யாழ்ப்பாணத்தில் மின் கம்பியிணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிர்மாய்த்துள்ளார். வண்ணார்பண்ணை – பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் – பூநாரிமடம் பகுதியில் கடை வேலை ஒன்று நடைபெற்று வந்தது. அங்கு முதலாவது மாடியில் குறித்த நபர் மின் கம்பியிணைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிதவேளை தவறுதாலாக கீழே விழுந்துள்ளார்.
இதன்போது அவருடன் வேலை செய்தவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.