சீனாவின் ஷாங்காய் உணவகம் ஒன்றில் சமைக்கப்பட்ட பாதி கோழிக்கறியை ரூ.5,500 க்கு விற்பனை செய்து வருகிறது. அதற்கு அந்த உணவகம் அதிவிநோதமான காரணம் ஒன்றை வைத்துள்ளது.

ஷாங்காய் நகரிலுள்ள அந்த உணவகத்தில் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் சமைத்த அரை கோழிக் கறியை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதற்கான ரசீதில் அதன் விலை 480 யுவான் (இந்திய ரூபாய் மதிப்பில் 5,500) என இருந்துள்ளது.

ஏன் அவ்வளவு விலை என்றும் அந்தக் கோழி இசை கேட்டு வளர்ந்ததா? தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்து வளர்த்தீர்களா? என்றும் தொழிலதிபர் உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ஆமாம் என்று பதிலளித்த ஊழியர், இக்கோழி சீனாவின் பாரம்பரிய இசை கேட்டு வளர்ந்தது என்றும் நீருக்கு பதிலாக பால் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த கோழி சன்ஃபிளவர் சிக்கன் இனத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

உணவகத்தின் இந்த பதிலை தொழிலதிபர் தனது சமூக ஊடகத்தில் பதிவிடவே அது வைரலாகி வருகிறது. உண்மையில் சன்ஃபிளவர் சிக்கன் வகை கோழிகள் அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு பதிலாக சூரியகாந்தி தண்டின் சாறு மற்றும் இதழ்களை உணவாக கொடுத்து வளர்க்கப்டுகின்றன.

இந்த வகை கோழிகள் பாரம்பரிய இசைக்கு மத்தியில் வளர்க்கப்படுவதாக பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நீருக்கு பதில் பால் கொடுத்து வளர்க்கப்படுவது என்பது உண்மை அல்ல.

எம்பரர் சிக்கன் என்றும் அழைக்கப்படும் இவ்வகை கோழிகள் அதன் தனித்துவமான சுவை காரணமாக ஓட்டல்கள், உணவகங்களில் பரவலாக சமைக்கப்டுகின்றன. சன்ஃபிளவர் சிக்கன் கோழிகள் ஒரு கிலோ 200 யுவான் (ரூ. 2,300), முழு கோழி 1000 யுவான் (ரூ. 11,500) வரை விற்கப்படுகிறது.

Share.
Leave A Reply