ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.
இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58 வயது).ஆஸ்தில்டர் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது இள வயது அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார்.
அப்போது தனது 22 ஆவது வயதில், 16 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
ஆஸ்தில்டர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்நாட்டில் கடும் கண்டனங்களை குவித்தது.
இதனால் ஆஸ்தில்டர் வகித்து வந்த அமைச்சர் பதவிக்கே நெருக்கடி வந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் கிறிஸ்ட்ரூன், நேற்று முன் தினம் இரவு ஆஸ்தில்டரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார்.
இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவுக்கு பின் பேசிய அவர், “அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
இன்று இந்தப் பிரச்சினைகளை நான் நிச்சயமாக வித்தியாசமாகக் கையாண்டிருப்பேன். அப்போது அதற்கான முதிர்ச்சி என்னிடம் இல்லை” என்று கூறினார்.
இதற்கிடையே இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர், “இது மிகவும் தனிப்பட்ட விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த விஷயத்தில் நான் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்\” என்று தெரிவித்தார்.”,