உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் கனிமங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் தயார் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.
அமெரிக்க காங்கிரசிற்கான உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று உக்ரைன் ஜனாதிபதியிடமிருந்து மிக முக்கியமான கடிதம் கிடைத்தது என தெரிவித்துள்ள டிரம்ப் நிரந்தர சமாதானத்தை ஏற்படு;த்துவதற்காக மிகவிரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளது, உக்ரைன் மக்களை விட வேறு எவருக்கும் சமாதானம் மிக முக்கியமானதாகயில்லை என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்பின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றுவதற்கு நானும் எனது அpணியினரும் தயாராகவுள்ளோம் என ஜெலென்ஸ்கி கடிதத்தில் தெரிவித்துள்ளதை டிரம்ப் வாசித்துள்ளார்.
ரஸ்யாவுடன் தீவிரபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப் அவர்கள் பேச்சுவார்த்தைகளிற்கு தயார் என்பதை வெளிப்படுத்தும் வலுவான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.
அது அழகானது இல்லையா?இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவதற்கான தருணம் இது கொலைகளை நிறுத்துவதற்கான தருணம் இது அர்த்தமற்ற யுத்தத்தை நிறுத்துவதற்கான தருணம் இதுஎன டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க காங்கிரசிற்கான தனது உரையில் டிரம்ப் எந்த வழியிலாவது கிறீன்லாந்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவேன் என தெரிவித்துள்ளார்.
கிறீன்லாந்து மக்களை உள்வாங்குவதற்கு அமெரிக்கா தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்காகவும் உலகின் பாதுகாப்பிற்காகவும் டென்மார்க்கின்கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிறீன்லாந்து அமெரிக்காவிற்கு அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் எந்த வழியிலாவது நாங்கள் அதனை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார்.
கிறீன்லாந்து மக்களிற்கு என்னிடம் இன்று செய்தியொன்று உள்ளது உங்கள் தீர்மானத்தை நீங்களே தீர்மானிக்கும் உரிமையை நாங்கள் வலுவாக ஆதரிக்கின்றோம்.
நீங்கள் விரும்பினால் நாங்கள் உங்களை அமெரிக்காவிற்குள் வரவேற்போம் பாதுகாப்பாக செல்வந்தர்களாக வைத்திருப்போம் என அவர் தெரிவித்துள்ளர்.