பென்டகனில் பணிபுரியும் 60 ஆயிரம் இராணுவ ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்த நாட்டில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் அரசுத்துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
உலகின் சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்ட அமெரிக்காவின் இராணுவ தலைமை கட்டிடமாக பென்டகன் உள்ளது.
இந்த இராணுவ தலைமையிடத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பென்டகனில் பணிபுரியும் 60 ஆயிரம் இராணுவ ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தாமாக முன்வந்து பணியில் இருந்து விலகினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ஆயிரம்பேர் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.