பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என கார்டியன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது.
பாலஸ்தீனத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட 160க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்றது உலக சுகாதார ஸ்தாபனம் இவர்களின் நலன்கள் பாதுகாப்பு குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது.
162 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தன்னால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக பாலஸ்தீன மருத்துவ அரசசார்பற்ற அமைப்பான சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவின் சிரேஸ்ட மருத்துவர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்இமோதல்களின் போது மருத்துவமனைகளில் கைதுசெய்யப்பட்ட24 பேர் காணாமல்போயுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் உட்பட பெருமளவு சுகாதார பணியாளர்களை தடுத்துவைத்திருப்பது சர்வதேச சட்டங்களின் சட்டவிரோதமான செயல் என சுகாதார பணியாளர்கள் நலன் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவாத் அல்செர் தெரிவித்துள்ளார்.
மருத்துவநிபுணத்துவம் பராமரிப்பு போன்றவற்றை மறுப்பது பொதுமக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இந்த விதத்தில் இலக்குவைப்பது பாலஸ்தீன மக்களிற்கான சுகாதார சேவை மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் பெரும் துன்பங்கள் நிகழ்கின்றன இ தடுத்திருக்ககூடிய உயிரிழப்புகள் பல நிகழ்கின்றனஇமருத்துவ நிபுணத்துவம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.
யுத்தம் ஆரம்பித்த பின்னர் 297 சுகாதார பணியாளர்கள் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என உறுதி செய்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் எத்தனை பேர் விடுதலை செய்ய்பட்டனர் என்ற புள்ளிவிபரங்கள் இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு நலன் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு நலன் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்ற தகவலின் பின்னரே உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படையினரால் டிசம்பரில் கைதுசெய்யப்பட்ட கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஹ_சாம் அபு சபியாவினை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணியொருவர் ரமல்லாவில் உள்ள ஒவர் சிறைச்சாலையில் வைத்தியரை சந்திப்பதற்கு தனக்கு முதல் தடவை அனுமதி வழங்கப்பட்டதாகவும் தான் சித்திரவதை செய்யப்பட்டேன்,தாக்கப்பட்டேன்தனக்கு மருத்துவசிகிச்சை மறுக்கப்பட்டது என மருத்துவர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஹ_சாம் அபு சபியா கைதுசெய்யப்பட்டமைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
பலமருத்துவர்கள் தாங்கள் மருத்துவமனைகளில் அம்புலன்ஸ்களில் சோதனை சாவடிகளில் கைதுசெய்யப்பட்டதாக கார்டியனிற்கும்,புலனாய்வு செய்திகளிற்கான அராபிய செய்தியாளர்கள் அமைப்பிற்கும் தெரிவித்துள்ளனர்.
தங்களை சட்டவிரோதமாக இஸ்ரேலில் உள்ள சிறைச்சாலைகளிற்கு மாற்றியதாகவும்,பல மாதங்கள் சித்திரவதை செய்ததாகவும்,தாக்கியதாகவும் பட்டினி போட்டு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாகவும் பின்னர் குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் விடுதலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தடுப்பில் நான் அனுபவித்த விடயங்கள் குறித்து நான் எவ்வளவு தெரிவித்தாலும் நான் அனுபவித்த விடயங்களில் அரைவாசியாகவே அது காணப்படும் என அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் முகமட் அபு செல்மியா தெரிவித்தார்.
.அவரை பல மாதங்கள் தடுத்துவைத்திருந்த இஸ்ரேலிய படையினர் குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் விடுதலை செய்தனர்.
‘நான் துப்பாக்கியால் தாக்கப்படுவதை பற்றி நாய்கள் கடிக்கவிடுவது பற்றி குறிப்பிடுகின்றேன்,சிறிதளவு கூட உணவில்லை, சுகாதாரம் இல்லை,சிறைக்கூண்டுகளிற்குள் சோப் இல்லை,நீர்இல்லை கழிவறையில்லை, அங்கு மரணித்துக்கொண்டிருப்பவர்களை நான் பார்த்தேன்,என்னை மிகமோசமாக தாக்கினார்கள் என்னால் நடக்க முடியவில்லை சித்திரவதை இல்லாமல் எந்த நாளும் இல்லை” என அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் முகமட் அபு செல்மியா தெரிவித்தார்.