14 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருமணமான 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுளந்தாவ தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் புத்தம பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், ஹுளந்தாவ தெற்கில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதற்கிடையில், சிறுவன் வயல்களுக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கு மயானத்தில் வைத்து கடுமையாக பாலியல் வன்கொடுமை உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் தன்னுடைய பெற்றோருக்கு அந்த சிறுவன் தெரிவித்ததை அடுத்து, திருமணமானவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

 

மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த மொனராகலை பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

Share.
Leave A Reply