ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப்பதாக நான் நினைக்கின்றேன் அது சரியான விதத்தில் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப், எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தெரிவிக்கின்றார்கள் ,நீங்கள் மூன்று வருடமாக இருக்கின்றீர்கள் நீங்கள் இதனை முடித்துவைத்திருக்கவேண்டும்,என தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஒருபோதும் இதனை ஆரம்பித்திருக்க கூடாது,நீங்கள் உடன்பாட்டிற்கு வந்திருக்கவேண்டும் உக்ரைனிற்காக நான் உடன்பாட்டிற்கு வந்திருப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.