சென்னை: நடிகை ஸ்ரீதேவி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தியவர். அங்கு அவருடன் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டனர்.

அந்த அளவுக்கு அவர் மீதான கிரேஸ் பாலிவுட்டில் இருந்தது. அங்கு தனக்கு தொடர்ந்து வரவேற்பை கிடைத்ததை அடுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

இந்தச் சூழலில் ஸ்ரீதேவி குறித்து மலையாள இயக்குநர் ஆலப்புழா அஷ்ரஃப் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. சிவகாசியில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றிய அவர் பிறகு ஹீரோயினாகவும்்அறிமுகமானார்.

கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலும்; அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி படம்தான் கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரீதேவி ஹீரோயினாகவும் கலக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதினிலே மயில்: ஸ்ரீதேவியை தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே.

அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட். டீச்சராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளம்பெண் ஒரு மருத்துவரால் ஏமாற்றப்பட்டு, பிறகு தான் கிண்டலடித்த சப்பாணியையே திருமணம் செய்துகொண்டு வாழ்வது என ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தை பார்த்த பலரும் மயிலுக்கு மனதை கொடுத்தனர்.

பராசக்தி ஹீரோயின் அந்த பிரபல நடிகருடன் டேட்டிங்கா?.. அம்மாவே அப்படி சொல்லிட்டாங்களே.. இது எப்போ?பராசக்தி ஹீரோயின் அந்த பிரபல நடிகருடன் டேட்டிங்கா?.. அம்மாவே அப்படி சொல்லிட்டாங்களே.. இது எப்போ?

மூன்றாம் பிறை ஸ்ரீதேவி: 16 வயதினிலே படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தென் இந்தியா முழுவதும் ஸ்ரீதேவியின் அலை அடித்தது. இதன் காரணமாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.

குறிப்பாக தமிழ்நாடு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. ஒருபக்கம் கிளாமர், மறுபக்கம் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளில் நடித்தார். அவரது கரியரின் சிறந்த படங்களில் ஒன்று மூன்றாம் பிறை.

விஜியாக கலக்கிய ஸ்ரீதேவி: பாலுமகேந்திரா இயக்கியிருந்த அந்தப் படத்தில் விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவர்.

ஒரு குழந்தைத் தன்மையோடு அவர் நடித்த ஒவ்வொரு சீனும் இன்றுவரை க்ளாசிக்கல். வேறு எந்த நடிகையாலும் செய்ய முடியாத கதாபாத்திரம் அது.

கண்டிப்பாக அந்தப் படத்துக்கு அவர் தேசிய விருது வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல் ஹாசன் தட்டி சென்றுவிட்டார்.

இருந்தாலும் கமலைவிடவும் அந்தப் படத்தில் அதிகம் ஸ்கோர் செய்தது ஸ்ரீதேவிதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. குறிப்பாக அந்தப் படத்துக்கு எதற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்று பலரும் ஆச்சரியப்படும் கதையும் இங்கு உண்டு.

மும்பையில் திருமணம் டூ துபாயில் மரணம்: தொடர்ந்து தமிழில் கலக்கிவந்த அவர் பாலிவுட்டுக்கும் சென்றார். அங்கும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்ட அவர் இந்திய அளவில் டாப் ஹீரோயினாக வளர்ந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்தார்.

இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். போனிக்கு இந்தத் திருமணம் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு குஷி, ஜான்வி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிய ஸ்ரீதேவி ஒருகட்டத்தில் முழுமையாக முழுக்கு போட்டார்.

முழுநேர இல்லத்தரசியாக இருந்த அவர்; இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தில் அஜித்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அதனைத் தொடர்ந்து மாம் படத்தில் நடித்தார். சூழல் இப்படி இருக்க கடந்த 2018ஆம் ஆண்டு துபாய் சென்ற அவர் அங்கிருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பாத்ரூமில் உயிரிழந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதனை போனி கபூர் திட்டவட்டமாக மறுத்துவருகிறார்.

ஆலப்புழா அஷ்ரஃப் பேட்டி: இந்நிலையில் மலையாள இயக்குநர் ஆலப்புழா அஷ்ரஃப் ஸ்ரீதேவி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், “ஸ்ரீதேவி சொத்து, நகை, கோடிகளில் கார் என ஆடம்பரமாகத்தான் வாழ்ந்தார்.

ஆனாலும் அவருக்குள் ஒரு இனம் புரியாத சோகம் ஒன்று தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது என்பது எனக்கு தெரியும். அவர் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை தீவிரமாக காதலித்தார்.

லிவிங் டூ கெதரில் இருந்தார்கள்: இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்தார்கள் என்றும் அப்போது தகவல்கள் பரவின. சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மிதுன் சக்கரவர்த்தியை திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆகத்தான் ஸ்ரீதேவி விரும்பினார்.

ஆனால் அந்த விருப்பம் கடைசிவரை நிறைவேறவே இல்லை. பிறகுதான் போனிகபூரை அவர் திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீதேவியை போனிகபூர் திருமணம் செய்தபோது போனியின் முதல் மனைவிக்கு பிறந்த மகளுக்கு ஸ்ரீதேவியின் வயது இருக்கும்.

ஸ்ரீதேவிக்கு ஏக்கம்: மிதுன் சக்கரவர்த்தியுடன் வாழ முடியவில்லையே என்று ஸ்ரீதேவிக்கு கடைசிவரை ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது.

ஒருகட்டத்தில் மிதுன் மீது வைத்திருந்த காதலை மறந்துவிட்டு போனிகபூருடன் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினார். சினிமாவிலிருந்து விலகி குடும்பம், குழந்தைகள் என அவரது வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் 2018ஆம் ஆண்டு துபாயில் தங்கியிருந்தபோது ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

 

200 கோடி ரூபாய்க்காக: இந்த மரணத்தில் போனிக்கு தொடர்பிருக்குமா என்றெல்லாம் விசாரித்தார்கள்.முக்கியமாக ஸ்ரீதேவி 200 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் செய்திருந்தார் அதனால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வதந்திகள் எல்லாம் பரவின” என்றார். அஷ்ரஃப்பின் இந்தப் பேட்டியை ரசிகர்கள் சமூக வலைதளங்களி அதிகளவு பகிர்ந்துவருகிறார்கள்.

முன்னதாக ஸ்ரீதேவியின் பயோபிக் வரவிருக்கிறது என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவரது பயோபிக்கை எடுக்க விடமாட்டேன் என்று போனி கபூர் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் மட்டும் நடித்துவந்திருந்த சூழலில் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். மிக விரைவில் தமிழிலும் அவர் படங்களில் கமிட்டாவார் என்று ஸ்ரீதேவியின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Share.
Leave A Reply