மேலதிக வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை மாணவியை கொண்டு தாக்கியதாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் தொடர்பில் தேசிய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

நுகேகொடை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் மேலதிக வகுப்புகளை நடத்திச் செல்லும் ஆசிரியர் ஒருவர் தனது மேலதிக வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை மாணவியை கொண்டு தாக்கும் காணொளி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த தேசிய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபையினர், குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (11) தேசிய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபையில் ஆஜராகுமாறு அறிவித்திருந்தனர்.

ஆனால் மேலதிக வகுப்பு ஆசிரியர் நேற்றைய தினம் தேசிய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபையில் ஆஜராகவில்லை.

பின்னர், மேலதிக வகுப்பு ஆசிரியரின் சார்பில் தேசிய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபையில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியர் தனிப்பட்ட தேவை காரணமாக வெளிநாட்டு சென்றுள்ளதாகவும் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபையில் ஆஜராகுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியர் தொடர்பில் முறையிட விரும்பும் மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தேசிய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply