“நாங்கள் ஆட்­சிக்கு வந்தால் இரண்டு பௌர்­ணமி தினங்­க­ளுக்குள் பாதாள உல­கக்­கு­ழுக்கள் உட்­பட போதைப்­பொருள் வலை­ய­மைப்­புக்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்போம்” என்று தேர்தல் மேடை­களில் காட்­ட­மாகக் கூறிய ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சியில் இருக்­கின்­றது.

ஆளும் தரப்­பாக வினைத்­தி­ற­னுடன் செயற்­ப­டு­வ­தற்­கான அனு­பவம் அவர்­க­ளுக்கு குறை­வாக இருந்­தாலும், உள்­நாட்டு நிலை­வ­ரங்கள் தொடர்பில் ஆழ­மான தர­வு­க­ளு­ட­னான தக­வல்­களும், அறிவும் அவர்­க­ளுக்கு நிறை­யவே காணப்­ப­டு­கின்­றன.

அப்­ப­டி­யி­ருக்­கையில் தான் கடந்த 19ஆம் திகதி புதன்­கி­ழ­மை­ புதுக்­கடை நீதிவான் நீதி­மன்ற ஐந்தாம் இலக்க நீதி­மன்ற அறையின் சாட்சிக் கூண்டில் வைத்து, ஒழுங்­க­மைக்­கப்­பட்ட பல­குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டைய ‘சஞ்­சீவ குமார சம­ர­ரத்ன’ என்ற இயற்­பெ­யரைக் கொண்ட ‘கணே­முல்ல சஞ்­சீவ’ என்­பவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

கணே­முல்ல சஞ்­சீ­வவைச் சுட்­டுக்­கொன்றவர் சட்­டத்­த­ரணி வேட­ம­ணிந்து வந்த மஹ­ர­க­மவைச் சேர்ந்த 27 வய­தான ‘சமிந்து தில்ஷான் பியு­மங்க கந்­த­னா­ராச்சி’ என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தோடு நீர்­கொ­ழும்பு கட்­டு­வெல்­லே­கம வீதியைச் சேர்ந்த ‘பின்­புர தேவகே இஷாரா செவ்­வந்தி’ என்ற பெண்­ அவ­ருக்கு உத­வி­ய­வ­ராக காணப்­ப­டு­கின்றார்.

பிர­தான சந்­தே­க­ந­ப­ரான சமிந்து தில்ஷான் பியு­மங்க கந்­த­னா­ராச்சி, இரா­ணு­வப்­ப­யிற்சி பெற்­றவர் என்­பதும், அவர் போதைப்­பொருள் பழக்­க­முள்­ளவர் என்­பதும் 15 மில்­லியன் ரூபா ஒப்­பந்த அடைப்­ப­டையில் இந்தக் கொலையைச் செய்­த­தா­கவும் தனது வாக்­கு­மூ­லத்தில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அத்­துடன், நாட்­டுக்கு வெளியில் இருக்கும் கெஹல்­பத்­தர பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க உள்­ளிட்ட ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களின் வழி­காட்­டலில் இக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தோடு பாதா­ளக்­கு­ழுக்­க­ளுக்­களின் தலை­வர்கள் இடையே காணப்­ப­டு­கின்ற முன்­வி­ரோ­தத்தின் பழி­வாங்கும் பட­ல­மா­கவே இச்­சம்­பவம் நடை­பெற்­றுள்­ளது என்­பதும் அவ­ரது வாக்­கு­மூ­லத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் குறிப்­பி­டு­கின்­றனர்.

கொழும்பு குற்­றப்­பி­ரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் இந்­திக லொக்­கு­ஹெட்­டியின் வழி­காட்­டு­தலின் கீழ் பிர­தான விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் ஐந்து பொலிஸ் விசா­ர­ணைகள் குழுக்கள் வெவ்­வேறு கோணங்­களில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொலை செய்­யப்­பட்­டவர் கணே­முல்ல சஞ்­சீவ ஒன்றும் புனிதர் அல்லர். அவர் கப்பம் பெறல், உயிர் அச்­சு­றுத்தல் செய்தல், கொலைகள் கொள்­ளைகள் என்று பல­வற்­றுடன் தொடர்­பு­பட்­டவர் என்றும், கொலை செய்த சமிந்து தில்ஷான் ஏலவே 6­ கொலைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வ­ராக இருப்­பதால் அவரும் கொல்­லப்­பட வேண்­டி­யவர் தான் என்றும் தீவி­ர­மான சமூக மட்­டக்­க­ருத்­துக்கள் மேலெ­ழுந்­துள்­ளன.

