ஹைதராபாத்: கதையை நம்பாமல் நடிகைகளின் கவர்ச்சியை மட்டுமே நம்பி இயக்குநர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியான ராபின்ஹுட் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் டிசாஸ்டர் படமாக மாறிவிட்டது.

புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடல் போல மோசமான நடன அசைவுகளை கொண்டு ஸ்ரீலீலா, நிதின் மற்றும் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் படத்தில் இடம்பெற்ற அதீத சர்ப்ரைஸ் பாடல் இன்ஸ்டா ரீல்ஸில் மிகப்பெரியளவில் டிரெண்டானது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான அதீத சர்ப்ரைஸ் பாடலில் குத்தாட்டம் போட்ட கெத்திகா ஷர்மாவை விட கேவலமாக பல இளம் பெண்களும் பாவாடையை இழுத்து ஆடத் தொடங்கினர்.

இந்நிலையில், தற்போது அந்த பாடலின் வீடியோ பாடல் வெளியாகி உள்ள நிலையில், அந்த முக்கியமான ஸ்டெப்பை ஜூம் செய்து பயன்படுத்தும் அளவுக்கு சென்சார் போர்டு போட்ட உத்தரவால் தற்போது சப்புன்னு போய் விட்டது சர்ப்ரைஸ் பாடல் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஃபிளாப் படத்துக்கு 2ம் பாக பில்டப் வேற: தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் 2ம் பாகம் வேறு வரும் என கடைசியில் போடும் போது ரசிகர்கள் எந்தளவுக்கு கடுப்பானார்களோ அதைவிட 2 மடங்கு டென்ஷனாக தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்துக்கும் 2ம் பாகம் வரும் என்றும் அதில் தான் டேவிட் வார்னர் மெயின் வில்லன்.
இந்த படத்தில் தானோஸ் போல தலையை மட்டுமே எட்டிப் பார்த்துவிட்டு சென்றிருக்கிறார் என பில்டப் செய்தனர்.

அதிகபட்சமாக 10 கோடி கூட வசூல் செய்யாமல் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியை ஸ்ரீலீலா மற்றும் நிதின் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் திரைப்படம் தோல்வியை சந்தித்து இருப்பதாக டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் தொடர்ந்து பல தோல்விப் படங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

வீடியோ பாடலில் சென்சார்: கெத்திகா ஷர்மா மல்லிகைப்பூ ஜாக்கெட் உடன் கவர்ச்சி பொங்க வந்து குத்தாட்டம் போடும் போது தனது பாவாடையை இழுத்து அதீத சர்ப்ரைஸ் என பாடும் லிரிக் வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு எல்லாம் எப்படி சென்சார் அனுமதிக்கிறது என்கிற கேள்விகள் கிளம்பிய நிலையில், தற்போது வெளியான வீடியோ பாடலில் அந்த காட்சியை ஜூம் செய்து பாவாடையை கெத்திகா ஷர்மா இழுப்பது தெரியாத அளவுக்கு படக்குழு வைத்துள்ளது.

கவர்ச்சி தூக்கல்: அந்த படுமோசமான ஸ்டெப்ஸ் மட்டும் தான் கட் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், பாடல் முழுக்க கவர்ச்சியாக உடையணிந்து ஐட்டம் டான்சராக கெத்திகா ஷர்மா போட்டுள்ள குத்தாட்டம் ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனியாக மாறும் என தெரிகிறது.

மேலும், கடைசியில் நடிகை ஸ்ரீலீலாவும் தனது பங்குக்கு சில ஸ்டெப்ஸ் போட்டு நிதின் உடன் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வீடியோ பாடலுக்குப் பிறகு மீண்டும் ரீல்ஸ் எல்லாம் டிரெண்டாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Share.
Leave A Reply