புனே நீதிமன்றத்தில் நடந்த ஒரு குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில், நீதிபதி கூறிய சில கருத்துகள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

தாலி, பொட்டு வைக்கவில்லை என்றால் உங்களை எப்படி கணவரை பிடிக்கும் என நீதிபதி கேட்டதாக புனேயைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் லிங்க்டின் தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனே நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கில் சமரசக் கூட்டம் நடந்துள்ளது அப்போது, அந்த நீதிபதி, வழக்கில் விசாரணைக்காக ஆஜரான பெண்ணிடம், “நீங்கள் மாங்கல்யம் போடவில்லை மற்றும் நெற்றிப் பொட்டு வைக்கவில்லை. திருமணமான பெண்ணைப் போல நடக்கவில்லை என்றால், உங்கள் கணவர் உங்களை விரும்புவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்றங்களில் இன்னும் பழமையான கருத்துக்களும் பாலின பாகுபாடும் இருக்கிறதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பி உள்ளதாகவும், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நீதிபதிகள் முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இப்படி பழமைவாத கருத்துக்களை வெளிப்படுத்துவது சரியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பாலின சமத்துவம் பழமை வாத கருத்துக்கள் இன்னும் நீதிமன்றங்களை இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகவும், சட்ட அமைப்புகள் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Share.
Leave A Reply