அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு பி-2 அதிநவீன போர்விமானங்களை அனுப்பியுள்ளமை தனக்கான செய்தியா என்பதை ஈரானே தீர்மானிக்கவேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா டியாகோகார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு ஆறு பி-2 போர்விமானங்களை மார்ச்மாதம் அனுப்பியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டருக்கு அனுப்பியுள்ளனர்.
யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஈரானிற்குஎதிரான அமெரிக்காவின் அழுத்தங்களிற்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க விமானப்படையிடம் 20 பி-2 போர்விமானங்களே உள்ளன அவற்றை அமெரிக்கா மிகவும் முக்கியமான தாக்குதல்களிற்கு மாத்திரம் பயன்படுத்துகின்றது.
அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்த விமானங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளையும் அணுவாயுதங்களையும் கொண்டுசெல்லும் திறன்வாய்ந்தவை,மத்திய கிழக்கில் செயற்படுவதற்கு உகந்தவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரானிற்கு செய்தியை தெரிவிப்பதற்காகவா இந்த விமானங்கள் டியாகோகார்சியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு ஈரானே அதனை தீர்மானிக்கட்டும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது மிகப்பெரிய சொத்து இது அனைவருக்கும் ஒரு செய்தியை தெரிவிக்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்ப் தெளிவாக உள்ளார்,ஈரானிடம் அணுக்குண்டு இருக்ககூடாது,அதனை அமைதிவழிமுறை மூலம் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயல்கின்றார் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.