யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடத்தடியில் இடம்பெற்ற விபத்தில் 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (18) இரவு மருதனார் மடத்தடியிலிருந்து உரும்பிராய் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் மோதியுள்ளார்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் மற்றும் சைக்கிளில் வந்த முதியவர் இருவரும் காயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும் சைக்கிளில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.