அவசியமாகும்.

அதற்கிணங்க ஆகக் குறைந்த மாதாந்த அடிப்படை சம்பளம் ரூபா 24,250 இலிருந்து ரூபா 40,000 வரை ரூபா 15,750 இனால் அதிகரிக்கப்படுகின்றது. தற்போதுள்ள இடைக்கால கொடுப்பனவு மற்றும் விசேடகொடுப்பனவு அடிப்படை சம்பளத்தினுள் உள்ளடக்கப்படுவதால் தேறிய சம்பளத்தின் ஆகக் குறைந்த நிகர அதிகரிப்பு ரூபா 8,250 ஆகும். இது அரச துறையில் ஏற்றுக்கொள்ள தக்கதொரு சம்ள உயர்வை வழங்குமென நான் நம்புகிறேன்.

முன்மொழியப்பட்ட ரூபா 15,750 மாதாந்த அடிப்படை சம்பள அதிகரிப்பானது அதே அடிப்படையில் நீதிச்சேவை, அரச கூட்டுதாபனங்கள், நியதிச் சபைகள், பல்கலைகழக ஊழியர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோருக்கு ஏற்புடையதாகும்.

ரூபா 15,750 ஆகக் குறைந்த மாதாந்த அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக வருடாந்த சம்பள அதிகரிப்பின் பெறுமதியானது 80 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஆகக் குறைந்த வருடாந்த சம்பள அதிகரிப்பு ரூபா 250 இல் இருந்து ரூபா 450 ஆக அதிகரிக்கும். அனைத்து அரச ஊழியர்களினதும் வருடாந்த சம்பள ஏற்றம் மேற்கூறிய அதே சதவீதத்தால் அதிகரிக்கப்படல் வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.

இச் சம்பள அதிகரிப்பின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் ரூபா 325 பில்லியனாகும். தற்போதைய அரசிறை வரையறைகளை கருத்திற்கொண்டு இச் சம்பள அதிகரிப்பானது கட்டங் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். மொத்த தேறிய சம்பள அதிகரிப்பில் ரூபா 5,000 மற்றும் மீதி தொகையில் 30 சதவீதம் 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்படும். எஞ்சியுள்ள 70 சதவீதம் சமமான இரு பகுதிகளாக முறையே 2026 சனவரி மற்றும் 2027 சனவரியில் வழங்கப்படும்.

ஆகவே, இச் சம்பள அதிகரிப்பிற்காக 2025 ல் ரூபா 110 பில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. நாம் செலவின விளைவுகளை கவனமாக ஆராய்ந்து அதிகரிப்பானது எமது அரசிறை வரையறைகள் மற்றும் இலக்குகளினுள் உள்ளடக்கப்படலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

இச் சம்பள அதிகரிப்பின் ஒரு அங்கமாக 2025.01.01 ம் திகதி அல்லது அதன் பிறகு ஓய்வுபெறும் பணியாளர்களின் ஓய்வூதியமானது அவர்கள் முன்மொழியப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு சம்பள திட்டத்தின் கீழ் இளைப்பாறுகை நன்மைகளைப் பெறக் கூடிய வகையில் இப்புதிய சம்பள கட்டமைப்பின் கீழ் கணக்கிடப்படும்.

அரச ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளத்தின் அதிகரிப்பினை கருத்திற்கொண்டு அரச ஊழியர்களின் இடர்கடன் எல்லையானது தற்போதுள்ள ரூபா 250,000 இலிருந்து ரூபா 400,000 ஆக அதிகரிக்கப்படும்.

(சம்பள அதிகரிப்பின் மேலதிக விபரங்கள் தொழிநுட்ப குறிப்புகளில் பின்னிணைப்பு தரப்பட்டுள்ளது).

40. தனியார் துறை சம்பள அதிகரிப்பு

தொழில் வழங்குநர் சங்கங்கள், தனியார் துறை தொழிலாளர்களின் தேசிய ஆகக் குறைந்த சம்பளத்தை 2025 ஏப்ரலில் ரூபா 27,000 ஆகவும் 2026 இலிருந்து ரூபா 30,000 ஆகவும் அதிகரிக்க ஏற்கனவே இணங்கியுள்ளன.

41. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு

பிரதானமாக தேயிலை, இறப்பர், தெங்கு பெருந்தோடத்துறையில் ஏறக்குறைய 1.5 மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கைத்தரமானது மேலும் மேம்படுத்தப்பட வேண்டுமென அரசாங்கம் கருதுகிறது. பெருந்தோட்டத் துறையினை நோக்காக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மேலதிகமாக அவர்களது நாளாந்த வேதனத்தை ரூபா 1,700 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் உறுதியளிக்கிறது.

42. அரசதுறை ஓய்வூதியங்கள்

மேலும் அவர்களிக்கு உரித்தான சம்பளம் மற்றும் நன்மைகளை கருத்திற்கொண்டு 2020 சனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய முரண்பாட்டினை தீர்க்கும் வகையில் ரூபா 3,000 மாதாந்த அதிகரிப்பு நடைமுறைபடுத்தப்பட்டது.

2017.12.31 வரை ஓய்வுபெற்ற அனைத்து ஓய்வூதியம் பெறுபவர்களும் ஒரே சம்பள அளவுத்திட்டத்திலிருப்பதனால் 2020 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் கட்ட சம்பள அளவுத்திட்ட அடிப்படையில் 2016- 2020 வரை ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியங்களை மாத்திரம் திருத்துவதன் மூலம் ஓய்வூதிய முரண்பாடு ஒன்று தோற்றுவிக்கப்படும் என்பதை அவதானிக்கின்றேன்.

இப்பிரச்சனை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருப்பதனால் தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசிறை ஏற்பாடுகளுக்குள் கட்டம் கட்டமான விதத்தில் இது தீர்க்கப்பட வேண்டும் என்று நான் நம்புகின்றேன். 2020 சனவரி 01 இற்கு முன்னர் 3/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக 2020 ஆம் ஆண்டுக்கு ஏற்புடைய சம்பள அளவுத்திட்டங்களுக்கு நேரொத்த விதத்தில் 3 கட்டங்களில் திருத்துவதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

முதலாவது கட்டமாக 2018 சனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து ஓய்வூதியம் பெறுபவர்களினதும் ஓய்வூதியங்கள் 3/2016 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையில் 2018 ஆம் ஆண்டுக்கு ஏற்புடைய மூன்றாம் கட்ட சம்பள அளவுத் திட்டங்களுக்கு அமைவாக திருத்தம் செய்யப்படுவதுடன் 2025 யூலையிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். இக் கட்டத்திற்காக 2025 வரவுசெலவுத்திட்டத்தினூடாக ரூபா 10,000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

மேலும் சம்பள மாற்றத்தின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டங்களுடன் தொடர்புடைய ஓய்வூதிய மாற்றங்களை முறையே 2026 யூலை 2027 யூலை தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் நாம் முன்மொழிகின்றோம்.

43. சட்ட மறுசீரமைப்புகள்

விரைவான பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் பயனுள்ள பொது சேவை வழங்கலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட சிறந்த சட்ட ஏற்பாடுகளை நிறுவுவதற்காக அரசாங்கம் வரும் ஆண்டில் பல சட்ட சீரமைப்புகளை அறிமுகப்படுத்தும். இந்த சட்டங்களில் அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளின் ஆளுகையினை மேம்படுத்துவதற்கும் அரசாங்க-தனியார் பங்குடைமைகளுக்கான சட்ட வரைசட்டகம் ஒன்றை உருவாக்குவதற்கும், பெறுகை, அரசாங்க சொத்து முகாமைத்துவம், புள்ளிவிவரங்கள், தரவு பரிமாற்றம், மதிப்பீடு, சொத்து முகாமைத்துவம், நுண் நிதி, கடன், பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி ஆகியவற்றைச் சுற்றியுள்ள ஆளுகையை மேம்படுத்துவதற்குமான சட்டவாக்கம் ஆகியவை உள்அடங்கும். இந்தச் சட்டங்கள் பற்றிய மேலதிக விவரங்கள் வரவுசெலவுத் திட்டத்திற்கான பின்னிணைப்பு …… இல் காணப்படுகின்றன.

44. வருமான வழிமுறைகள்

இலங்கையின் பொருளதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் அடித்தளமானது வருமான அடிப்படையிலான அரசிறை வலுப்படுத்தல் ஆகும். 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியினை நோக்கிச் செல்லும் போது மொத்த தேசிய உற்பத்தியில் 7.3 சதவீதமாக இலங்கை உலகில் ஆகக் குறைந்த வரி வருமானம் உள்ள ஒரு நாடாகும் என்ற உண்மையினை பிரதிபலித்தது.

2025 பெப்ரவரி 1ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மோட்டர் வாகன இறக்குமதி தளர்த்தல் காரணமாக பெருமளவு வருமான அதிகரிப்பு 2025 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும். வெளியகத்துறை உறுதிப்பாட்டில் வாகனங்களின் இறக்குமதி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பதனை உறுதிசெய்வதற்காக அச்செயற்பாடு கவனமாக கண்காணிக்கப்படும். 2024 டிசம்பர் பாராளுமன்றத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏனைய வருமான வழிமுறைகள் தனியார் வருமான வரியின் வரிவிலக்கு அடிப்படை எல்லை உயர்த்தப்பட்டது, வருமான வரியின் இரண்டாவது மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் பசும்பால் மற்றும் யோகர்ட் மீதான பெறுமதிசேர் வரி அகற்றபட்டமை என்பவை ஆகும். முன்னைய ஆட்சியில் இணங்கப்பட்டிருந்த கணிக்கப்பட்ட வாடகை வருமான வரியினை நடைமுறைப்படுத்துவது இல்லையெனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வருமான இழப்பினை ஈடுசெய்வதற்காக டிஜிட்டல் சேவைகளின் மீதான பெறுமதிசேர் வரி விதிப்பு சேவைகள் ஏற்றுமதிகள் மீதான நிறுவன வருமான வரி விதிப்பு மற்றும் சிகரட்/ மதுபானம் மற்றும் பந்தயம் மீதான நிறுவன வரி அதிகரிப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 15.1 வீதம் எனும் வருமான இலக்கினை இலங்கை அடைந்து கொள்வதை இயலச் செய்யும் வகையில் மேற் கூறப்பட்ட வரிக் கொள்கை செயற்பாடுகள் தேவையான வருமானத்தை ஈட்டித்தருமென எதிர்பார்க்கப்படுகின்றது. உண்மையில் இலங்கையின் எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தின் வருமான உபாயமானது சமூகத்தில் வலுக்குன்றிய குழுவினருக்கு நிவாரணம் வழங்கும் அதேவேளை வரி நிர்வாகத்தினை வலுப்படுத்துவதன் மூலம் அரசிறை ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், வரி இணக்கத்தினை மேம்படுத்துதல் மற்றும் வலுவான கண்காணிப்பு பொறிமுறைகள் மற்றும் பரந்த டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் நிறுவனத்தை வலுப்படுத்துதல் என்பனவாகும். வரி நிர்வாகத்தில் மனித தொடர்புகளை குறைக்கும் அதேவேளை வருமான இழப்புகளை குறைப்பதற்கும் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்குமாக வரி முறைமைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பொருளதாரத்தை முறைப்படுத்துவதற்கும் வருமான சேகரிப்பை மேம்படுத்துவதற்கும் அதன் அகன்ற டிஜிட்டல் மயப்படுத்தல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இலங்கை காசற்ற பொருளாதாரத்தினை நோக்கி நகர்கிறது. வியாபாரங்களில் விசேடமாக பெறுமதிசேர்வரி பதிவு செய்துள்ள தொழில்முயற்சிகளில் காசில் தங்கியிருப்பதைக் குறைப்பதற்கு மட்டும் டிஜிற்றல் பரிமாற்றத்திற்கு வசதியளிப்பதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக விற்பனை நிலைய இயந்திரங்கள் (POS) பயன்படுத்துதல். ஒரு காசற்ற பொருளாதாரம் வரிஏய்ப்பினைக் மற்றும் சட்டவிரோத நிதிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பங்களிப்புச் செய்கின்றது.

வருமான முகவராண்மைகளை டிஜிற்றல் மயப்படுத்துவது மற்றும் முழுதான டிஜிட்டல் பொருளாதார முன் நகர்வு வருமான அதிகரிப்பு முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்களவு உந்துசக்தியை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் வருமானம் சேகரிக்கும் அதிகாரத்துவங்களின் பொறுப்பு மட்டுமல்ல. ஏனைய பல கணக்காய்வு நிறுவனங்கள் மற்றும் வரிக் கணக்காளர்கள் உட்பட பல பங்குதாரர்களுக்கு அரசாங்கம் வருவாய் இழப்பை எதிர்கொள்ளாமல் இருக்க தமது கடமைகளை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் செய்யும் கடப்பாடு உண்டு. இதன்பால் சட்டமற்றும் ஒழுங்குமுறைச் சட்டகங்களுக்கு இணங்கி நடப்பது உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2025 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் இலங்கை வருமான இலக்குகளை விஞ்சிச் செல்வதனை இவ் வரி நிர்வாக மற்றும் வரி இணக்க மேம்பாட்டு செயற்பாடுகள் இயலுமாக்கும் என நாம் நம்புகிறோம். அந்த நிலையில் வருமான இலக்குகளை அடைவதை சீர் குழைக்காத மற்றும் நாட்டின் அரசிறை மற்றும் பொருளாதால ஸ்திரத்தன்மயை உறுதி செய்யும் வகையிலும் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க முடியுமாயிருக்கும்.

45. கடன்பெறு எல்லை

2025ம் நிதியாண்டின் ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்கான கடன்பெறு எல்லை பின்னிணைப்பு II இல் தரப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக தொடர்புடைய வருமானம் மற்றும் செலவின நடவடிக்கைகள் பின்னிணைப்பு III இல் தரப்பட்டுள்ளது.மேலும் 2024 ஆம் ஆண்டின் 44ம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்திற்கமைய வரவுசெலவுதிட்ட இரண்டாவது வாசிப்புடன் சமர்பிக்கப்படவேண்டிய ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

இன்று நான் கோடிட்டுக் காட்டிய கொள்கைகள், நான் இந்தப் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதற்கான தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் அதேவேளையில், நான் மட்டும் அவற்றை உருவாக்கவில்லை. இந்தக் கொள்கைகள் நம்பமுடியாத முயற்சியின் விளைவாகும். இது ஒரு அமைச்சரவையின் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு நடவடிக்கையிலிருந்து பிறந்ததாகும். அவர்களில் பெரும்பாலோர் ஒருபோதும் பாராளுமன்றத்தில் பணியாற்றியதில்லை, ஆனால் பரந்த அனுபவமும் நடைமுறை அறிவும் கொண்டவர்கள். நமது நாட்டின் விதியை வடிவமைப்பதில் இறுதியாகக் குரல் கொடுக்கும் பல அர்ப்பணிப்புள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள சிவில் ஊழியர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் அனுபவத்திலிருந்து அவை பிறந்தன. மேலும், தங்கள் வாழ்க்கையில் தங்களை வேறுபடுத்திக் காட்டிய பல புகழ்பெற்ற, தேசபக்தி நிபுணர்களின் நம்பிக்கை மற்றும் தைரியத்திலிருந்து அவை பிறந்தன, மேலும் முதல் முறையாக உண்மையிலேயே தூய்மையான, செயல்பாட்டு மற்றும் இரக்கமுள்ள அரசாங்கத்திற்கு பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றிருந்தனர்.

