முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் உள்ள கற்குவாரி வீதியில் மாத்திரைகளை உட்கொண்ட குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அன்டனி சஞ்சய் என்ற ஒன்றரை வயதுடைய குழந்தை பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்த, தனது பேத்தியார் குருதி அழுத்தத்திற்காக பயன்படுத்தும் மாத்திரைகள் உட்கொண்டுள்ளது.

இந்நிலையில் குழந்தை சோர்வடைந்து செல்வதை அவதானித்த தாய் , மாங்குளம் வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றிருந்ததுடன் அங்கிருந்து உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் குழந்தை எவ்வித சிகிச்சையும் பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply