செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி கடலில் மூழ்கியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் .

எகிப்தின் கரையோரமாக உள்ள பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செங்கடல் பகுதியில் உள்ள குர்ஹடா நகரிற்கு பல அம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.இங்கு அதிகளலு ஜேர்மன் பிரிட்டன் சுற்றுலாப்பயணிகள் செல்வது குறிப்பிடத்தக்கது.

பல நாடுகளை சேர்ந்த 44 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காப்பாற்றப்பட்ட ஒன்பது பேரில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 29 பேரை காயங்களின்றி காப்பாற்ற முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.

செங்கடலில் உள்ள பவளப்பாறைகளை பார்வையிடுவதற்காக இந்த குழுவினர் பயணித்த நீர்மூழ்கி ஹ_ர்கடாவில் உள்ள ஹோட்டலான மரினாவின் முன்னால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

Share.
Leave A Reply