இந்த அரசாங்கத்தின் பதவிகளைப் பார்த்தால், மிகவும் ஆர்வமுள்ள மற்றும் ஒழுக்கமான அரசியல்வாதிகள் சிலரையும், தங்கள் வாழ்க்கையை, தங்கள் குடும்பங்களுடனான நேரத்தையும், தங்கள் வணிக மரபுகளையும் கூட தங்கள் நாட்டை இலாபத்திற்கு மேலாகக் தியாகம் செய்த சில மிகவும் திறமையான கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் கலவையையும் நீங்கள் காண்பீர்கள். ஒன்றாக, நாங்கள் ஒரு மகத்தான முயற்சியைத் தொடங்கியுள்ளோம். வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்துள்ளோம். நமது நீதி அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளோம். மேலும், முதல் முறையாக ஊழலை மட்டுமல்ல, அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து ஊழல் தோன்றுவதையும் கூட நாங்கள் அகற்றியுள்ளோம்.

பல ஆண்டுகளாக, இலங்கையில் முதலீடு செய்யத் தூண்டப்பட்டவர்கள், எதையும் சாதிக்க முதலில் இடைத்தரகர்களிடம் முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந்தனர். அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. இந்த அரசாங்கத்தில் தெரிவுசெய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட எந்த அதிகாரியும் தங்கள் வேலையைச் செய்ததற்காகவோ அல்லது செய்யாததற்காகவோ இலஞ்சம் அல்லது சலுகைகளை நாட மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இருப்பினும், நம்மில் யாராவது சட்டத்தை வளைக்கவோ அல்லது மீறவோ வாய்ப்பில்லாத சூழ்நிலையில், பொறுப்பானவர்கள் விசாரிக்கப்பட்டு சட்டத்தின் முழு அளவிற்கும் வழக்குத் தொடரப்படுவார்கள் என்று என்னால் உறுதியளிக்க முடியும். இந்த அரசாங்கம் அதன் அணிகளில் ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இனி இலஞ்சம் கொடுக்கக் கேட்கப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை. பணத்தை எடுக்க முயற்சிப்பவர்கள்தான் பயப்பட வேண்டியவர்களாவர்.

எமது நீதித்துறை இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வளவு சுதந்திரமாகவோ அல்லது சுயாதீனமாகவோ இருந்ததில்லை. எமது பொலிஸ் படையணி இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வளவு அதிகாரம் பெற்றவர்களாகவோ அல்லது சுதந்திரமானவர்களாவோ இருந்ததில்லை. அவர்கள் அச்சமோ அல்லது சாதகமோ இல்லாமல் சட்டத்தை அமுல்படுத்துவார்கள். இருப்பினும், இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் பலர் ஊழலைத் தீர்ப்பது என்பது சட்டத்தை அமுல்படுத்துவதை விட கடினமானது என்பதை அறிவார்கள். இது அரசாங்கம் செயல்படும் விதத்தை நவீனமயமாக்குவது, அரச இயந்திரத்தை மிகவும் திறமையாகச் செயல்பட வைப்பது மற்றும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது பற்றியதாகும். இது இலஞ்சம் வாங்குவதை கடினமாக்குவதன் மூலமும், அவர்களுக்கு பணம் செலுத்துவது குறைவாக இருப்பதன் மூலமும் ஊழலின் மூல காரணத்தை நிவர்த்தி செய்யும்.