கணே­முல்ல சஞ்­சீவ என்ற நபர் புனி­தரா, இல்­லையா என்­ப­தல்ல இங்­குள்ள பிரச்­சினை. துப்­பாக்கி தாங்­கிய 12 விசேட அதி­ரடிப்­ப­டையினரின் பாது­காப்பில் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட சந்­தேக நபர் ஒருவர் பட்­டப்­ப­கலில் பிர­தி­வாதிக் கூட்டில் நிற்­கையில் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருக்­கின்றார்.

‘இலங்­கையில்’ நீதி­மன்­றத்தின் ‘சாட்­சிக்­கூண்டு’ கூட சந்­தேக நப­ருக்கோ, அல்­லது குற்­ற­வா­ளிக்கோ உயிர்­பா­து­காப்­பற்­ற­தாக மாறி­யி­ருக்­கின்­றது. நீதி­மன்றின் நீதி­பதி, அங்கு பணி­யாற்றும் ஏனைய அதி­கா­ரிகள், ஊழி­யர்கள், சட்­டத்­த­ர­ணிகள், உட்­பட பலரின் பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நாட்டின் புல­னாய்வுத் துறையின் திறன் மற்றும், நீதி­மன்ற வளா­கத்தில் ஆயுதம் தாங்­கிய தரப்­பி­னரின் பாது­காப்பு அளிக்கும் இய­லுமை ஆகி­ய­வையும் கேள்­விக்­குள்­ளா­கின்­றது. நீதி­மன்ற வளா­கங்­க­ளிற்கு வெவ்­வேறு கார­ணங்­க­ளுக்­காக வருகை தரும் சாதா­ரண பொது­மக்­களின் பாது­காப்புக் குறித்த தீவி­ர­மான கரி­ச­னை­களும் ஏற்­ப­டு­கின்­றன.

“பாதா­ளக்­கு­ழுக்­களை ஒழிப்போம்” என்று ஜனா­தி­பதி அநு­ர­கு­மார அறை­கூவல் விடுப்­பதும், “பாதா­ளக்­கு­ழுக்கள் தலை­வி­ரித்­தா­டு­வ­தற்கு முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களே காரணம்” என்றும், “தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­ட­வில்லை” என்றும் பொதுமக்கள் ­பா­து­காப்பு அமைச்சர் ஆனந்த விஜ­ய­பால உத்­த­ர­வா­த­ம­ளிப்­பதும், “நீதி­மன்­றப்­பா­து­காப்பை தீவி­ரப்­ப­டுத்­துவோம்” என்று நீதி அமைச்சர் ஹர்­ஷன நாண­யக்­கார சப­த­மெ­டுப்­பதும் அர­சியல் அரங்கில் பொதுப்­ப­டை­யான விடயம்.

ஒட்­டு­மொத்த அர­சாங்­கமும் துப்­பாக்கிச் சூட்டுச் சம்­பவம் நிகழ்ந்து சில மணி­நே­ரங்­களில் பிர­தான சந்­தே­க­நபர் கைது செய்­யப்­பட்ட விட­யத்­தை முன்­னி­லைப்­ப­டுத்தி தமது ‘வீரச் செய­லாக’ அடை­யா­ளப்­ப­டுத்த முனை­கின்­ற­மையும் ‘அர­சியல் சாயம்’ நிறைந்­தது தான்.

ஆனால், அர­சாங்கம் யதார்த்த நிலை­மை­களை புரிந்­து­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது. அதற்­க­மை­வாக மிகத்­தீ­வி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யதும் தவிர்க்க முடி­யா­த­வொரு விட­ய­மா­கின்­றது.

தற்­போ­தைய சூழலில் போதைப்­பொருள் பயன்­பாடும், விநி­யோ­கமும் சமூ­கத்தின் அனைத்து மட்­டங்­க­ளிலும் வியா­பித்­து­விட்­டன. போதைப்­பொ­ருளை விற்­பனை செய்­ப­வர்­களின் வலை­ய­மைப்பு நாட்டின் பாது­காப்புக் கட்­ட­மைப்­புக்­களை விடவும் ஒரு­படி மேலேயே தான் உள்­ளது.

போதைப்­பொருள் வலை­ய­மைப்­புக்­களின் பிர­தா­னிகள் டுபாய் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களில் இருந்தும் கட்­ட­ளை­களைப் பிறப்­பித்து செயற்­ப­டுத்­து­ம­ள­விற்கு ஆழ­மாக வேரூன்றி விட்­டன.

இலங்­கையில் பாதா­ளக்­கு­ழுக்­களின் முக்­கிஸ்­தர்­களின் மர­ணங்கள் 1990 கோணா­வல சுனிலின் மீது இனந்­தெ­ரி­யா­வர்கள் மேற்­கொண்ட துப்­பாக்­கிப்­பி­ர­யோ­கத்­தினால் ஏற்­பட்ட மர­ணத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மா­கின்­றது. இருப்­பினும் நீதி­மன்­றத்தில் வைத்து மேற்­கொள்­ளப்­படும் ‘துணி­கர கொலைகள் அல்­லது கொலை முயற்­சிகள்’ அச்­சம்­பவம் நிகழ்ந்து அதே­யாண்டு தொடங்­கி­யது.

1990ஆம் ஆண்டு அத்­த­ன­கல்ல நீதி­மன்­றத்தில் பொலிஸ்­ப­ரி­சோ­தகர் மற்றும் அவ­ரது மாமனார் ஆகியோர் மீது பிர­தி­வாதிக் கூண்டில் வைத்து மேற்­கொண்ட துப்­பாக்­கிப்­பி­ர­யோ­கமே நீதி­மன்­றத்­துக்குள் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லா­வது துப்­பாக்­கிப்­பி­ர­யோ­க­மாகும். இவ்­வாறு ஆரம்­பிக்­கப்­பட்ட நீதி­மன்­றத்­துக்குள் வைத்து கொலை செய்யும் கலா­சாரம் தற்­போது வரையில் நீடி­கின்­றது.

 1996இல் நீர்­கொ­ழும்பு நீதிவான் நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பாதா­ளக்­கு­ழுவின் முக்­கி­யஸ்­த­ரான சிந்­தக்க அம­ர­சிங்க மீது அவ­ரது போட்­டி­யா­ளர்­களால் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­பட்ட சம்­ப­வமே நீதி­மன்­ற­ வ­ளா­கத்­துக்குள் நிகழ்த்­தப்­பட்ட முதல் துப்­பாக்கிப் பிர­யோ­க­மாகும்.

 குறித்த சம்­ப­வத்தில் சிந்­தக்க அம­ர­சிங்க உயிர்­பிழைத்த நிலையில் அவரை கொலை செய்­வ­தற்கு முயற்­சித்த துப்­பாக்கிதாரி பொலி­ஸாரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். எனினும் சிந்­தக்க அதே­யாண்டு களு அஜித்தின் அணி­யிரால் தொட்­ட­லங்­கவில் வைத்து சுட்­டிக்­கொல்­லப்­பட்டார். இவ்­வாறு ஆரம்­பிக்­கப்­பட்ட நீதி­மன்­றத்­துக்குள் வைத்து கொலை செய்யும் கலா­சாரம் தற்­போது வரையில் நீடி­கின்­றது.

 2004 ஜன­வரி 9ஆம் திகதி புதுக்­கடை நீதிவான் நீதி­மன்­றத்தின் ஆறாம் அறையில் வைத்து பாதா­ளக்­குழுவின் மற்­றொரு முக்­கி­யஸ்­த­ரான தம்­மிக்க அம­ர­சிங்க சுட்­டுப்­ப­டு­கொலை செய்­யப்­பட்டார்.

 2022 ஆகஸ்ட் 4ஆம் திகதி கல்­கிஸை நீதிவான் நீதி­மன்­றத்தின் சாட்சிக் கூண்டில் வைத்து இரத்­ம­லானை ரொஷான் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்டார்.

 2015 செப்­டெம்பர் 23ஆம் திகதி கடு­வல நீதிவான் நீதி­மன்­றத்தின் குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏறு­வ­தற்கு முனைந்த பாதா­ளக்­கு­ழுவின் முக்­கி­யஸ்­த­ரான சமயங் என்­ப­வரை இலக்­கு­வைத்து துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­பட்­ட­போதும் அதில் அவர் தப்­பித்­துக்­கொள்­கின்றார். பின்னர் 2016இல் களுத்­து­றையில் சிறைச்­சாலை வாக­னத்தில் வைத்து சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

 இறு­தி­யாக கடந்த ஜன­வரி 16ஆம் திகதி மன்னார் நீதி­மன்­றத்தின் வளா­கத்தில் வைத்து சாட்சி வழங்­கு­வ­தற்­காகச் சென்ற இருவர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட நிலையில் இரா­ணுவ அதி­காரி உள்­ளிட்­ட­வர்கள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இத­னை­வி­டவும், பொலிஸார் அல்­லது சிறைச்­சாலை அதி­கா­ரிகள் உட்­பட சட்­டத்தின் ஒட்­டு­மொத்த பாது­காப்பில் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட குற்­றங்­களை மேற்­கொண்­ட­வர்கள் கைதி­க­ளாக இருந்த வேளையில், துப்­பாக்­கி­தாரிகள் குழு­வா­கவோ அல்­லது தனி­யா­கவோ மேற்­கொண்ட துப்­பாக்கிப் பிர­யோ­கங்­களில் உயி­ரி­ழந்த பல சம்­ப­வங்கள் நிகழ்ந்­துள்­ளன.

இவ்­வா­றி­ருக்­கையில், பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் கே.புத்­திக மன­துங்­கவின் தக­வல்­களின் பிர­காரம், இந்த ஆண்டின் நேற்று வெள்­ளிக்­கி­ழமை வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 17 துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

“பாதா­ளக்­கு­ழுக்­களின் தலை­மையில் 10 துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தோடு ஏனைய ஏழு சம்­ப­வங்­களும் தனிப்­பட்ட தக­ராறு கார­ண­மாக இடம்­பெற்­றுள்­ளன” என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

பாதா­ளக்­கு­ழுக்­கனின் தலை­மையில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­ப­வங்­களில் 09பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு 30பேர் விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இத­னை­வி­டவும், 2024ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதோடு ஒழுங்கமைக்கப் பட்ட 56 குற்றச்சம்பவங்களின் காரணமாக 45 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த எண்ணிக்கையானது, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகின்றபோது சிறிய அளவில் குறைந்திருந்தாலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சம்பவங்களும், மரணங்களும் தொடர்கதையாகவே இருக்கின்றன.

ஒவ்வொரு சம்பவங்களுக்குப் பின்னாலும், போதைப் பொருள் வலையமைப்புக்கள், பாதாளக்குழுக்கள் ஆகியவற்றின் நேரடியான தொடர்புகளும், பழிவாங்கும் நோக்கங்களும் இருப்பது வெளிப்படையானது.

அந்த வகையில், கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்துடன் அனைத்தும் முடிவுக்கு வரப்போவதில்லை. அவரது அணியினரின் பழிவாங்கும், அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் தொடரத்தான் போகின்றது.

நாட்டுக்குள்ளும், வெளியிலும் இருக்கும் ஏனைய தரப்புக்கள் அதற்குப் பதிலடிய வழங்கத்தான் போகின்றன. ஆகவே, சஞ்சீவவின் விடயத்தில் சில மணிநேரத்திற்குள் துப்பாக்கிதாரியைப் கைது செய்தது போன்று, போதைப்பொருள் வலையமைப்புக்களையும், பாதாளக்குழுக்களையும் முதுகெலும்புடன் தீர்மானமெடுத்து முழுமையாக களைந்தெடுக்கும் வரையில் அரசாங்கத்துக்கான சவால் நீண்டுகொண்டே இருக்கும்.

ஆர்.ராம் Virakwsari

Share.
Leave A Reply