யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொக்குவில் பகுதியிலுள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில், களஞ்சியசாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர், களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

வாள் வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில், இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கண்காணிப்பு கமராவில் பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், தாக்குதலை நடத்திய இருவரையும் பொலிஸார் இனம் கண்டுள்ளதுடன், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply