நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவின் வடக்கே இன்று வெள்ளிக்கிழமை (28) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
சிந்துபால்சோக் மாவட்டத்தில் உள்ள பைரப் குண்டாவைச் சுற்றியுள்ள திபெத்தின் எல்லையில் இமயமலை மலைத் தொடருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜேர்மன் புவிச்சரிதவியல் ஆராய்ச்சி மையம் 5.6 ரிச்டர் அளவிலும், அமெரிக்க புவியியல் ஆய்வு 5.5 ரிச்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.