பணயக்கைதிகள் தொடர்பில் ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா நேரடிபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகள் விடுதலை தொடர்பில் ஹமாஸ் அமைப்புடன் அமெரி;க்கா நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதை வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலைன் லீவிட் உறுதி செய்துள்ளார்.
ஹமாசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் இஸ்ரேலுடன் கலந்தாலோசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணயக்கைதிகள் விவகாரத்திற்கான விசேட பிரதிநிதி அடம்பொஹ்லெர் அமெரிக்க மக்களிற்கு எது சிறந்த விடயமோ அதனை செய்வதற்கு நல்லெண்ணத்துடன் செயற்படுகின்றார் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் ஹமாசுடன் நேரடிபேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தவிர்த்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில்லை என்ற வெளிவிவகார கொள்கையை அமெரிக்கா நீண்டகாலமாக பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹமாசிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இரண்டு தடவை நேரடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக பாலஸ்தீன வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.