அமெரிக்காவுக்கு செல்லும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அப்போது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப்பெறவும், அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு, வெள்ளிக்கிழமை (28) அமெரிக்காவுக்கு வருகை தரவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷியா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply