உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைனிய நகரமாக ஜபோரிஷ்யாவில் நேற்று இரவு ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது நடந்த ரஷிய டிரோன் தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜாபோரிஷ்யா மீது 10 முறை தாக்குதல் நடந்ததகவும், இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்தனர் என அந்நகரின் ஆளுநர் இவான் பெட்ரோவ் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வடகிழக்கில் உள்ள சுமி (Sumy) பகுதியில் உள்ள கிராமத்தில் ரஷியா குறைந்தது 6 குண்டுகளை வீசியதாகவும், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் கிழக்கில் உள்ள டோன்ட்ஸ்க் (Donetsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்றும் அம்மகானை ஆளுநர் தெரிவித்தார்.
இதனையடுத்து ரஷியாவின் வோரோனிஸ், பெலோகிராட் ரோஸ்டோவ் வோலோகிராட் உள்ளிட்ட பகுதிகள் மீது உக்ரைன் ஏவிய 47 டிரோன்களை இடைமறித்து அளித்ததாகவும், மொத்தம் 6 பேர் காயமடைந்ததாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை போர் நடைபெறும் எல்லையில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷியாவின் ஏங்கல்ஸ் ராணுவ விமானத் தளம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.
சோவியத் காலத்திலிருந்தே ஏங்கல்ஸ் தளத்தில், வைட் ஸ்வான்ஸ் என்று அழைக்கப்படும் டுபோலேவ் டு-160 அணுசக்தி திறன் கொண்ட கனரக குண்டுவீச்சு விமானங்கள் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலின் வீடியோவும் வைரலாகியது.?
💥 Russia: Ukraine struck the Engels Military Air Base in Saratov region. pic.twitter.com/JqfDGtXPR1
— Igor Sushko (@igorsushko) March 20, 2025
March 20, 2025 2022 முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் – ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மோசமாக்கியுள்ளது.