‘வேலை முடிந்தது.’ ‘வேலை சரி’ .ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவாவைக் கொன்ற பிறகு, சந்தேக நபரான வழக்கறிஞர் வேடமணிந்த பெண், அவரது சகோதரருக்கு ’வேலை முடிந்தது’ ‘வேலை சரி’ என்று குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவாவை சுட்டுக் கொன்ற பிறகு தப்பி ஓடிய வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, தனது தம்பியுடன் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு வந்ததாகவும் பொலிஸார் அறிந்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய கொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்ல, மாறாக வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான பெண்தான் என்ற தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply