நடிகர் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் ஆரம்ப வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்ததாக நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல – சிவக்குமார்
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறித்து நடிகர் சிவக்குமார் பேசியிருக்கிறார். தெற்கின் குரல் யூடியூப் பக்கத்தில் நடிகர் சிவக்குமார் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை பற்றி கூறியிருப்பதாவது,
சினிமா மற்றும் அரசியலில் உச்சத்தில் இருந்த எம்.ஜி.ஆருக்கு குடும்ப வாழ்க்கை சந்தோசமாக இல்லை. அவ்வளவு கடினமாக இருந்தது.19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். குடும்ப வருமை திருமணம் ஆகி 2 வருடத்திலேயே முதல் மனைவி இறந்து விட்டார்.
பிறகு 2 ஆவது திருமணம் நடந்தது. இரண்டாவது மனைவிக்கும் 18 வருடம் டிபி நோய் இருந்தது. அவருக்கு மருத்துவ செலவுக்கு கூட காசு இருக்காது. அவருக்கு மருத்துவம் பார்க்க செல்ல வேண்டும் என்றால் மனைவியை ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றி விட்டு மருத்துவமனை வரை நடந்து செல்வார் என்று நடிகர் சிவக்குமார் கூறினார்.
காசு இல்லை, மனைவிக்கு சோறு போட முடியவில்லை என்றெல்லாம் பல முறை வருத்தப்பட்டு இருக்கிறார். அவர் தான் தற்போது சினிமா மற்றும் அரசியலில் கொடி கட்டி பறந்தவர் என்றார்.
அப்படியே வாழ்க்கை செல்ல 1954 ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்த படங்கள் ஹிட் கொடுத்தது. மலைக்கண்ணன், அலிபாபா, மதுரை வீரன், எங்கள் வீட்டு பிள்ளை, நாடோடி மன்னன் என அடுத்தடுத்த் படங்கள் ஹிட் கொடுத்தது.
அப்படித்தான் எம்.ஜி.ஆர் படிப்படியாக உயர்ந்து அரசியல் மற்றும் படத்தில் உயர்ந்தார் என்று நடிகர் சிவக்குமார் கூறுகிறார்.