இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்ததால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
5000 ரூபாய் ரொக்கம் மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி, கொழும்பு நீதவான் நீதிமன்றம், இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதித்தது.