அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏறிய 17 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மெல்பேர்ன் நகருக்கு அருகிலுள்ள அவலோன் விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் 160 பேருடன் விமானம் சிட்னிக்கு புறப்படத் தயாராக இருந்தது.

இதன்போது, துப்பாக்கியுடன் ஃப்ளோரசன்ட் ஜாக்கெட் அணிந்த இளைஞன் ஒருவனும் விமானத்தில் ஏறியுள்ளார். இதனை கண்ட பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது, இளைஞன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை விமானி உதைத்து கீழே வீழ்த்தியுள்ளார்.

சட்டவிரோதமாக ஒரு விமானத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்து, விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்து, வெடிகுண்டு புரளியை உருவாக்குதல் உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவுள்ளார்.

இளைஞன் விமானநிலையத்துக்கு அருகிலுள்ள பல்லாரத் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

விமானத்தின் படிகளில் ஏறும் போது, அந்த இளைஞன் துப்பாக்கியுடன் இருப்பதை பயணிகள் கவனித்ததாக கண்காணிப்பாளர் மைக்கேல் ரீட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த இளம்பெண் விமான நிலையத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்து விமான நிலைய தார் சாலையில் ஏறி, பின்னர் முன் படிக்கட்டுகளில் ஏறி விமானத்தின் முன் கதவின் அருகே தரையில் விழுந்ததாக போலீசார் நம்புகின்றனர்.

“சந்தேகமே இல்லை, இது பயணிகளுக்கு மிகவும் திகிலூட்டும் சம்பவமாக இருந்திருக்கும்,” அதே நேரத்தில் சந்தேகநபரை கைது செய்ய துணிச்சலாக செயற்பட்டமைக்கு பாராட்டுக்களையும் பொலிஸ் கண்காணிப்பாளர் மைக்கேல் ரீட் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபருக்கு சொந்தமான கார் ஒன்றும் மற்றும் இரண்டு பைகளையும் புலனாய்வாளர்கள் அருகிலேயே கண்டுபிடித்துள்ளனர்.

Share.
Leave A Reply