களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் பஸ் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் மோதியே இந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply