ஏ – 9 வீதியில் நேற்று திங்கட்கிழமை (24) மாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சாரதி திடீரென சுகயீனமுற்றதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹெட்டிப்பொல பகுதியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து, பஸ் சாரதி பிரதேசவாசிகளின் உதவியுடன் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனமே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply