பிரான்ஸ் விமானப்படையின் 2 ஜெட் ரக விமானங்கள் நேற்று (26) பயிற்சியின்போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளது.
கிழக்கு பிரான்சின் ஹாட்-மார்னேவில் உள்ள செயிண்ட்-டிசியர் அருகே நேற்று பயிற்சியின்போது பிரான்ஸ் விமானப்படை ஆல்பா ஜெட் விமானங்கள் இரன்டு நடுவானில் மோதிக்கொண்டன.
மோதலுக்கு முன்னர் இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பினர். அவர்கள் நலமுடன் இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
Two aircraft from a French aerobatic team have collided mid-air, with their wings destroyed before plummeting vertically and exploding.
The pilots ejected and survived, with one being transported to the hospital.#Aircraft #French #collided #BREAKING #BreakingNews pic.twitter.com/AHaCZEyLrf
— Indian Observer (@ag_Journalist) March 26, 2025
விபத்துக்கு பின் விமானங்கள் இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டது. எனினும் பெரிய சேதங்கள் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.