நவீன உலகத்துடன் இலங்கைக்கு இணையாக இதுபோன்ற ஒரு வாய்ப்பு இதற்கு முன்பு கிடைத்ததில்லை. சிங்கப்பூரின் ஸ்தாபக பிரதமர் லீ குவான் யூ, ஒரு காலத்தில் சிங்கப்பூர் இலங்கையின் உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்பிய கதையை நாம் அனைவரும் அறிவோம். இன்று, அனைவரின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சும் வகையில் ஒன்றுபட்ட இலங்கை, தூய்மையான இலங்கை, வளமான இலங்கை ஆகியவற்றுக்கான ஒரு வாய்ப்பை நான் காண்கிறேன். இலங்கை வேர்களைக் கொண்டவர்களான புலம்பெயர்ந்தோர்களே, நீங்கள் இலங்கையில் பிறந்திருந்தாலும் அல்லது உங்கள் பெற்றோரிடமிருந்து உங்கள் தாய்நாட்டைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், எங்களுக்கு, நீங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வெற்றியைப் பார்த்து உங்கள் நாடு பெருமையடைகிறது. எங்கள் தாய்நாட்டின் மீது நீங்கள் ஏன் நம்பிக்கை இழந்திருப்பீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களில் யாராவது, தூரத்திலிருந்து கூட, எங்கள் நாட்டிற்கு உதவுவதற்கு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இலங்கை எவ்வளவு மாறிவிட்டது என்பதை நீங்களே திரும்பி வந்து பார்ப்பதற்கு உங்களை அழைக்கிறேன். தனியார், பொது அல்லது இலாப நோக்கற்ற துறைகளில் இருந்தாலும், உங்கள் நிபுணத்துவம், உங்கள் திறமை மற்றும் உங்கள் முன்னோக்கு ஆகியவற்றை எங்கள் நாட்டிற்கு பங்களிப்பதற்காக நான் உங்களை அழைக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து மட்டுமே அடையக்கூடிய ஒரு வெற்றியை அடைவதற்கு, எங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.

நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும், நமது பிரஜைகளின் முழு திறனை அடைய ஒன்றிணைவதற்கும், ஒரு புதிய பாதையை வகுப்பதற்கும், நமது நாட்டு ஆண்களும் பெண்களும் கடந்த ஆண்டு வாக்களித்தனர். வரலாற்றில் முதல்முறையாக, வடக்கு முதல் தெற்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரை உள்ள இலங்கை மக்கள் அனைவரும் ஒரு பொதுவான நோக்கத்தின் பின்னால் ஒன்றுபட்டுள்ளனர். மதம், இனம், பாலினம், வர்க்கம் மற்றும் வயது ஆகியன இனி ஒருபோதும் நம்மைப் பிரிக்காது. இலங்கை மக்களைப் பற்றி நான் உறுதியளிக்கக்கூடிய ஒரு விடயம் இதுதான்: மக்கள் மீண்டும் ஒருபோதும் ஒருவருக்கொருவர் எதிராகப் பிரிக்கப்பட மாட்டார்கள். தங்கள் சொந்த அரசியல் அல்லது தனிப்பட்ட இலாபத்திற்காக நம்மை ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்ப முயற்சிப்பவர்களால் மக்கள் மீண்டும் ஒருபோதும் ஏமாற்றப்பட மாட்டார்கள்.

தெரிவுசெய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, நியமிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, இந்த அரசாங்கத்தின் பொதுநல ஆர்வமுள்ள ஒவ்வொரு உறுப்பினருக்காகவும், மாற்றத்தை ஏற்படுத்த எங்களுடன் இணைந்த ஆயிரக்கணக்கான கடின உழைப்பாளி, அர்ப்பணிப்புள்ள மற்றும் தேசபக்தி கொண்ட பொது ஊழியர்களுக்காகவும் நான் பேச முடியும் என்பத்தை நான் அறிவேன். நாங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம். நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். எங்கள் கொள்கைகளை நாங்கள் மீற மாட்டோம். நாங்கள் ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டோம். நாங்கள் முன்மாதிரியாக வழிநடத்துவோம், அனைத்து இலங்கையர்களையும் ஒன்றாக உயர்த்துவோம். நாம் அனைவரும் ஒன்றாக செழிப்படைவோம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பெருமைப்படுவோம், நாம் எமது வீடு என்று அழைக்கும் அழகான, புனிதமான நாட்டைப் பற்றியும் பெருமைப்படுவோம்.

இறுதியாக, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு, குறிப்பாக வரவு – செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு வாரக்கணக்கில் அயராது உழைத்த திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, வரவு – செலவுத் திட்டங்களை சரியான நேரத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு, திறைசேரியில் உள்ள அதிகாரிகளிடமிருந்து மேலும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன் என்றார்.

 

Share.
Leave A Reply