இரண்டு பேரை கடத்தி, காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பாறைக்கு அருகில் கொண்டு சென்று கொடூரமாக வெட்டி அவர்களைப் படுகாயப்படுத்தி, பின்னர் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, ஓவிலிகந்த – அங்கும்புர வீதியில் உள்ள காட்டுப்பகுதிக்கே அழைத்துச் சென்று இவ்வாறு கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டதாக நம்பி, தப்பி ஓடி பியகம மற்றும் லக்கல பகுதிகளில் மறைந்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொரியாவில் வசிக்கும் ஒருவரின் மனைவியுடனான தகாத உறவின் காரணமாக, 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடத்தல் மற்றும் சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

மாத்தளை நகரத்தைச் சேர்ந்த சிகையலங்காரம் செய்யும் இருவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவர்கள் மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ராகம பகுதியில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான வாடகை வாகனம் இருவரை கடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் லக்கல பகுதியைச் சேர்ந்த டிப்பர் லொறி சாரதி என்று கூறப்படுகிறது

Share.
Leave A Reply