திருமண ஊர்வலத்தின் போது மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய (15) தினம் திருமண ஊர்வலம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மணமகன் அலங்காரத்துடன் குதிரை மீது ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
In Madhya Pradesh’s Sheopur district, the groom sitting on a horse suddenly died during the wedding ceremony. pic.twitter.com/AEd7LLvwKV
— Mohd Nadeem Siddiqui🇮🇳 (@nadeemwrites) February 15, 2025
அப்போது திடீரென குதிரை மீது அமர்ந்திருந்தவாறே அவர் விழுந்தார்.
அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
திருமண நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.