புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில், இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ள சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் உலகத் தமிழர்களின் தேர்வு வாக்குக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கை வளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார்.
இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டதாகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது.
நாடளாவிய ரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர்.
ஒவ்வொருவரது உருவாக்க கருவியின் பயன்பாடு, அதன் அவசியம் குறித்தான ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இறுதிச்சுற்றில் கருவி தேர்வு செய்யப்படவுள்ளது. இதில் மூன்றாம் நிலையாக பொதுமக்களும் தங்களுக்கு தேவையான கருவியினை தேர்வு செய்ய முடியும்.
அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள் “cœur léger ” எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னராக குறித்த https://gpseo.fr/prix-entrepreneur/coeur-leger-le-bracelet-qui-aide-les-enfants-gerer-leurs-emotions இந்த இணையத்தளத்துக்கு தேர்வுக்கான வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும்.
மின்னஞ்சல் பதிவுடன் சுஜீவன் முருகானந்தம், உருவாக்கியுள்ள “cœur léger ” எனும் கருவியினை தேர்வு செய்யும்பட்சத்தில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.
1995 யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின்னராக கிளிநொச்சியில் தற்காலிகமாக வாழ்ந்து அங்கிருந்து 2000 ஆம் ஆண்டுகளில் 7 வயதில் பிரான்சில் கால்பதித்த இந்த மாணவரே சுஜீவன் முருகானந்தம் ஆவார்.