குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பகுதியில் நேற்று (27) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகுலாகம பகுதியில் பன்றிகளை வேட்டையாடும்போது கவனக்குறைவாக சுடப்பட்டதன் விளைவாக சிறுமி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் பாட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகுலாகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்த போர 12 ரக துப்பாக்கி, குறித்த துப்பாக்கிக்கான 2025 அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.