ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.

ஃபெடரல் அரசு நிர்வாகம் மற்றும் அரசிடம் நிதி பெறும் அமைப்புகள், பிற மொழி பேசுபவர்களுக்கு உரிய மொழிபெயர்ப்பு உதவிகளை வழங்க வேண்டும் என 90களில் அதிபர் கிளிண்டன் பிறப்பித்த உத்தரவு இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது.

இனிமேல், மொழிபெயர்ப்பு உதவி வழங்குவது அந்தந்த அமைப்புகளின் முடிவுக்கு உட்பட்டது.

உலக அளவில் ஆங்கிலத்தை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு மாதிரியான ஆங்கிலம் தான் பேசப்பட்டது. பின்னர் காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன, ஆனாலும் வெள்ளை மாளிகை ஆவணங்களில் எப்போதும் ஆங்கிலம் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply