கல்நேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பண்டுலகம அரச உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி கற்கும் எப்பாவல கிரலோகம கட்டதிவுல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தரேகா சுபோதனி ஹேமந்த என்றயுவதியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் ஏ28 வீதியில் சிராவஸ்திபுர பஹே எல சந்திக்கு அருகில் 79 மற்றும் 80 ஆவது மைல் கல் பகுதிக்கு இடையில் தனது தந்தையுடன் பாடநெறி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று (08) சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையும், மகளும் தலாவயிலிருந்து அநுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளின் மீது இருந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயத்திற்குள்ளான இவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது இவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

வுல்நேவ தொரநோகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என அநுராதபுரம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply