சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்கள் அவசியம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நானோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியோ பலவீனமான சமாதானத்தை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவும் அதன் ஜனாதிபதியும் பிரான்சின் சிறந்த நண்பர்கள் என தெரிவித்துள்ளார்.

உக்ரைனை பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி உக்ரைனின் பாதுகாப்பில் ஐரோப்பா 128 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது ஏனென்றால் ஐரோப்பாவின் கூட்டு பாதுகாப்பின் முன்னணியில் உக்ரைன் உள்ளது என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மக்களின் பெரும் துணிச்சலை நான் போற்றுகின்றேன் பாராட்டுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் வலிமை மிக்கவர்களின் விருப்பத்தை திணிக்க கூடிய,சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை மீறக்கூடிய உலகில் வாழ்வதற்கு எவரும் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply