ரஷியா – உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தவரை உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து ஆதரித்தார்.

ஆனால் டொனால்டு டிரம்ப் ரஷியா பக்கம் சாய்த்துள்ளார். சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்காவுக்கு அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து வாக்குவாதம் செய்தார்.

இந்நிலையில் ஜெலென்ஸ்கிக்கு டொனால்டு டிரம்ப்பின் கூட்டாளி எலான் மஸ்க் பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எனது ஸ்டார்லிங்க் அமைப்பு ( Starlink system) உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பு.

Starlink system

நான் அதை நிறுத்தினால், அவர்களின் முழு பாதுகாப்பு அமைப்பும் சரிந்துவிடும். மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களால் நான் சோர்வடைந்துள்ளேன். உக்ரைன் இந்தப் போரில் தோற்பது உறுதி.

ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படுவதை தீய ஜெலென்ஸ்கி விரும்பவில்லை.தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஜெலென்ஸ்கி வேண்டுமென்றே அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply