யாழ்ப்பாணம் பிரதேசத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன் மற்றும் மகனின் மகன் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து கும்பல் ஒன்றுடன் வாகனத்தில் வந்த சந்தேக நபரொருவர் தனது தந்தை, சகோதரன் மற்றும் சகோதரனின் மகன் ஆகியோரை கூரிய ஆயுதங்கள் மற்றும் வாள்களால் தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மூவரும் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் வெளிநாட்டிலிருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ளதாகவும் குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply